`நடிகையர் திலகம்' படத்தின் டீஸர் வெளியீடு..!

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும்  `நடிகையர் திலகம்' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 

நடிகையர் திலகம்

தன் நடிப்பாலும் முகபாவனைகளாலும் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து,  `நடிகையர் திலகம்' என அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகை சாவித்ரி. சிவாஜி கணேசன் ஒன்பது கதாப்பாத்திரத்தில் நடித்த நவராத்திரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்ற இவர், தெலுங்கில் 147 படங்களும், தமிழில் 102 படங்களும் நடித்துள்ளார். இப்போது, இவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதில் ஜெமினி கணேசனாக நடிக்கிறார் துல்கர் சல்மான். 

மதுரவாணியாக சமந்தாவும், அலூரி சக்கரபாணியாக பிரகாஷ் ராஜும் நடிக்க, நாக் அஸ்வின் என்பவர் நான்கு மொழியில் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். அவ்வப்போது, இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.  `அவங்க பேரு நடிகையர் திலகம்' என சமந்தா பேசும் படி டீஸர் வெளியாகியுள்ளது. அநேகமாக மே மாதம் 9-ம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ட்ரைக் காரணமாகப் படம் வெளியாகக் கால தாமதமாகும் எனத் தெரிகிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!