Published:Updated:

ரயில் டிக்கெட் விற்பனையைத் தனியாரிடம் கொடுப்பதா? - கொந்தளிக்கும் திருவிடைமருதூர் மக்கள்

ரயில் டிக்கெட் விற்பனையைத் தனியாரிடம் கொடுப்பதா? - கொந்தளிக்கும் திருவிடைமருதூர் மக்கள்
ரயில் டிக்கெட் விற்பனையைத் தனியாரிடம் கொடுப்பதா? - கொந்தளிக்கும் திருவிடைமருதூர் மக்கள்

தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் ரயில் நிலைய அதிகாரிகள், டிக்கெட் விற்பனையையும் பராமரிப்பு பணிகளையும் தனியார் நிறுவனங்களிடம் வழங்குவதற்கு முயல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மற்றும் இதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இங்குள்ள ரயில் நிலையத்தின் மூலம் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த ரயில் நிலையத்தின் அதிகாரிகள், டிக்கெட் விற்பனையை தனியாருக்கு கொடுக்க முயல்வதாகவும் இதனால் தாங்கள் பல வகைகளிலும் பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும் என அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

மேலும், ரயில் நிலைய பராமரிப்புப் பணிகளையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகட் தெரிவிக்கிறார்கள். இந்த இரு நடவடிக்கைகளையும் திருவிடைமருதூர் ரயில் நிலைய நிர்வாகம் கைவிட வேண்டும். இந்தப் பணிகளை ரயிலே நிர்வாகவே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இந்த ரயில்நிலையத்தை மேம்படுத்தும் விதமாகக் கணினி முன்பதிவு மையம் அமைக்க வேண்டும். விரைவு ரயில்களை இங்கு நிறுத்திச் செல்ல வெண்டும் எனவும் இப்பகுதி மக்கள் வலியுறுத்துகிறார்கள். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே போராட்டம் நடத்தியுள்ளோம். ஆனாலும், ரயில்வே உயரதிகாரிகள் எங்கள் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை. இதே நிலை தீடித்தால் தொடர் போராட்டங்களை நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்கிறார்கள்.