மார்வெல் ரசிகர்களே... அவெஞ்சர்ஸ் பாதுகாக்கும் ’டெசராக்ட்’ பற்றி தெரியுமா?

மார்வெல் ரசிகர்களுக்கு இந்த வார்த்தையைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூடத் தெரியும். அதை அபகரிக்க வரும் வேற்று கிரக மனிதர்களிடம் இருந்து உலக மக்களைக் காப்பதற்கு அவெஞ்சர்ஸ் குழு பாவம் படாதபாடு படுகிறது.

மார்வெல் ரசிகர்களே... அவெஞ்சர்ஸ் பாதுகாக்கும் ’டெசராக்ட்’ பற்றி தெரியுமா?

மார்வெல் டெசராக்ட்

மார்வெல் ரசிகர்களுக்கு இந்த வார்த்தையைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூடத் தெரியும். அதைப் பாதுகாப்பதற்கும் அதனால் ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்கும், அதை அபகரிக்க வரும் வேற்று கிரக மனிதர்களிடம் இருந்து உலக மக்களைக் காப்பதற்கும், அவெஞ்சர்ஸ் குழு பாவம் படாதபாடு படுகிறது. இதுவரையிலும் அது ஒரு கற்பனையான பொருள் என்று தான் அனைவரும் நினைத்திருப்போம். ஆனால் டெசராக்ட் உண்மையில் இருக்கும் ஒன்று.

பயந்து விடாதீர்கள். அவெஞ்சர்ஸ் படத்தில் வருவதுபோல் அதை வைத்து உலகை அழிக்கும் ஆயுதத்தை எல்லாம் தயாரிக்க முடியாது. ஏனென்றால் அது பொருள் அல்ல. அது ஒரு கணக்கு சூத்திரம் மட்டுமே. ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம், இதைக் கற்பனை செய்வது கொஞ்சம் கடினம் தான். ஏனென்றால் முப்பரிமாணம் வரையிலுமே விரிந்திருக்கும் மனிதனின் அடிப்படைக் கற்பனை வளம், நான்கு பரிமாணம் எப்படி இருக்கும் என்பதைச் சிந்தித்து மனதளவில் வடிவமைத்துப் பார்ப்பது கஷ்டம் தான். இருந்தாலும் பாதகமில்லை, அதைப் பற்றிக் கூறுகிறேன் சிறிது முயற்சி செய்து பாருங்கள்.

முதலில் இரண்டு பரிமாணங்களைப் பார்த்திருப்போம். ஒரு காகிதத்தை எடுத்து சதுரத்தை வரையுங்கள். அதில் நான்கு புள்ளிகள் இருக்கும். அந்த நான்கு புள்ளிகளிலும் இருந்து இரண்டு கோடுகள் பிரியும்.

சதுரம்


அதாவது இரண்டு பரிமாணத்தில் மேலே, கீழே மற்றும் இடது, வலதாகத் தான் நம்மால் செல்ல முடியும்.

அதுவே மூன்று பரிமாணங்களில் நீளம், அகலம் மட்டுமின்றி நம்மால் ஆழத்தையும் அளக்க முடியும். இப்போது வரைந்த சதுரத்தில் இருந்து பின் பக்கமாக கோடுகளை நீட்ட வேண்டும். ஆக, ஒவ்வொரு புள்ளியில் இருந்தும் மூன்று கோடுகள் பிரியும். இது தான் மூன்று பரிமாணங்கள். இப்படித் தானே நாம் மாதிரிகளை வரைந்து பொருட்களை அதன்படி தயாரிக்கிறோம். ஆனால் இன்னொரு பரிமாணமும் உள்ளது. அது தான் நான்காவது பரிமாணம், அதைத் தான் டெசராக்ட் என்பார்கள்.

cube

 

அதில் நீளம், அகலம், ஆழம் மட்டுமின்றி அப்பொருளின் உட்புறத்தையும் அளந்து செல்லும். ஆக, இதில் ஒவ்வொரு புள்ளியில் இருந்தும் நான்கு கோடுகள் நீளும். உதாரணமாக ஒரு பொருளின் முன்புறத்தை அளக்க நாம் அதன் நீளம் மற்றும் அகலத்தை அளக்கிறோம், அதுவே பின்புறத்திற்கு அது பின்னால் எவ்வளவு நீண்டுகொண்டே போகிறது என்ற ஆழத்தை அளக்கிறோம். ஆனால், அதற்கு உள்ளும் ஒரு பகுதி இருக்கலாம் அல்லவா! அதற்குத் தான் இந்த டெசராக்ட். இதில் மேலே குறிப்பிட்ட கனசதுரத்திற்கு உள்ளே மற்றொரு கனசதுரம் வரைந்து அதை வெளிப்பகுதியோடு கோடுகளால் தொடர்பு படுத்தவும். இப்போது எத்தனை கனசதுரம் இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். மொத்தம் எட்டு கனசதுரம் வரவேண்டும். அதுவே சரியான டெசராக்ட்.

டெசராக்ட்

சதுரத்தில் இருந்து ஆறு கோடுகளைப் பிரிக்கலாம். கனசதுரத்தில் இருந்து எட்டு கனசதுரங்களைப் பிரிக்கலாம். குழம்புகிறதா! கணிதவியல் என்பதே சற்றுக் குழப்பமானது தான், அதுவும் அதில் இருக்கும் வடிவ இயல் (Geometry) இன்னும் சிக்கலானது. ஆனால் அதைப் புரிந்துகொண்டால் அதைவிட சுவாரஸ்யமான பகுதி வேறெதுவும் இருக்காது. இன்னும் தெளிவாகச் சொல்கிறேன். ஒரு பொருளைத் தயாரிக்கும்போது என்ன செய்வோம்? உதாரணமாக ஒரு புத்தகம் தயாரிக்கும் போது அதன் பக்கங்களை அச்சடித்து அனைத்து பக்கங்களையும் சேர்ப்போம். அவ்வாறு எட்டு கனசதுரங்களையும் வரைந்து அனைத்தையும் சேர்த்து ஒரு டெசராக்ட் ஆக்கலாமா?

 

 

via GIPHY

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!