Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

* 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் அகதிகள் அணி இடம்பெறுகிறது. சிரியா நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான யஸ்ரா மிர்தினியின் வீடு, கடந்த ஆண்டு உள்நாட்டுப் போரில் தாக்குதலுக்கு உள்ளானது. உயிர்பிழைத்து சகோதரியுடன் வெளியேறிய யஸ்ரா, துருக்கி வந்தார். அங்கு இருந்து படகு மூலம் கிரீஸ் நாட்டுக்குச் செல்வதுதான் திட்டம். 7 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய படகில் 18 பேர் பயணிக்க, நடுக்கடலில் படகு மூழ்கத் தொடங்கியது. நீச்சல் வீராங்கனையான யஸ்ரா தன் சகோதரியுடன் நான்கு மணி நேரம் கடலில் நீந்தியபடியே படகை மீட்டுக்கொண்டுவந்து கரை சேர்த்தார். இப்போது ஜெர்மனியில் வசிக்கும் யஸ்ராவை, அகதிகள் அணிக்காகத் தேர்ந்தெடுத்தது ஒலிம்பிக் கமிட்டி. 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் கலந்துகொள்ளும் யஸ்ரா, நிச்சயம் பதக்கம் வெல்வார் என எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது அகதிகள் அணி. எதிர்நீச்சலடி!


இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் 70–வது சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி ஐ.நா சபையின் பொது அரங்கில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். 1966-ம் ஆண்டு, அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நா சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். அதன் பிறகு இன்னொரு தமிழரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மட்டுமே இசை நிகழ்ச்சி நடத்த அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது. ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில், ஐ.நா சபையில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள இருக்கின்றனர். ரக்கா ராஜ்ஜியம்!


* வீட்டில் போக்கிமான் கோ விளையாடுவதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் அப்லோடிக்கொண்டே இருக்கிறார் அனுஷ்கா ஷர்மா. `பிக்காச்சுக்களைப் பிடிக்கிறது செம இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு. முதல் பிக்காச்சுவைப் பிடிச்ச `கோட்ச்சா' ஃபீலை மறக்கவே முடியாது. ஆனால், போக்கிமான் விளையாடும்போது கவனமா இருங்க பாய்ஸ். எங்கேயாவது தொலைஞ்சுடாதீங்க' என அனுஷ்கா ஸ்டேட்டஸ் தட்ட, அதற்கு வீடியோ மீம்ஸ் போட்டு ஷாரூக் கான் பதில் போட, அமிதாப் பச்சனோ `போக்கிமான்னா என்னப்பா... ஒண்ணும் புரியலியே'வென ட்வீட்டி இருக்கிறார். அச்சா கிதர்!


இன்பாக்ஸ்

* `இதுவரைக்கும் கோபிநாத்தாகவே நடிக்கச் சொன்னதாலதான் நடிச்சேன். காரணம், நான் நடிக்கிறது ஸ்கிரீன்ல எப்படி வரும்கிற பயம் எனக்கு உண்டு. ‘திருநாள்’ டைரக்டர் ராம்நாத் தந்த நம்பிக்கையில போலீஸ் ஏ.எஸ்.பி-யாவே நடிச்சுட்டேன். இங்கிலீஷ்ல ‘ஃபைண்டிங் யூ’னு சொல்வாங்க. அப்படி என்னை நானே கண்டுபிடிக்க இந்தப் படம் உதவியிருக்கு' என்கிறார் `நீயா? நானா?' கோபிநாத். இதற்குக் கிடைக்கும் வரவேற்பை பொறுத்துத்தான் சினிமாவைத் தொடர்வதா... வேண்டாமா என்ற முடிவை எடுப்பாராம். டு பி... ஆர் நாட் டு பி!


இன்பாக்ஸ்

* டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிச்சைத் திருமணம் செய்த கையோடு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர். 2014-ம் ஆண்டு உலகக்கோப்பையை ஜெர்மனி வெல்லக் காரணமாக இருந்தவர் கேப்டன் பாஸ்டியன். ஆனால், யூரோ கோப்பையில் பிரான்ஸ் அணியிடம் 2-0 எனத் தோல்வியடைந்தது பாஸ்டியனை மிகவும் பாதிக்க, திடீர் ஓய்வு. `வீட்டுக்காக வாழ விரும்புகிறேன். நாட்டுக்காக விளையாடியது போதும்.என் புது மனைவியோடு நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன்' என்கிறார். லிவ் யுவர் லைஃப் மச்சா!


லியோனார்டோ டிகாப்ரியோ (41) மீண்டும் ரொமான்ஸ் மூடுக்குத் தாவியிருக்கிறார். 24 வயதான டென்மார்க் மாடல் நினா அக்டால் லேட்டஸ்ட் லவ் லேடி. கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அக்டாலுடன் வந்த லியோனார்டோ, இரண்டு மாதங்களாக அக்டாலுடன் இன்பச் சுற்றுலாவில் இருக்கிறார். ஜேக் ரிட்டர்ன்ஸ்!


* ஆகஸ்ட் 25-ம் தேதியோடு, இந்திய ஜனாதிபதியாக நான்கு ஆண்டுகளை நிறைவுசெய்கிறார் பிரணாப் முகர்ஜி. 340 ஏக்கரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை, பசுமை மாளிகையாக மாற்றியிருக்கிறார். 2,500 பேர் பணியாற்றும் இந்த மாளிகையில் சோலார் திட்டம், இயற்கை எரிவாயுத் திட்டம், ஆர்கானிக் எரிகுச்சி என இயற்கையான பல திட்டங்கள் மாளிகைக்குள் இயங்குகின்றன. அடுத்த ஆண்டு ஓய்வுபெறுவதற்குள் முழுமையான பசுமை மாளிகையாக ஜனாதிபதி மாளிகையை மாற்ற வேண்டும் என வேலைகளை வேகப்படுத்திவருகிறாராம் பிரணாப். நேச்சுராலஜி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism