முன்பதிவு செய்யுங்க! தங்கம் வாங்குங்க! இது 2018 ஸ்டைல்! - Exclusive Deal | book in advance and get your gold Exclusive Deal

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (17/04/2018)

கடைசி தொடர்பு:16:20 (17/04/2018)

முன்பதிவு செய்யுங்க! தங்கம் வாங்குங்க! இது 2018 ஸ்டைல்! - Exclusive Deal

எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று வாழவேண்டுமென்பதே அனைவரது விருப்பம். அதற்காகவே வாழ்க்கையை திட்டம் தீட்டி, பல வழிமுறைகளை கையாண்டு சாதுர்யமாக முன் நடத்தி செல்கிறோம். அதனால்தான், ஏதாவது ஒரு நல்ல காரியம் வீட்டில்  நடப்பதாக இருந்தாலும் சரி, வீடு மற்றும் தங்கம் வாங்குவதாக இருந்தாலும் சரி, நேரம் காலம் பார்த்து தொடங்குவது வழக்கமாக உள்ளது. அப்படி தொடங்கும் போது வாழ்க்கை செழிப்பாகும் என்பது நமது நம்பிக்கை. மற்ற விஷேசங்களுக்கு நல்ல நாள் பார்ப்பதோடு சரி,    ஆனால் தங்கம் வாங்குவதற்கு மட்டும் குறிப்பிட்ட நாள் உள்ளது. அந்த நாள்தான் அட்சய திருதியை, அன்று தங்கம் மற்றும் பிற மங்களகரமான பொருட்களை வாங்கினால், நிச்சயம் செல்வ வளம் கொழிக்கும் என்பது பல நூற்றாண்டு கால நம்பிக்கை.  இந்த வருடம் அட்சய திருதியையில் பிற மங்களகரமான பொருட்களுக்குப் பதிலாக தங்கமே வாங்கலாம். ப்ரில்லியண்ட் கட் கோல்டு  & டைமண்டின் அசத்தும் சலுகை அனைவரும் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.

இதன் தரம் எப்போதும் குறையாது!

”தங்க நகை வாங்குறதுல எனக்கு பெருசா இன்ட்ரஸ்ட் இல்லீங்க. அது வேஸ்ட்”னு நினைக்காம தங்கம் வாங்குங்க, அது ஏதோ ஒரு வகையில் நிச்சயம் உதவியாக இருக்கும்.  பெண் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்ததிலிருந்து பெற்றோர்கள் சேர்க்கும் தங்கம் திருமணத்திற்கு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல முதலீடாக இருக்கும். திடீரென்று 20 பவுன் நகை வாங்க வேண்டுமென்றால் பலருக்கு அது சாத்தியமானதல்ல. சிறுகச் சிறுகச் சேர்த்துதான் வாங்கியாக வேண்டும்.  சரியான இடத்தில் தங்கம் வாங்கினால் மட்டுமே தங்கத்தின் தரம் மாறாமல் இருக்கும். செல்வம் கொழிக்கும் அட்சய திருதியையில் நம்பகமான இடத்தில் தங்கத்தை வாங்கிச் சேமியுங்கள்.  

 ப்ரில்லியண்ட் கட் கோல்டு & டைமண்டில் ஏப்ரல் 18க்கு முன் முன்பதிவு செய்பவர்களுக்கு, அட்சய திருதியை அன்று குறைந்த விலையில் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். முன்பதிவு செய்த நாளிலிருந்து, அட்சய திருதியை  வரையில் என்று தங்கத்தின் விலை குறைவோ அந்த விலையில் அட்சய திருதியையன்று  தங்கத்தினை வாங்கிக் கொள்ளலாம். முந்துங்கள் முன் பதிவு செய்யுங்கள்!

ப்ரில்லியண்ட் கட்டில் என்ன ஸ்பெஷல்? 

*பழைய தங்க நகைகளைக் கொடுத்து 1% உருக்கு இழப்பீட்டில் புதிய தங்க நகைகளை வாங்கலாம் அல்லது பணமும் பெற்றுக் கொள்ளலாம். 

*ப்ரில்லியண்ட் கட்டில் செய்கூலி 3% மட்டுமே பிற நகைக் கடைகளில் செய்கூலி 15% வரை செல்கிறது.

*எமரால்ட், ரூபி, சிக்நிட்டி மற்றும் ஆன்டிக் ஜூவல்லரிகளில் ஒரு சில நகைகளுக்கு மட்டுமே செய்கூலி 3 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

*1கிராமிலிருந்து தங்க நாணயங்கள் கிடைக்கின்றன. 

* Bureau of Indian Standardsன் தகவலின் படி, KDM கொண்டு தயாரிக்கப்படும் நகைகளால் உடலுக்கு கேடு ஏற்படுகிறது. ப்ரில்லியண்ட் கட் நகைகள்  KDMல் தயாரிக்கப்படுவதில்லை. ஜிங்கில் தயாரிக்கப்படுகிறது. இதனால் உடலுக்கு எந்த கேடும் ஏற்படுவதில்லை. 

ப்ரில்லியண்ட் கட்டின் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தரமான நகைகளை நியமான விலையில் வாங்கிக் கொள்ளுங்கள். மேலும், பழைய நகைகளை புதுப்பித்துக் கொள்ளவும் இது அருமையான வாய்ப்பு! இந்த அட்சய திருதியையில் தங்கம் வாங்கி செல்வத்தை சேமித்து, வளமாக வாழுங்கள்! 

பொன் குவியும் .....

இந்த தினத்தில் குபரேன் தான் இழந்த நிதிகளைத் திரும்பப் பெற்றார். பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரிய தேவனிடமிருந்து அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை பெற்றனர். மேலும், கிருஷ்ண பகவானுக்கு, அவல் கொடுத்து குசேலன்  செல்வந்தர் ஆனதும், இந்த பொன்னாளில்தான்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close