ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? | what next after higher secondary

வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (05/04/2018)

கடைசி தொடர்பு:18:56 (05/04/2018)

ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?

ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?

மார்ச் 1-ம் தேதி ஆரம்பித்த ப்ளஸ் டூ தேர்வு ஏப்ரல் மாதம் 6-ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. தேர்வுக்குப் பின்பு, என்ன செய்யலாம் என்று, தேர்வு எழுதிய மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் தீவிரமாகச் சிந்தித்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் நிகழ்வான ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு, என்ன செய்ய வேண்டும் என்பதில், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும் வகையில் ப்ளஸ் டூ-வுக்குப் பின்பு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பது பற்றி இங்கே பார்ப்போம். 

கல்லூரிப் படிப்பை ஒரு முறைதான் படிக்கப்போகிறோம். அதனால், சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும். சிறந்த கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும்போது உங்களின் வெற்றி வாய்ப்பும் கூடும். 

கடன் வாங்கி தரமற்ற கல்வி பெறுவதை தவிர்க்க வேண்டும். இது குடும்ப மன அமைதிக்கும் பொருளாதாரத்துக்கும் பெரிய அளவில் உதவும். பெற்றோர்கள் தங்களுடைய பொருளாதாரத் திறனை மீறி கல்லூரியைத் தேர்வு செய்யக் கூடாது. ப்ளஸ் டூ முடித்தவர்கள் என்னென்ன படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்று பார்க்கலாம்.

ப்ளஸ் டூ முடித்தவுடன் பொறியியல், மருத்துவம், பாராமெடிக்கல், சட்டம், மேலாண்மை, ஃபேஷன், ஆர்கிடெக்சர், ஹிமானிட்டிக்ஸ் அண்ட் சோசியல் சயின்ஸ், இதழியல், திரைப்படத் துறைக்குச் செல்வதற்கு என ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

பொறியியல் படிக்க ஆர்வம் உள்ளவர்கள் ஐ.ஐ.டி நடத்தும் JEE மெயின் தேர்வை எழுதுவார்கள். இந்தத் தேர்வு எழுதுபவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேர விண்ணப்பிக்கலாம். 

இந்தியாவில் 160 பொறியியல் பாடப்பிரிவுகளும், தமிழகத்தில் 80-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளும் உள்ளன. நல்ல கல்வி நிறுவனத்தில் தேர்ந்தெடுத்து எந்தப் பிரிவைப் படித்தாலும் வேலை வாய்ப்பைப் பெற முடியும் . 

இந்த ஆண்டு 44 பொறியியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் படித்த ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. எனவே நாம் படிக்க இருக்கும் கல்லூரிகளை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். கல்லூரியைத் தவறாகத் தேர்ந்தெடுத்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும். 

தேர்வு சமயத்திலும், தேர்வுக்குப் பின்பும் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு பற்றிய சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 14417 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 10-வது படிப்பவர்கள் அடுத்து எந்த குரூப்பை எடுத்துப் படிக்கலாம் என்றும், 12-வது படிக்கும் மாணவர்கள் உயர்கல்வியில் என்ன படித்தால் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கேட்பதற்கும் உளவியல் ஆலோசனைகளுடன் உரிய பதில் அளிக்கப்படுகிறது.

 சுகாதார இயக்ககம் சார்பில், 24 நான்கு மணி நேரமும் செயல்பட 104 என்ற கட்டணமில்லா உதவித் தொலைப்பேசி சேவையும் செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவையின் கீழ், தேர்வையும் தேர்வு முடிவையும் எவ்வாறு எதிர்கொள்வது குறித்து மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. 

  •  மாணவர்களின் விருப்பம், ஆர்வம் உள்ள பிரிவு, மற்றும் வாய்ப்புகள் நிறைந்துள்ள பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். விருப்பமான துறைகளைத் தேர்ந்தெடுத்தால் அதிகளவில் வெற்றிபெறலாம். பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலால் எந்தப் படிப்பையும் தேர்ந்தெடுக்காதீர்கள். 
  • ப்ளஸ் டூ-வில் வணிகவியல், பொருளியல், வரலாறு பாடங்கள் எடுத்து மூன்றாவது குரூப் படித்தவர்கள், வணிகவியல் சார்ந்த படிப்புகளைப் படிக்கலாம். 
  • இதில், தொழில்சார் படிப்புகளாக CA, ICWA, கம்பெனி செக்ரட்டரிஷிப், சட்டப்படிப்பு போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம். இதற்கு அடுத்து, பி.காம், பி.பி.ஏ., பி.பி.எம்., எக்னாமிக்ஸ் போன்ற பாடங்களைப் படிக்கலாம். 
  • கலைப்பிரிவில் ஆர்வம் உள்ளவர்கள், இதழியல், ஆங்கிலம், சோசியல் வொர்க்ஸ், லைப்ரரி சயின்ஸ், உளவியல், ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற படிப்புகளையும், கொஞ்சம் தொழில் ஆர்வம் உள்ளவர்கள் டிராவல் அண்ட் டூரிஸம், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செக்ரட்டரிஷிப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். 
  • ப்ளஸ் டூ வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களைப் படித்தவர்கள், அக்ரிக்கல்சர், பார்மஸி, பயோடெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோ கெமிஸ்டரி, நர்ஸிங், கால்நடை மருத்துவம், ஃபுட் டெக்னாலஜி, மீன்வளம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். இப்போது பல அறிவியல் படிப்புகள் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்புகளாக வழங்குகின்றன. இதில் சேரவும் மாணவர்கள் ஆர்வம் காட்டலாம். 
  • ப்ளஸ் டூ-வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்களைப் படித்தவர்கள், பொறியியல் பிரிவில் சாதிக்க வேண்டும் என்பவர்கள் பி.ஆர்க், பி.இ/பி.டெக்.பிரிவில் பயோஇன்ஃபோமேட்டிக்ஸ் உள்பட பல்வேறு பிரிவுகளை ஆர்வத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பது நல்லது. 
  • சில பேருக்கு, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆர்வம் கொண்டிருந்து கணிதப்பாடத்தில் நல்ல திறன்பெற்றவர்களாக நல்ல கல்வி நிறுவனங்களில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். 

திரைத்துறையிலும், காட்சித்துறையிலும் சாதனைப் படைக்க ஆர்வம் உள்ளவர் பிலிம் டெவிஷன் சார்ந்த படிப்பையும், ஜர்னலிஸம் படிப்பைப் படிக்க விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர் மாணவர்களுக்கு ஓர் உற்சாக வாய்ப்பு!

 

 

 ப்ளஸ் 2-வுக்குப் பிறகு படிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்று பெற்றோரும் மாணவர்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் வகையில், விகடனும் VSB பொறியியல் கல்லூரியும் இணைந்து திருப்பூரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி திருப்பூர் கே.செட்டிப் பாளையம் சரவணா மஹாலில் ஏப்ரல் 15 (ஞாயிற்றுக் கிழமை) காலையில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர் ரமேஷ் பிரபா, பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார், டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவின் தலைவர் திரு பட்டாபிராமன் ஆகியோர் `ப்ளஸ் டூ வுக்குப் பிறகு என்ன படிக்கலாம் - கேள்விகளும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன் பதிவு அவசியம். முன் பதிவுக்கு :

1). Name *

2). Contact *

3). E-mail*

4). Location *

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close