Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

* ஹாலிவுட் இயக்குநர் கிரிஸ்டோஃபர் நோலனின் அடுத்த படம் `டன்கிர்க்'. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிரான்ஸில் போரிட்டுக்கொண்டிருந்த ஜெர்மனி படையிடம் இருந்து, பிரிட்டனின் 3,38,226 வீரர்கள் தப்பி வந்த நிகழ்வுதான் `டன்கிர்க் எவாக்குவேஷன்'. படத்தின் டீஸர், ஆன்லைனில் வைரல் ஹிட். இன்னொரு க்ளாசிக்கை எதிர்பார்க்கலாம்!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* `மத்திய அரசின் கூட்டங்களில், மாநிலப் பெயர்களின் ஆங்கில அகரவரிசைப்படிதான் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். எப்போதும் மேற்கு வங்காளம்தான் கடைசி. இதனால் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும்' என, முதன்முறை ஆட்சிக்கு வந்தபோதே அறிவித்திருந்தார் மம்தா பானர்ஜி. ஆனால், முதல் ஐந்தாண்டு ஆட்சியில் அது முடியவில்லை. இப்போது மீண்டும் பெயர் மாற்றத்தைக் கையில் எடுத்திருக்கிறார். இனி ஆங்கிலத்தில் `பெங்கால்' என்றும், பெங்காலியில் `பாங்கா' அல்லது `பாங்க்லா' என்றும் அழைக்க வேண்டும் என அறிவித்துள்ளார். ஆங்கிலப் பெயர் ஓ.கே, பெங்காலிப் பெயர்தான் `செம ஃபன்னி' என ஆன்லைனில் அடித்துத் துவைத்துவிட்டது வைரல் சமூகம். கேளிக்கை பாய்ஸ்!

இன்பாக்ஸ்

* டோலிவுட்டின் ட்ரெண்டிங் ஃபிலிம் `பெல்லி சூப்புலு'. மிகச் சிறிய பட்ஜெட்டில் புதுமுக நடிகர்களைவைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை நியூவேவ், நெக்ஸ்ட் ஜென் என ஆளாளுக்குப் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு சின்ன கல்யாண கலாட்டா, அதற்கு நடுவில் நடக்கும் ஒரு காதல் என க்யூட் ஒன்லைன், ட்ரீட்மென்ட்தான் பக்கா க்ளாஸ் என ராஜமௌலி தொடங்கி எல்லோரும் புகழ்கிறார்கள். படம் கலெக்‌ஷனிலும் கில்லி. ரீமேக் இயக்குநர்கள் கெட் ரெடி!

* கமலா சுரையா எழுதிய `என் கதை' சுயசரிதைப் புத்தகம், மிக முக்கியமான படைப்பு. புரட்சிகரமாகவும்  பெண் விடுதலைக்காகவும் தொடர்ந்து எழுதிவந்தவர் கமலா. இறுதிக் காலத்தில் முஸ்லிம் மதத்துக்கு மாறிய அவருடைய `என் கதை' திரைப்படமாகிறது. அதில் கமலா சுரையாவாக நடிக்கப்போவது வித்யாபாலன். படத்தை இயக்கப்போகிறவர் இயக்குநர் கமல். வெயிட்டிங்!

*  ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்னரே ஒரு சாதனையைப் படைத்து அசத்தியிருக்கிறார், கனடாவின் கால்பந்து வீராங்கனை ஜனைன் பெக்கி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் லீக் சுற்று ஆட்டத்தில் போட்டி தொடங்கிய 19-வது விநாடியிலேயே கோல் அடித்து மிரட்டினார். `அது கனவுபோல இருக்கிறது. ஆஸ்திரேலிய வீராங்கனைகள், அவர்கள் பக்கமாகப் பந்தைத் தள்ளி, வார்ம்அப் செய்துகொண்டிருந்தார்கள். ஆட்டம் தொடங்கிய சில விநாடிகளிலேயே நான் துணிந்து அந்தப் பக்கம் வருவேன் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கோல் விழுந்தது' என சிலிர்க்கிறார் 22 வயதான பெக்கி. வாவ்... இன் செகண்ட்ஸ்!

இன்பாக்ஸ்

* நடுக்கடலில் வீடு கட்டிக்கொள்வதுதான் இப்போ செலிபிரிட்டி ட்ரெண்ட். துபாயில் நடுக்கடலில் மண்ணைக் கொட்டி மேடாக்கி, அங்கே பனைமர வடிவில் ஒரு தீவை உருவாக்கிவைத்திருக் கிறார்கள். இங்குதான் ஐஸ்வர்யா ராய் வீடு வாங்கியிருக்கிறார். சகல வசதிகளும்கொண்ட இந்த வீட்டின் விலை 54 கோடி ரூபாய். ஷாரூக், சல்மான், மோகன்லால், ஸ்ரீதேவி எனப் பலரும் இங்கே வீடு வாங்கிவிட்டார்கள். செலிபிரிட்டி தீவு!

இன்பாக்ஸ்

*  பள்ளியில் படிக்கும் ஒபாமா மகள் நடாஷா, இப்போது வேலைக்குப் போகிறார். விடுமுறையில்தான். மார்த்தாஸ் வைன்யார்டு தீவில் நான்சி என்ற உணவகத்தில் வெயிட்டராக வேலைக்குச் சேர்ந்துவிட்டார் நடாஷா. சிம்பிள் வாழ்க்கை வாழ ஆசைப்பட்டாலும், அமெரிக்க அதிபர் மகளை சும்மா விட்டுவிட முடியுமா? பல கோடி மதிப்புள்ள காரில் ஆறு பாதுகாவலர்களுடன் வேலைக்குப் போகும் நடாஷாவுக்கு, கஸ்டமர்கள் வருவதற்கு முன்னரே டேபிளைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்துகிற வேலை. அவர் வேலைசெய்யும் ஹோட்டலிலும் செக்யூரிட்டிகள் கண்ணும் கன்னுமாகக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். சினிமா சீன்டா!

இன்பாக்ஸ்

* ப்கானிஸ்தானின் போர் பதற்றம் சூழ்ந்த... கட்டுப்பாடுகள் நிறைந்த காபூல் நகரைச் சேர்ந்த ஓவியர், ஷம்ஸியா ஹசானி. பெண்கள் வெளியில் செல்வதற்கே பலவிதத் தடைகள் விதிக்கப்படும் ஆப்கானில், மிகத் தைரியமாகத் தன்னுடைய கருத்துக்களை ‘கிராஃபிட்டி’ சுவர் ஓவியங்கள் மூலமாகப் பதிவிட்டுவருகிறார். பெண்ணியத்தை வலியுறுத்தும் ஓவியங்கள்தான் இவர் ஸ்பெஷல். `ஒரு பெண்ணாக போரால் ஏற்படும் பாதிப்புகளையும், பெண்களுக்கான சுதந்திரத்தையும் ஓவியங்களாக எடுத்துச் சொல்வது சிறிய அளவிலாவது சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்’ என்கிறார் ஷம்ஸியா. வாழ்த்துகள் ஷம்ஸியா!

இன்பாக்ஸ்

* `தோனியின் சீக்ரெட் லவ் ட்ராக்தான் `எம்.எஸ்.தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி' படத்தின் ஹைலைட்' என்கிறது படக் குழு. தோனி தன் டீன் ஏஜ் காலத்தில் பிரியங்கா ஜா என்கிற பெண்ணைக் காதலித்திருக்கிறார். அந்தக் காதலில் இருந்தபோதுதான் இந்திய ஏ அணியில் விளையாட தோனிக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. காதலி தந்த உற்சாகத்தில் சிறப்பாக ஆடி, கங்குலியின் கவனம் பெற்று இந்திய அணிக்குள் நுழைந்தார் தோனி. ஆனால், அவர் வெளிநாட்டில் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக சாலைவிபத்தில் சிக்கி பிரியங்கா ஜா மரணம் அடைந்திருக்கிறார். காதலியின் மரணத்தால் துவண்டுபோய் ஒரு வருடம் கிரிக்கெட் ஆட முடியாமல் இருந்தார் தோனி. அதில் இருந்து மீண்டு இந்திய கேப்டனாகி இரண்டு உலகக் கோப்பைகளைப் பெற்றுத்தந்த தோனியின் காதலியாக படத்தில் நடித்திருப்பவர் யார் என்பது மட்டும் சஸ்பென்ஸாம். படம் செப்டம்பர் 30-ம் தேதி ரிலீஸ். பெய்ன்ஃபுல் கேப்டன் கூல்!