இந்தியாவின் முதல் பெண் மருத்துவருக்காக டூடில் வெளியிட்ட கூகுள்!

இந்தியாவின் முதல் பெண் மருத்துவருக்காக டூடில் வெளியிட்ட கூகுள்!

கூகுள் நிறுவனம் இன்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்தி கோபால் ஜோஷியைக் கெளரவிக்கும் விதமாக டூடில் வெளியிட்டுள்ளது. 

கூகிள் டூடில்

ஆனந்தி கோபால் ஜோஷி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். இன்று அவருக்கு 153 -வது பிறந்தநாள். இந்த நாளில் அவரை நினைவுகூரும் விதமாக கூகுள் அவருக்குச் சிறப்பு டூடில் வெளியிட்டுள்ளது. இதனை பெங்களூரைச் சேர்ந்த காஷ்மிரா சரோதி என்பவர் வடிவமைத்துள்ளார். 

1865 -ம் ஆண்டு மார்ச் மாதம் 31 -ம் தேதி பிறந்த ஆனந்திக்கு 9 வயதில் திருமணம் நடந்தது. அவரைத் திருமணம் செய்துகொண்டவர், திருமணத்துக்குப் பின்னரும், மனைவியின் படிப்பை தொடர ஊக்கப்படுத்தினார். அதன் காரணமாக பெனிசில்வேனியாவில் உள்ள பெண்கள் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று 19 வயதில் நாடு திரும்பியுள்ளார். 

இந்தியாவிலும் பெண்களுக்கென்று தனி மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அவரது பெரும் கனவு. 19 -வது நூற்றாண்டிலே புரட்சிப் பெண்ணாக வாழ்ந்த இவர் தனது 21 -வது வயதில் காசநோயால் காலமானார். இன்றைய பெண்கள் கல்விக்கு ஆனந்தி தொடக்க புள்ளியாக இருந்தார் என கூகுளும் அவரை நினைவு கூர்ந்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!