Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2018 பி.எம்.டபிள்யூ X3 எஸ்.யூ.வி-யில் என்ன எதிர்பார்க்கலாம்?

ஆடி Q5, மெர்சிடீஸ் பென்ஸ் GLC, லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், வால்வோ XC60, லெக்ஸஸ் NX 300h ஆகிய லக்ஸூரி எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, மூன்றாம் தலைமுறை X3 மிட் சைஸ் எஸ்யூவியை ஏப்ரல் 19, 2018 அன்று அறிமுகப்படுத்தவுள்ளது பிஎம்டபிள்யூ. இந்த காரை, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற `2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ'வில் காட்சிப்படுத்தப்பட்டது தெரிந்ததே. எப்படி இருக்கிறது முற்றிலும் புதிய பிஎம்டபிள்யூ X3?

டிசைன்

பிஎம்டபிள்யூ

இந்த எஸ்யூவியை நேரில் பார்த்தபோது அசப்பில் முந்தைய மாடலைப்போலவே இருந்தது. என்றாலும், கிரில்லிலிருந்து தனித்து நிற்கும் பெரிய LED  ஹெட்லைட், L வடிவ LED டெயில் லைட், பின்பக்க ஸ்பாய்லர், கட்டுமஸ்தான பானெட், பக்கவாட்டு பாடிலைன்கள் என வித்தியாசங்கள் தென்பட்டன. மேலும் பிஎம்டபிள்யூ கார்களுக்கே உரித்தான Kidney கிரில், இங்கே Active Louvers உடன் அகலமாக இருந்தது. புதிய Cluster Architecture (CLAR) பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவதால், முந்தைய மாடலைவிடப் புதிய X3 இறுக்கமான சேஸியைக்கொண்டிருப்பதுடன், இடவசதியை அதிகரிக்கும் பொருட்டு வீல்பேஸ் 54மிமீ முன்னேறியிருக்கிறது (2,864மிமீ). 

BMW

அதேபோல அளவுகளிலும் மாற்றம் இருந்தாலும் (61மிமீ கூடுதல் நீளம் - 4,716மிமீ, 17மிமீ கூடுதல் அகலம் - 1,897மிமீ, 16மிமீ கூடுதல் உயரம் - 1,676மிமீ), அலுமினியத்தால் ஆன கதவுகள் மற்றும் பானெட் - திடமான ஸ்டீல்லால் ஆன ஃப்ளோர் பேன் என எடை குறைவான உலோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், காரின் எடை முன்பைவிட 55 கிலோ குறைந்துள்ளது. மேலும் 50:50 பாணியில் காரின் எடை, இரண்டு ஆக்ஸில்களுக்கும் சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆக, முதல் தலைமுறை X3 எஸ்யூவியின் ஓட்டுதல் அனுபவம், இரண்டாம் தலைமுறை X3 எஸ்யூவியின் சொகுசு ஆகியவற்றை, அதிக தொழில்நுட்பங்களுடன்கூடிய மூன்றாம் தலைமுறை X3 எஸ்யூவியில் இணைத்திருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. காருக்கு அடியில் க்ளாடிங் இருப்பது, ஏரோடைனமிக்ஸில் உதவும்.

இன்ஜின்

X3

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலின் xDrive20i (184bhp - 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்), xDrive20d (190bhp - 2.0 லிட்டர் B48, 4 சிலிண்டர் டீசல் இன்ஜின்) மற்றும் xDrive30i (248bhp - 3.0 லிட்டர் B58, 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்) ஆகிய வேரியன்ட்களில் பொருத்தப்பட்டுள்ள டர்போ இன்ஜின் - 8 ஸ்பீடு ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே, புதிய X3 எஸ்யூவியிலும் தொடர்கின்றன. 2020-ம் ஆண்டில் வரவிருக்கும் BS-6 மாசு விதிகளை மனதில்வைத்து, X3 40e எனும் வேரியன்ட்டில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - எலெக்ட்ரிக் மோட்டார் கூட்டணியில் ஹைபிரீடு மாடலையும் இந்தியாவில் பிஎம்டபிள்யூ விற்பனைக்குக் கொண்டுவரலாம். 

X3 Concept

பின்னாளில் மெர்சிடீஸ் AMG GLC 43 கூபே காருக்குப் போட்டியாக,  xDrive30d (265bhp - டீசல்) மற்றும் xDrive40i (360bhp - பெட்ரோல்) ஆகிய ட்வின் டர்போ இன்ஜின் -  ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன்,  புதிய X3 எஸ்யூவி களமிறங்குவதற்கான சாத்தியங்கள் அதிகம்! இது M Sport பேக்கேஜுடன் வெளிவரலாம். அனைத்து இன்ஜின் - கியர்பாக்ஸ் கூட்டணியிலும், xDrive 4 வீல் டிரைவ் ஸ்டாண்டர்டாக இருப்பது பெரிய ப்ளஸ்.


சிறப்பம்சங்கள்

SUV

முற்றிலும் புதிய மாடல் என்பதால், தொழில்நுட்பத்தில் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது X3. Touch - Gesture - Voice கன்ட்ரோல்களுடன்கூடிய Floating பாணி 10.2 இன்ச் iDrive இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் டேம்பர்கள், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே (HUD), 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் ஆகியவை இதற்கான உதாரணங்கள். இவற்றில் பெரும்பாலான வசதிகள், 5 சீரிஸ் செடானில் இருப்பவை என்பதை குறிப்பிட்டாக வேண்டும். 

பென்ஸ்

காரின் உள்ளே, வெளியே கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதால், தற்போதைய மாடலைவிட புதிய X3 எஸ்யூவியின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால், சென்னையில் இருக்கும் தனது தொழிற்சாலையில் புதிய X3 அசெம்பிள் செய்யப்படலாம் என்பதால், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதிரடி விலையை இந்த பிஎம்டபிள்யூ மிட்சைஸ் லக்ஸூரி எஸ்யூவி கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

Benz

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement