Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

* ரித்து ராணி. 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிக்கு இந்தியப் பெண்கள் அணி தகுதிபெற இவர்தான் காரணம். 24 வயதாகும் இந்த வீராங்கனை, சில நாட்களுக்கு முன்னர் வரை இந்தியப் பெண்கள் அணியின் கேப்டன். ஆனால், திடீரென ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மட்டும் அல்லாமல், அணியில் இருந்தே ரித்துவை நீக்கிவிட்டது இந்திய ஹாக்கி கமிட்டி. `என்னை அணியில் இருந்து நீக்கியதற்கு எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை. சிறந்த ஃபார்மில் முழுமையான ஃபிட்னஸுடன் இருக்கும் என்னை ஏன் அணியில் இருந்து நீக்கினார்கள் எனப் புரியவே இல்லை. ஹாக்கி கனவுகளோடு வளர்ந்த என்னை, இந்த அறிவிப்பு சிதைத்திருக்கிறது' எனப் புலம்புகிறார் ரித்து. ஆனால், ரித்து நீக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவே இல்லை. வேஸ்டட் டேலன்ட்!

இன்பாக்ஸ்

*  கடந்த வாரம் முழுக்க அமெரிக்காவின் ட்விட்டர் ட்ரெண்டிங் பிரபலம் மெலானியா ட்ரம்ப். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியான மெலானியா, கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தில் பேசினார். அப்போது 2008-ம் ஆண்டு ஒபாமாவுக்காக அவரது மனைவி மிச்சேல் பேசிய அதே பேச்சை நடுவில் வார்த்தை பிசகாமல் மெலானியா பேச, சமூக வலைத்தளங்கள் எங்கும் மீம்ஸ்கள் பறந்தன. ஆரம்பத்தில் நான் காப்பி அடிக்கவில்லை. அவரது எண்ணமும் என் எண்ணமும் ஒன்றுபோல இருக்கிறது என மெலானியா சமாளிக்க, `தவறுதலாக நான்தான் மிச்சேல் ஒபாமாவின் பேச்சை, மெலானியாவின் பேச்சில் இணைத்துவிட்டேன்' என மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஸ்கிரிப்ட் ரைட்டர். மெலானியா கவனியா!

இன்பாக்ஸ்

*  முதல் இந்தியராக `மிஸ்டர் வேர்ல்டு' பட்டம் வென்றிருக்கிறார் ரோஹித். 26 வயதான ரோஹித், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். ‘இந்த வெற்றியை என்னால் இன்னும் நம்ப முடிய வில்லை. என்னுடைய பல நாள் கனவு நனவாகியுள்ளது. இனி கொஞ்ச நாளுக்கு டயட்டை மறந்துவிட்டு நன்றாகச் சாப்பிடலாம்' என உற்சாகமாகியிருக்கிறார். மிஸ்டர் வேர்ல்டு பட்டம் வென்ற ரோஹித்துக்கு, 33 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. கூடவே இன்டர்நேஷனல்  விளம்பரங்களில் நடிக்க வாய்ப்புகளும் குவிகின்றன. அடுத்து டோலிவுட்டா... பாலிவுட்டா?

*  லகிலேயே அதிக பணியாளர்கள் கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது அமெரிக்கப் பாதுகாப்புத் துறை. 32 லட்சம் பேர் வேலைசெய்கிறார்கள். அடுத்தபடியாக சீன மக்கள் விடுதலை ராணுவத்தில் 23 லட்சம் பேர் இருக்கிறார்கள். உலகம் எங்கும் கிளைகள் கொண்டிருக்கும் வால்மார்ட் நிறுவனம், 21 லட்சம் பணியாளர்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்தியன் ரயில்வே, 14 லட்சம் ஊழியர்களுடன் எட்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய ராணுவம் 13 லட்சம் வீரர்களுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. வொர்க்ஃபோர்ஸ் வொண்டர்ஸ்!

இன்பாக்ஸ்

* யூரோ கோப்பையை வென்ற உற்சாகத்தில் உலகின் செம காஸ்ட்லி காரான புகாட்டி வேரான் காரை வாங்கியிருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 12 கோடி ரூபாய் விலைகொண்ட இந்த கார்தான் உலகின் வேகமான காரும்கூட. இதன் டாப் ஸ்பீடு, மணிக்கு 420 கிலோமீட்டர். `இதை நான் கார் எனச் சொல்ல மாட்டேன். இது ஒரு மிருகம். வெற்றியைக் கொண்டாட நல்ல மிருகத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். கிடைத்துவிட்டது' என ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் ரொனால்டோ. விவேகமா வண்டி ஓட்டுங்க!

இன்பாக்ஸ்

*  சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு பெளலிங் அட்வைஸர் இம்ரான் கான். பாகிஸ்தானுக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர்களுக்கு நெட் பெளலர் அர்ஜுன் டெண்டுல்கர். அங்கே அர்ஜுனின் பெளலிங்கைப் பார்த்த இம்ரான் கான், நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார். `அர்ஜுன், சரியான லைனில் பெர்ஃபெக்ட்டாக வீசுகிறார். நான் வலதுகை பந்துவீச்சாளர்; அவர் இடதுகை பந்துவீச்சாளர் என்பதுதான் வித்தியாசம். விரைவில் இந்திய அணியில் அர்ஜுனைப் பார்க்க ஆவலோடு இருக்கிறேன்' எனச் சிலிர்த்திருக்கிறார் இம்ரான் கான். ப்ரெளடு ஃபாதர்!

இன்பாக்ஸ்

*  ஸ்திரேலியாவின் சூப்பர் மாடல் மிராண்டா கெர்கும், ஸ்னாப்சாட் அப்ளிக்கேஷனை உருவாக்கிய எவன் ஸ்பீகெல்லுக்கும் திருமணம். 26 வயதே ஆன எவன், அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க், ஸ்னாப்சாட்டை வாங்குவதற்காக பல கோடி டீல் பேசியபோதும் மறுத்த தில்லான இளைஞர் எவன், மிராண்டா கெர் மீது கண்டதும் காதல் கொண்டிருக் கிறார். `இரண்டு வருஷத்துக்கு முன்னர் ஒரு பார்ட்டியில் மிராண்டாவைப் பார்த்தேன். அவரது அழகும் பேச்சும் எனக்குப் பிடித்துவிட்டது' என, தனது காதலைச் சொல்லியிருக்கிறார் எவன். மகிழ்ச்சி!

*  `வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் பஞ்சாப் மாநிலத் தேர்தலில், ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்' எனக் கருத்துக் கணிப்புகள் வெளியாகிவரும் நிலையில், பா.ஜ.க-வில் இருந்து விலகியிருப்பதோடு, எம்.பி பதவி யையும் ராஜினாமா செய்திருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. `முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்காகத்தான் சித்துவை அழைத்துவந்திருக்கிறது.சொந்தக்கட்சியில் இருந்து வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் மாற்றுக்கட்சியில் இருந்து ஆள் பிடிக்கும் கட்சியா ஆட்சியைப் பிடிக்கப்போகிறது?' என ஆம் ஆத்மியை காங்கிரஸ், பா.ஜ.க இரண்டு கட்சிகளும் கண்டபடி விளாசுகின்றன. சித்து=சர்ச்சை!