Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

* `சானியா மிர்ஸா தன் பயோபிக்கில் நடித்தால், நான் அவருக்கு ஜோடியாக நடிக்கத் தயார்’ என அறிவித்திருக்கிறார் ஷாரூக் கான். 29 வயதான டென்னிஸ் வீரர் சானியா மிர்ஸா, அதற்குள் தன் சுயசரிதை புத்தகத்தை எழுதி முடித்து வெளியிட்டுவிட்டார். `காயம் ஏற்பட்டு இனி சிங்கிள்ஸ் ஆட முடியாது என்ற நிலை உருவானபோது, இரட்டையர் பிரிவில் ஆடி முதலிடம் பெற்றார் சானியா மிர்ஸா. கடின உழைப்புதான் வெற்றிக்கு ஒரே வழி. தோல்வி அடைந்தால் அதில் இருந்து மீள, அதைவிட கடின உழைப்பு தேவை. அந்த இரண்டுமே சானியாவிடம் இருக்கிறது' எனப் புகழ்ந்திருக்கிறார் பாலிவுட் பாட்ஷா. சூப்பர் கேர்ள் சானியா!

* உலகம் முழுக்க ஆற்றல்மிக்க பணியாளர்களின் (Skilled Workers) எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியிருக் கிறது. இதில் அதிகபட்சமாக ஜப்பானில்
81 சதவிகிதப் பணியாளர்களுக்கான தட்டுப்பாடு எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா. இங்கே 64 சதவிகிதம், பிரேசிலில் 63 சதவிகிதம் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதில் பிளம்பர், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட டெக்னிக்கல் வேலைகளுக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு நிலவுகிறதாம். திறனை வளர்ப்போம்!

இன்பாக்ஸ்

*  மோடியின் அறிவுரைகளில் ஒன்று, `ட்விட்டரில் ஆக்டிவாக இருக்க வேண்டும்’ என்பது. அதனால், ஃபாலோயர்ஸை அதிகரிப்பதில் மத்திய அமைச்சர்களுக்கு இடையே போட்டாபோட்டி நிலவுகிறது. இந்தியாவில் மோடிக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிகம் ஃபாலோயர்ஸ்கொண்ட பெண் தலைவராக முதல் இடத்தில் இருக்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். கிட்டத்தட்ட 54 லட்சம் ஃபாலோயர்ஸ். ஒரு நாளுக்கு குறைந்தது 22 கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார்.  நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட பிரதமர் மோடி, கேள்விகளுக்குப் பதில் சொல்வது இல்லை. ஆனால், ஒரு நாளுக்கு சராசரியாக 16 முறை ரீட்வீட் செய்கிறார்.  ட்ரெண்டிங் மினிஸ்டர்ஸ்!

இன்பாக்ஸ்

* தீவிர அரசியலில் இறங்கியிருக்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அடுத்த சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக இவர் நிறுத்தப் படலாம் என்பதால், தினமும் கெஜ்ரிவாலை ட்வீட்டுகளால் துவைத் தெடுக்கிறார் ஷர்மிஸ்தா. `டெல்லியில் ஆட்சியைப் பிடித்துவிட்டதால் டெல்லி மீதான கவனத்தை இழந்துவிட்டார் கெஜ்ரிவால். மற்ற மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க, டெல்லியில் ஏதோ சாதனை செய்து முடித்துவிட்டதுபோல, மற்ற மாநிலங்களில் விளம்பரங்களை அள்ளி வீசுகிறார். அவரின் பொய்முகத்தைக் காட்டுவதுதான் என் முழு நேர வேலை' என வெடிக்கிறார் ஷர்மிஸ்தா.  வெல்கம்... வெல்கம்!

இன்பாக்ஸ்

*  கடந்த 82 ஆண்டுகளில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக வயதில் சென்ச்சுரி அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக். 42 வயதான மிஸ்பா, இந்தச் சாதனையை இங்கிலாந்து அணிக்கு எதிராக கிரிக்கெட்டின் தலைநகர் லார்ட்ஸ் மைதானத்தில் நிகழ்த்தியிருக்கிறார். `வயதாகிவிட்டது. இவர் ஏன் இன்னமும் விளையாடுகிறார்?' என இங்கிலாந்து தொடருக்கு முன்பாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக சதம் அடித்ததும், பிட்சிலேயே  `நான் இன்னமும் ஃபிட்டாகத்தான் இருக்கிறேன்' என்று  சில நிமிடங்கள் புஷ்-அப்ஸ் எடுத்து அசத்தினார் மிஸ்பா.
நீ கலக்கு பெரியப்பு!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

* ஸ்டெஃபி கிராஃபின் `22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்’ என்ற சாதனையைச் சமன் செய்திருக்கிறார் செரீனா வில்லியம்ஸ். ஸ்டெஃபிக்கும் செரீனாவுக்கும் கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களில் மட்டும் அல்ல... இன்னும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. ஸ்டெஃபி, செரினா இருவரின் உயரமும் 5 அடி 9 அங்குலம். இருவருமே 4 வயதில் இருந்து டென்னிஸ் ஆட ஆரம்பித்தவர்கள். 7 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றிருக்கும் இருவரும், தலா இரு முறை தொடர்ந்து விம்பிள்டனில் பட்டம் வென்றவர்கள் என டேட்டாக்களால் சிலிர்க்கிறார்கள் டென்னிஸ் ஃபேன்ஸ். சல்யூட் சாம்பியன்ஸ்!