வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (07/04/2018)

கடைசி தொடர்பு:15:06 (07/04/2018)

தரவரிசைப்பட்டியலில் 10 தமிழக அரசுக் கலைக்கல்லூரிகள் இடம்பிடித்த பின்னணி!

தரவரிசைப்பட்டியலில் 10 தமிழக அரசுக் கலைக்கல்லூரிகள் இடம்பிடித்த பின்னணி!

மத்திய மனிதவளத் துறை வெளியிட்டுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் 10 தமிழக அரசுக் கலைக் கல்லூரிகள் இடம்பிடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

கலைக்கல்லூரிகள்

மத்திய மனிதவளத்துறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியலை 2016-ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. கற்றலுக்கான வசதி வாய்ப்புகள், ஆராய்ச்சி நிலை, தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை, கல்வி நிறுவனத்தின் சமூகத் திட்டங்கள், கல்வி நிறுவனம் குறித்து பொதுமக்களின் அபிமானத்தை அளவீடாகக் கொண்டு தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிக்க இந்தியா முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் போட்டியிட்டன. இறுதியில் 150 கல்லூரிகள் மட்டும் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்தன. இதில்  தமிழகத்தைச் சேர்ந்த 57 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த 10 கல்லூரிகள், கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள 11 கல்லூரிகள், திருச்சியைச் சேர்ந்த 7 கல்லூரிகள், மதுரையைச் சேர்ந்த 6 கல்லூரிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 கல்லூரிகள், திருப்பூரைச் சேர்ந்த 4 நான்கு கல்லூரிகள், ஈரோடு மாவட்டத்தில் 3 கல்லூரிகள் இடம்பிடித்திருக்கின்றன. இதில்,  பத்து அரசு கலைக்கல்லூரிகள் இடம்பிடித்திருப்பது கல்வியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தேசிய அளவிலான தரவரிசைப்பட்டியலில் இடம்பிடித்த தமிழகக் கல்லூரிகள்

 தமிழகக் கல்லூரிகள்

மாவட்டம்

ரேங்க்

 பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி

3

மாநிலக் கல்லூரி (பிரிசிடென்சி கல்லூரி)

 சென்னை 

5

லயோலா கல்லூரி 

சென்னை 

6

சென்னை கிறித்துவக் கல்லூரி 

சென்னை 

10

பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கோயமுத்தூர்

11

பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

கோயமுத்தூர்

16

பெண்கள் கிறித்துவக் கல்லூரி

சென்னை

22

தூய வளனார் கல்லூரி (செயின்ட் ஜோசப் கல்லூரி)

திருச்சிராப்பள்ளி

28

ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரி

சென்னை

30

அரசு கலைக்கல்லூரி

கோயமுத்தூர்

33

ஸ்காட் கிறித்துவக் கல்லூரி

கன்னியாகுமரி

37

எத்திராஜ் மகளிர் கல்லூரி 

சென்னை

38

ஶ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை & அறிவியல் கல்லூரி 

 கோயமுத்தூர்

39

ஹோலி கிராஸ் கல்லூரி 

திருச்சி

42

தியாகராஜர் கல்லூரி

மதுரை

44

அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி

மதுரை

47

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க்ஸ் (ஒர்க்)

சென்னை

49

விருதுநகர் ஹிந்து நாடார் செந்தில்குமார நாடார் கல்லூரி

விருதுநகர்

51

புனித சவேரியார் (செயின்ட் சேவியர்) கல்லூரி  

பாளையங்கோட்டை

54

வெள்ளாளர் மகளிர் கல்லூரி 

ஈரோடு

57

ஶ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி 

மதுரை

58

ஶ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கோயமுத்தூர்

64

பாத்திமா கல்லூரி

மதுரை

65

கொங்குநாடு கலை & அறிவியல் கல்லூரி 

கோயமுத்தூர்

67

பெண்கள் கிறித்துவக் கல்லூரி

நாகர்கோவில்

70

அரசு கலைக்கல்லூரி  

திருப்பூர்

71

சி.எம்.எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி  

கோயமுத்தூர்

72

நேஷனல் கல்லூரி 

திருச்சிராப்பள்ளி

74

ராணி மேரி கல்லூரி

சென்னை

77

லேடி டோக் கல்லூரி  

மதுரை

81

ஜாமல் முகமது கல்லூரி

திருச்சி

83

வி.வி.வன்னிபெருமாள் மகளிர் கல்லூரி

விருதுநகர்

85

கொங்கு கலை & அறிவியல் கல்லூரி

ஈரோடு

89

அமெரிக்கன் கல்லூரி  

மதுரை

90

டாக்டர் என்.ஜி பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி 

கோயமுத்தூர்

91

அண்ணா ஆதாஷ் மகளிர் கல்லூரி 

சென்னை

95

மகேந்திரா கலை & அறிவியல் கல்லூரி

நாமக்கல்

96

ரத்னம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 

கோயமுத்தூர்

98

ஏ.வி.வி.எம். ஶ்ரீ புஷ்பம் கல்லூரி

திருவாரூர்

101

ஆக்ஸிலியம் கல்லூரி

வேலூர்

104

காவிரி மகளிர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி

109

சிக்கண்ணா நாயக்கர் அரசு கலைக்கல்லூரி

திருப்பூர்

110

ஜி. வெங்கடசாமி நாயுடு கல்லூரி 

தூத்துக்குடி

115

கோபி அரசு கலை & அறிவியல் கல்லூரி

ஈரோடு

116

அரசு கலைக்கல்லூரி

கடலூர்

117

கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி

தூத்துக்குடி

118

ஜெயராஜ் அன்னபாக்யம் மகளிர் கல்லூரி

தேனி

120

எல்.ஆர்.ஜி  அரசு மகளிர் கலைக்கல்லூரி

திருப்பூர்

125

மலங்காரா கத்தோலிக் கல்லூரி

கன்னியாகுமரி

128

நேசமணி நினைவு கிறித்துவக் கல்லூரி

கன்னியாகுமரி

130

ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி

திருநெல்வேலி

134

தூய நெஞ்சக் கல்லூரி

திருப்பத்தூர், வேலூர்

135

சீத்தாலட்சுமி ராமஸ்சுவாமி கல்லூரி

திருச்சிராப்பள்ளி

136

எஸ்.எஸ்.எஸ்.எஸ் ஜெயின் மகளிர் கல்லூரி

சென்னை

137

ஶ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி

கோயமுத்தூர்

141

ஶ்ரீ ஜி.வி.ஜி. விசலாக்ஷுமி மகளிர் கல்லூரி

திருப்பூர்

144

ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கோயமுத்தூர்

146

கல்லூரிகளின் தரவரிசையில், ஐந்தாவது இடம்பிடித்துள்ளது மாநிலக்கல்லூரி. எப்போதும் அடிதடி, ரகளை எனப் போராட்டமாக இருந்தாலும் தரவரிசையில் ஐந்தாவது இடத்தை எப்படிப் பிடிக்க முடிந்தது என்பது குறித்து, மாநிலக் கல்லூரி முதல்வர் பிரமானந்தா பெருமாளிடம் பேசினோம்.

மாநிலக் கல்லூரி சென்னை கலைக்கல்லூரிகள்

மாநிலக் கல்லூரி முதல்வர் பிரமானந்தா பெருமாள் கலைக்கல்லூரிகள்``மாநிலக் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் பல்வேறு துறைகளில் ஆய்வுப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஓராண்டில் நிறைய ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்திருக்கிறோம். மேலும், கடந்த  இரண்டு வருடங்களாக மாணவர்களிடையே மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தி, அடிதடி பிரச்னை எதுவும் பெரிய அளவில் இல்லாமல் நிர்வகித்து வருகிறோம். இதனால் பொதுமக்களிடையே மாநிலக் கல்லூரியின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் படித்துமுடித்து பட்டம் பெற்றுச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைவாக இருக்கிறது. இந்த எண்ணிக்கையையும் உயர்த்தி, அடுத்த ஆண்டில் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடிப்போம்" என்றார்.

ஏழை மாணவர்களின் புகலிடமாக விளங்கும் தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தப்போதிலும், இதரப் பிரிவுகளில் நிறைய மதிப்பெண்ணைப் பெற்று தேசிய அளவில் சிறப்பைப் பெற்றிருக்கின்றன. பாராட்டுவோம். 


டிரெண்டிங் @ விகடன்