Published:Updated:

சென்னையில் கள்ள நோட்டு கும்பல் கைது!

சென்னையில் கள்ள நோட்டு கும்பல் கைது!
சென்னையில் கள்ள நோட்டு கும்பல் கைது!
சென்னையில் கள்ள நோட்டு கும்பல் கைது!

சென்னை: சென்னை கொடுங்கையூரில் கள்ள நோட்டு கும்பலை போலீசார் கைது  செய்தனர்.

கொடுங்கையூரில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக கூடுதல் துணை கமிஷனர்  ஜெயக்குமாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸாருடன்  ஜெயக்குமார், மூலக்கடை சோதனைச் சாவடியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது வேகமாக வந்த கார் ஒன்று நிற்காமல் சென்றது.போலீசார் விரட்டி சென்று  காரை மடக்கியதில் அதில் இருந்த மூவர் தப்பி ஓடிவிட்டனர். இஸ்மாயில் என்பவர்  மட்டும் சிக்கினார்.

காரில் சோதனையிட்டதில் இரண்டு லட்சம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் பிடிபட்டன.  இஸ்மாயில் கொடுத்த தகவலின்படி கொடுங்கையூரில் சிவசங்கரன் என்பவர் வீட்டை  போலீசார் சோதனையிட்டனர்.

##~~##
அப்போது அந்த வீட்டில் தங்கி இருந்த ரபீக் என்பவர் ஜன்னல் வழியாக குதித்து தப்பி  ஓடிவிட்டார். வீட்டில் சோதனையிட்டதில் ஐந்து லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் கள்ள  நோட்டுக்கள் சிக்கின.
இவை அனைத்தும் ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் ஆகும். தொடர்ந்து  மண்ணடியில் இருக்கும் ஒருவரது வீட்டை சோதனை செய்து, அங்கும் இரண்டு பேரை  போலீசார் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுக்கள் வட மாநிலங்களில் இருந்து தங்களுக்கு வந்ததாக  கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், கள்ளநோட்டுக்களை புழக்கத்தில்  விட்டதில் பாகிஸ்தானின் சதி இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து  வருகிறார்கள்.