Published:Updated:

டெல்லி பாலியல் வழக்கை இடம் மாற்றக் கோரும் மனு தள்ளுபடி

புதுடெல்லி: டெல்லி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திக் கொலை செய்த வழக்கை, வேறு மாநிலத்துக்கு இடம் மாற்றக் கோரும் குற்றச்சாட்டப்பட்டவர்களின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொதுமக்களிடம் காட்டமான கோப உணர்வு உள்ளதால், வழக்கை வழக்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று  குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்களின் கோரிக்கை ஏற்க மறுத்து, அவர்களது மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.