Published:Updated:

விஸ்வரூபம்: கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஷிண்டே ஆதரவு!

விஸ்வரூபம்: கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஷிண்டே ஆதரவு!
விஸ்வரூபம்: கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஷிண்டே ஆதரவு!
விஸ்வரூபம்: கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஷிண்டே ஆதரவு!

புதுடெல்லி: விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவு  தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, கலைஞர்கள்  விருப்பம் போல பணியாற்ற சுதந்திரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாம் சுதந்திரமான சமுதாயத்தில்  இருக்கிறோம். நமக்கென்று அரசியல் சாசனம் உள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும்  தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு. கலைஞர்கள் தங்கள் விருப்பம் போல  பணியாற்ற சுதந்திரம் உள்ளது.

##~~##
விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக சில மாநிலங்களில் சில பிரச்னைகள் உள்ளன. இது  குறித்து பரிசீலித்து என்ன நடந்தது என்று விசாரிப்போம்.தெலங்கானா பிரச்னை:  ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை  மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கு காலக்கெடு  நிர்ணயிக்கப்படவில்லை" என்றார்.