Published:Updated:

சில்லறை வர்த்தகர்களின் பாதுகாப்பு: மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!

புதுடெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சில்லறை வர்த்தகர்களின் பாதுகாப்பு பற்றி பதில் அளிக்கவேணடும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

##~~##
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டபின் சில்லறை வணிகர்களை பாதுகாப்பது எப்படி?  என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வணிகர்களின் நலனை காக்க ஒழுங்கு நடைமுறை தேவை என்று கூறிய நீதிபதிகள்,
சில்லறை வணிகர்களின் பாதுகாப்பு பற்றி பதில் அளிக்கவேணடும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.