Published:Updated:

குறைந்தது ரெப்போ ரேட் - வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்பு!

குறைந்தது ரெப்போ ரேட் - வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்பு!
குறைந்தது ரெப்போ ரேட் - வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்பு!
குறைந்தது ரெப்போ ரேட் - வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்பு!

மும்பை: குறுகிய கால வங்கிக் கடன் வட்டி விகிதமான ரெப்போ ரேட்டை 0.25 சதவிகிதம் குறைத்து, இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு விகிதத்தையும் 0.25 சதவிகிதம் அளவில் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரத்தைக் கருத்தில்கொண்டு வெளியிடப்பட்டுள்ள ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால், வங்கிகளுக்குக் கூடுதலாக ரூ.18,000 கோடி நிதி கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த மாற்றத்தின் எதிரொலியாக, வீடு மற்றும் வாகனக் கடன் வட்டி விகிதம் ஓரளவு குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவிகிதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 17க்குப் பிறகு, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை இப்போதுதான் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.