பார்த்து வாங்குங்க "பதப்படுத்தப்பட்ட உணவுகளை"!!! - Exclusive Deal

ஓட்டலிலும் கே​ஃ​படீரியாவிலும் தினமும் உணவு உண்ணுபவர்களைக் கேட்டுப் பாருங்கள், 'வீட்டு சமையலை' எவ்வளவு மிஸ் செய்கிறார்கள் என்று! ஒருநாள் இருநாள் சுவைக்காக இங்கு சென்று உணவருந்தலாம், ஆனால் ஆரோக்கியம்? ஓட்டலில் எவ்வளவுதான் சுவையான உணவு கிடைத்தாலும், அதில் சேர்க்கப்படும் பொருள்களின் தரம் - சுத்தமான எண்ணெய், ஃப்ரெஷ்ஷான காய்கறிகளைப்  பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறிதான்! 'அப்போ வேலைக்கு அவசரமா கெளம்புறவங்க என்ன பண்ணுவாங்க? ஓட்டலுக்கு போகாம, சாதத்துல போட்டு சாப்புடுற இன்ஸ்டன்ட் மிக்ஸ் எதாவது வாங்கிக்க வேண்டியதுதான்' என்று கூறுகிறீர்களா? உங்களுக்கு சில விஷயத்தை எடுத்துச் சொல்லணும் அண்ணன்ஸ் & அக்காஸ்...

பதப்படுத்தி உண்ணும் உணவுகளாக உப்புக்கண்டம், கருவாடு, ஊறுகாய் போன்ற உணவு வகைகளை நாம் காலந்தோறும் உண்டுவருகிறோம். இந்த மூன்று உணவு வகைகளிலும் பொதுவாக இருப்பதென்ன? அதுதான் உப்பு. காயவைப்பதால், இவற்றில் இருக்கும் நீர் போக்கப்படுகிறது; உப்புத் தடவுவதால், காயும் நேரம் வெகுவாக குறைகிறது, மேலும் நுண் கிருமிகள் அண்டுவதை உப்பு தடுக்கிறது. இதனால், இவ்வுணவுப் பொருள்கள் அதிகநாள் கெடாமல் இருக்கின்றன.

இது வீட்டில் நாம் உபயோகிக்கும் பதப்படுத்தும் முறை. இப்படிப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை பீங்கான் ஜாடிகளில் இறுக்கமாக மூடி வைப்போம், இது காற்று உள்நுழைவதைத் தடுப்பதால், மேலும் பண்டங்கள் சில வாரங்கள் வரைக் கெட்டுப்போகாமல் இருக்க உதவுகிறது. இதற்கு மாறாக, கடைகளில் சல்லீசாக கிடைக்கும் இன்ஸ்டன்ட்/உடனடி குழம்பு வகைகள், துவையல்கள், மற்றும் சோற்றில் பிசைந்துண்ணும் புளிசாத, எலுமிச்சை சாத, தக்காளி சாதக் கலவைகள் பல மாதங்கள் வரைக் கெடாமல் இருக்கும் வண்ணம் கிடைக்கின்றன. நம் வீட்டுப் புளிக்குழம்​பு​ இரண்டு நாள்களிலேயே கெட்டுவிடுமே, பிறகெப்படி பாட்டில்/பாக்கெட் வகை உடனடி உணவுகள் நீண்ட நாட்கள் வரை​த்​ தாக்குப்பிடிக்கின்றன?

விடை: அதிக உப்பு, அதிக எண்ணெய், செயற்கை பதனப் பொருள்கள் மற்றும் இரசாயனங்கள் தானுங்க. பதப்படுத்தப்பட்ட உணவில் ​'​கேல்ஷியம் ப்ரோப்பியாநேட்​'​, ​'சோடியம் நைட்ரேட்​'​, ​'​நைட்ரைட்​'​ & ​'​பென்ஸாயேட்​'​, ​'​ஹை பிரக்ட்டோஸ் கார்ன் சிரப்​'​, பலவகை ​'​சல்ஃபைடுகள்​'​ மற்றும் செயற்கை நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. சுவையை அதிகரிக்கவும், அதிகத் தேவை காரணமாகவும் சில நாட்களில் பாழாகக் கூடிய உணவுகளைப் பல மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கச் செய்ய இவ்வகை செயற்கைப் பொருள்களை சேர்க்கவேண்டியுள்ளது. மேலும், மொத்தமாக இயந்திரங்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் பாட்டில்களில் கிடைக்கும் பதார்த்தங்களின் தரம் சமரசம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

பிறகு எவ்வாறு பதப்படுத்தப்பட்ட பாட்டில் உணவுகளை வாங்குவது? புளிக் காய்ச்சல், வத்தக் குழம்பு போன்ற இன்ஸ்டன்ட் உணவுகளை வாங்கும்போது காலாவதியாகும் தேதியைப் பார்த்து வாங்குதல் முக்கியம். ஒரு வாரம் முதல் இரண்டு வாரங்கள் வரை இவ்வுணவுகளை இயற்கையாக பதப்படுத்த முடியும். இதற்குமேல் மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும் உணவு வகைகளை கொஞ்சம் யோசித்து வாங்குவதே நல்லது, இவற்​றில்​ தீங்கு விளைவிக்கக்கூடிய இராசயானப் பொருள்கள் இருக்க நிச்சயம் வாய்ப்புண்டு!

​60​ வருட​ங்களுக்கும் மேலாக​ செயல்பட்டுவருகிறது ஸ்ரீ கணேஷ்ராம்'ஸ் "777" நிறுவனம். புகழ்பெற்ற இந்த நிறுவனத்துக்கு ஒரு சிறப்பம்சமுண்டு, அதுதான் வீட்டு சமையல் போலவே தயாரிக்கப்படும் உணவுகள். இவர்களின் தயாரிப்புகளில் சந்தையில் கிடைக்கும் பிற உணவு வகைகளைவிட உப்பு மற்றும் அமிலத்தன்மை குறைந்து காணப்படுகிறது. மேலும், இயற்கையான பதனப் பொருள்கள் மட்டுமே பயன்படுத்துவதாலும் செயற்கையான நறுமணப்பொருள்கள் மற்றும் நிறங்களை உபயோகிப்பதில்லை என்பதாலும் ஆரோக்கியத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை​. "திடீர்​®" எனும் பிராண்ட் மூலம் பலவகை குழம்புகள்,​ ​உடனடி பிசையல் தொக்குகள், ரசம் மற்றும் சட்னி வகைகள் என அமர்க்களப்படுத்துகிறது "777". பல மளிகைக் கடைகளில் கிடைக்கும் இத்தயாரிப்புகளை, நங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள இவர்களின் பிரத்தியேக 777 ​டிவைன் ஸ்டோரரில் நேரடியாக வாங்கலாம்.

விகடன் மூலம்  ஆன்லைனில் வாங்குவோருக்கு 777 சிறப்பு சலுகையாக 20% தள்ளுபடி வழங்குகிறது. சலுகையைப் பெற இங்கே கிளிக்கவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!