Published:Updated:

இடமாற்றம் செய்யப்படும் 120 ஆண்டுகள் பழமையான டென்மார்க் கலங்கரை விளக்கம்!

1899 ஆம் ஆண்டில் கடற்கரையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் 2000-களில், அந்த தூரம் வெறும் ஆறு மீட்டராக சுருங்கியது.

ரப்ஜெர்க் நுயுடு கலங்கரை விளக்கம்
ரப்ஜெர்க் நுயுடு கலங்கரை விளக்கம்

120 ஆண்டுகள் பழமையான டென்மார்க்கின் வரலாற்று சிறப்புமிக்க ரப்ஜெர்க் நுயுடு(Rubjerg knude) கலங்கரை விளக்கம் ஒரு குன்றின் விளிம்பில் இருந்து மாற்றம் செய்யப்பட்டது. எக்வெடெரோடிங் தீவில் ஜுட்லாண்டில் (jutland) அமைந்திருந்த கலங்கரை விளக்கம் கடல்நீர் அரிப்பு காரணமாக வடகடலில் இருந்து 263 அடி தூரத்திற்கு நகர்த்தும் முயற்சியில் தண்டவாளங்களில் பொருத்தப்பட்ட பெரிய தள்ளுவண்டியில் வைக்கப்பட்டது.

ரப்ஜெர்க் நுயுடு கலங்கரை விளக்கம்
ரப்ஜெர்க் நுயுடு கலங்கரை விளக்கம்

வடக்கு டென்மார்க்கில் உள்ள ரப்ஜெர்க் நுயுடு கலங்கரை விளக்கம் 1900 இல் இருந்து செயல்பட தொடங்கிய இந்த கலங்கரை விளக்கம் அரை நூற்றாண்டுக்கு மேலாக இயங்கிவந்தது. கடல் மட்டத்திலிருந்து 60 மீட்டர் உயரத்தில் உள்ள லான்ஸ்ட்ரப் கிளின்ட் (குன்றின்) உச்சியில் ரம்மியமாக காட்சி அளித்தாலும் கடல் அரிப்பு இந்தப் பகுதியின் பிரதான பிரச்னையாக இருந்தது. இதனால் 1899 ஆம் ஆண்டில் கடற்கரையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் 2000-களில், அந்த தூரம் வெறும் ஆறு மீட்டராக சுருங்கியது.

இதனை அடுத்து இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டு 23 மீட்டர் தூரம் தள்ளி கலங்கரை விளக்கத்தை நகர்த்த திட்டமிடப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு எட்டு மீட்டர் (26 அடி) வேகத்தில் 10 மணி நேரம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 1000 டன் எடையுள்ள கலங்கரை விளக்கத்தை நகர்த்துவது ஆபத்தாக இருப்பினும் இதற்கு மாற்றுமுறை முழு கட்டமைப்பை நீக்குவதே என்று உள்ளூர் மேயர் ஆர்னே போயல்ட் கூறினார். 1963இல் கலங்கரை விளக்கம் செயல்பாட்டை நிறுத்திய போதிலும், அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. மணல் மாற்றம் காரணமாக அருகிலுள்ள கட்டடங்கள் புதைக்கப்பட்டுவிட்டன. இன்றும் 2.5 லட்சம் மக்கள் ஆண்டுதோறும் டென்மார்க் கலங்கரை விளக்கங்களுக்கு வருகின்றனர்.

ரப்ஜெர்க் நுயுடு கலங்கரை விளக்கம்
ரப்ஜெர்க் நுயுடு கலங்கரை விளக்கம்

இன்றும் இத்தகைய மக்கள் வருகைக்கும், கலங்கரை விளக்கம் இடம் மாற்றும் முயற்சிக்கும் முக்கிய காரணமாக இருப்பது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள இரண்டு சிறிய நகரங்களான லுக்கென் மற்றும் லான்ஸ்ட்ரப். இவ்விருநகரங்கள் பழைய மீன்பிடி மையங்களாக இருக்கின்றன. அங்கு காபி கடைகள் மற்றும் காட்சியகங்கள் பிரசித்திபெற்றவை. லுக்கன் பரந்த கடற்கரை, சாக்லேட் தயாரிப்புகளுக்கு புகழ் பெற்றது. அதே நேரத்தில் லோன்ஸ்ட்ராப் அதன் காட்டு இயல்புக்கு பெயர் பெற்றது. அருகிலுள்ள விமான நிலையமான ஆல்போர்க், கோபன்ஹேகனில் இருந்து ஒரு மணி நேர பயணமாகும். இரண்டு பெருங்கடல்கள் ஸ்காகெராக் மற்றும் கட்டெகட் சேருமிடமாக இருக்கிறது.