Published:Updated:

ரயில் பயண அடையாள அட்டை: விதிமுறை தளர்வு!

 ரயில் பயண அடையாள அட்டை:  விதிமுறை தளர்வு!
ரயில் பயண அடையாள அட்டை: விதிமுறை தளர்வு!
 ரயில் பயண அடையாள அட்டை:  விதிமுறை தளர்வு!

புதுடெல்லி: இரண்டாம் வகுப்பு முன்பதிவு ரயில் பயணிகளுக்கான கட்டாய அடையாள  அட்டை விதிமுறையை தளர்த்தி உள்ள ரயில்வே நிர்வாகம், குடும்ப அட்டை மற்றும்  வங்கி பாஸ் புத்தகம் நகல் போதுமானது என்று தெரிவித்துள்ளது.

ரயில் பயணத்தில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணிகள் உள்ளிட்ட அனைத்து வகுப்பு முன்பதிவு ரயில் பயணிகளும்,  கட்டாயம் அசல் அடையாள அட்டை வைத்திருக்க  வேண்டும் என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு பயணிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.குடும்ப அட்டை போன்ற  ஆவணங்கள் மிக முக்கியமானவை என்பதால், அவற்றை பயணத்தின் போது எடுத்த  சென்றால் தொலைந்து விட வாய்ப்பு உள்ளதாகவும்,மீண்டும் அதனை அரசு  அலுவலகங்களில் விண்ணப்பித்து பெறுவது கடினமானது என்றும் பயணிகள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.

##~~##
இந்நிலையில், புகைப்படத்துடன் கூடிய குடும்ப அட்டை அல்லது தேசிய  மையமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பாஸ் புத்தகத்தின் நகலை  அடையாள அட்டை சான்றாக எடுத்துச் செல்லலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது,
இதர அடையாள அட்டைகளை பொறுத்த வரை அசல் ஆவணங்கள் அவசியம் என  ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் இந்த தளர்த்தப்பட்ட விதிமுறைகள் இரண்டாம் வகுப்பு மற்றும் இருக்கை  பயணங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இணையதள முன்பதிவு, தட்கல்  முன்பதிவு, உயர் வகுப்பு பயணத்துக்கு பொருந்தாது என்றும் ரயில்வே நிர்வாகம்  தெரிவித்துள்ளது.