Published:Updated:

காவிரி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல்!

காவிரி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல்!
காவிரி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல்!
காவிரி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல்!

புதுடெல்லி: காவிரியில் 12 டி.எம்.சி நீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்த  வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று புதிய மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம், குழுவின் தலைவர்  துருவ் விஜய் சிங் தலைமையில் டெல்லியில் கடந்த 10 ஆம் தேதி நடந்தது.  அப்போது,டெல்டா பகுதிகளில் கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்றுவதற்கு 18  டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில்  கேட்டுக்கொள்ளப்பட்டது.

##~~##
ஆனால், கர்நாடக அணைகளில் 16 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதாகவும்,  அது தங்கள் தேவைக்கே போதுமானதல்ல என்றும் கர்நாடகம் வாதிட்டது. இதனை  பரிசீலித்த கண்காணிப்பு குழு தலைவர், துருவ் விஜயசிங், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து  விட உத்தரவிட முடியாது என்று அறிவித்தார்.
இதனால், தமிழக அரசு இன்று புதிய மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்  செய்தது. அந்த மனுவில், ‘தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட முடியாது என்று  கண்காணிப்பு குழு கூறியுள்ளது. எனினும், கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்ற  வேண்டும் என்றால் உடனடியாக 12 டி.எம்.சி. தண்ணீர் தேவை. அந்த நீரை உடனடியாக  திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.