Published:Updated:

வற்றிய குளம்... உடைந்து கிடக்கும் படகுகள்... புதுப்பொலிவு பெறுமா பூங்கா?

வற்றிய குளம்... உடைந்து கிடக்கும் படகுகள்... புதுப்பொலிவு பெறுமா பூங்கா?

வற்றிய குளம்... உடைந்து கிடக்கும் படகுகள்... புதுப்பொலிவு பெறுமா பூங்கா?

வற்றிய குளம்... உடைந்து கிடக்கும் படகுகள்... புதுப்பொலிவு பெறுமா பூங்கா?

வற்றிய குளம்... உடைந்து கிடக்கும் படகுகள்... புதுப்பொலிவு பெறுமா பூங்கா?

Published:Updated:
வற்றிய குளம்... உடைந்து கிடக்கும் படகுகள்... புதுப்பொலிவு பெறுமா பூங்கா?

"எங்கள்  நகரின் தனித்துவமான அடையாளமாக இருக்கும் புகழ்பெற்ற புதுக்குளம் பூங்காவை மராமத்து செய்து புதிய பொலிவை ஏற்படுத்தித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை நகர மக்கள் முன்வைத்துள்ளனர். 


 

புதுக்கோட்டை நகரில் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் இருப்பது புதுக்குளம் பூங்கா. நகர மக்களின் ஒரே பொழுது போக்கிடமாகவும் இருப்பதும் இதுதான். கொடைக்கானலில் உள்ள ஏரியில் எப்படிப் படகுகுழாம், சிறுவர் விளையாட்டுத் தளம், நடைப்பயிற்சி செல்வதற்கு இடம் போன்றவை இருக்கிறதோ... அதேபோன்ற கட்டமைப்புகள் கொண்டதாக இந்தப் பூங்காவும் இருந்தது. தினமும் காலையிலும் மாலையிலும் இந்தப் பூங்காவில் உள்ளூர் மக்கள் ஆர்வமுடன் வந்து குவிவார்கள். 'ஜேஜே'வென்று அந்த ஏரியாவே மக்கள் வெள்ளத்தால் திணறும். இதெல்லாம் இப்போது பழைய கதையாகிவிட்டது. குளம் வற்றி, படகுகள் உடைந்து கிடக்கின்றன. நடைபாதையில் இளைப்பாறுவதற்கென்று அமைக்கப்பட்டிருந்த நிழற்குடையுடன்கூடிய இடம் எலும்புக்கூடாகக் காட்சி தருகிறது. இருபுறமும் அடர்ந்த மரங்களுடன் காட்சி தரும் நடைப்பயிற்சி தளம் ஒரு பகுதியில் படுசேதமுடன் காட்சி தருகிறது. 

அதுபோல், இரவு நேரத்தில் ஒருசில இடத்தில் மட்டுமே விளக்குகள் எரிகிறது. மற்ற இடங்களில் இருள் கவ்விக்கிடக்கிறது. இதுபற்றி அங்கு வந்திருந்த சிலரிடம் பேசினோம். சாந்தநாதபுரத்தைச் சேர்ந்த சச்சிதானந்தம் என்பவர், "இந்தக் குளத்துக்கென்று தனி வரலாறு உண்டு. புதுக்கோட்டை நகரில் கட்டப்பட்டிருக்கும் அத்தனை அரசு அலுவலகக் கட்டடங்களுமே இந்தப் புதுக்குளத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு செங்கல் செய்து கட்டப்பட்டதுதான். இந்தக் குளத்துக்கென்று வரத்துக் கால்வாய்கள் தனியாக வெட்டப்பட்டன. மழைக்காலங்களில் வரும் தண்ணீர் அந்தக் கால்வாய் மூலமாக இந்தக் குளத்தை நிரம்பும். புதுக்கோட்டை நகருக்குத் தேவையான தண்ணீர் தேவையை இந்தக் குளம்தான் நிறைவேற்றித் தந்தது. 

நன்னீர் குளமாக இருந்த இந்தக் குளத்தைப் பாதுகாப்பதற்கென்றே தனியாகக் காவலாளிகள் இரவு பகலும் இருந்தார்கள். எப்போது ஆக்கிரமிப்புகளால் வரத்துக் கால்வாய்கள் காணாமல்போனதோ அப்போதே புதுக்குளமும் மெள்ள மெள்ள சாகத் தொடங்கிவிட்டது. இங்குள்ளது மிக அருமையான நடைபாதை. மூன்று வருடங்களுக்கு முன்பு வழிநெடுக பல்பு ஒளிர்ந்து அவ்வளவு அருமையாக இருக்கும். இன்றைக்குப் பூங்கா நுழைவுவாயிலில் மட்டுமே பல்பு எரிகிறது. மற்ற இடங்களில் இருண்டு கிடக்கிறது. அந்தப் பகுதிகளில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒன்றுகூடி குடிப்பதும் கஞ்சா இழுப்பதுமான காரியங்களைச் செய்கிறார்கள். அந்த வழியாக வாக்கிங் செல்லவே பெண்கள் பயப்படுகிறார்கள். இதையெல்லாம் சரி செய்து பழையபடி இந்தப் பூங்கா மாற வேண்டும் என்பதுதான் புதுக்கோட்டை நகர மக்களின் ஆசை" என்றார். 

விடுதலை குமரன் என்பவர், "இந்தப் பூங்காவை பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். நிதி இல்லை என்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடந்து இந்தப் பூங்கா அமைந்துள்ள வார்டுக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர் வரும்போதுதான் இந்தப் பூங்கா விசயத்தைக் கையிலெடுக்க முடியும் என்ற நிலைமைதான் இப்போது இருக்கிறது. எப்போது தேர்தல் வருமோ எப்போது இதற்கு விடிவு வருமோ தெரியவில்லை" என்றார்.