பாப் கட், ஹால்டர் நெக், புடவையில் புதுமை... சமந்தாவின் லேட்டஸ்ட் ஃபேஷன்!

திருமணம் வரை `ஹீரோயின்', அதன் பிறகு `அம்மா' கதாபாத்திரம்தான் என்கிற கோட்பாட்டை, பாலிவுட்டை தொடர்ந்து தற்போது கோலிவுட்டும் முறியடித்துவருகிறது. அந்த வகையில் சமந்தா `டாப் ஸ்டார்'. திருமணமான பிறகும் `ஹீரோயின்', அதுவும் டாப் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். அதிக ரசிகர்களைக்கொண்டிருக்கும் சமந்தா, புகழின் உச்சத்தில் இருக்கும்போதே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாகசைதன்யாவை மணந்தார். நடிப்பில் மட்டுமல்ல, அவரின் ஃபேஷன் சென்ஸுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் சமந்தாவின் ஸ்டைல்தான் அங்கே `ஹாட் நியூஸ்'. விழாவுக்கு ஏற்ப அவரின் ஆடை, ஆபரணங்களின் தேர்வு மிகவும் நேர்த்தியாக இருக்கும். அனைவராலும் பின்பற்றக்கூடிய வகையில், எளிமையாகவும் அதே சமயம் புதுமையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சமந்தாவின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் என்னென்ன என்பதைப் பார்ப்போமா!


ஐவரி அனார்க்கலி:

சமந்தா

நிறத்தைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்துபவர் சமந்தா. திருமணம், பார்ட்டி, சக்சஸ் மீட் என நிகழ்வுகளில் இருக்கும் லைட்டிங்குக்கு ஏற்றவாறு நிறங்களைத் தேர்ந்தெடுப்பதில் கில்லாடி. அந்த வகையில், இந்த ஐவரி நிற அனார்க்கலி செட் காலை நேர நிகழ்ச்சிகளுக்கு ஏற்றது. ஆடை முழுவதிலும் படர்ந்திருக்கும் அழகான எம்ப்ராய்டரி டிசைன் க்ளாசிக் தோற்றத்தைத் தருகிறது. அதற்கேற்ற வகையில், `பண்' கொண்டையிட்டு அதைச் சுற்றி மல்லிகைப்பூ பார்ப்பதற்கு அவ்வளவு அழகு! இணை ஆபரணங்கள் ஏதுமின்றி, `சாண்ட்பாலி' கம்மல் மட்டும் அணிந்து எளிய `எத்னிக்' தோற்றத்தை தன்வசமாக்கியுள்ளார்.


`பாப் கட் (Bob Cut)' மற்றும் ஹால்டர் நெக்:

Halter Neck Blouse

`புடவை' என்றாலே அதை அடையாளப்படுத்த பின்னலிட்ட சிகை, அலங்கரிக்க மல்லிகைப்பூ, நெற்றியில் பொட்டு என்று தயாராகிவிடுவோம். அனைத்து ஸ்டீரியோ டைப்புகளையும் (Stereo type) உடைத்து, புடவைக்குப் புதிய தோற்றத்தைக் கொடுத்துள்ளார் சமந்தா. கழுத்தளவு வரை மட்டுமே நீண்டிருக்கும் ஹேர்ஸ்டைல், `பாப் கட்'. வெஸ்டர்ன் ஆடைகளுக்கே உரித்தான ஹேர்ஸ்டைல் இது. இதனுடன் புடவை அணிந்தால், விகாரமான தோற்றம் உண்டாகுமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும். சமந்தாவின் `ஹால்டர் நெக் (Halter Neck)' பிளவுஸ், எழுந்த சந்தேகத்தின் பதில். `ஹால்டர் நெக்', வெஸ்டர்ன் வகை கழுத்து டிசைன்களுள் ஒன்று. இதை புடவை பிளவுஸ் டிசைனில் பொருத்துவதால், புடவை, பாப் கட்டுக்குச் சரியான ஜோடி ஆகிறது. இந்த நெக் டிசைன் கழுத்தை ஒட்டி வருவதால், நெக்லஸ், சோக்கர் (Choker) போன்ற அணிகலன்கள் அணிய அவசியமில்லை.


பொஹீமியன் ஸ்டைல் (Bohemian Style):

Bohemian Fashion

வடிவியல், மங்கா, பிளைன் முதலிய வழக்கமான டிசைன்கள் இல்லாமல், வழக்கத்துக்கு மாறாக உருவாக்கப்படும் டிசைன்கள் `பொஹீமியன் டிசைன்'. தனிப்பட்ட வித்தியாசமான தோற்றத்தை உருவாக்குவதில், இது என்றைக்கும் தோற்றதில்லை. அதிலும் சமந்தாவின் ஸ்டைல் தனிதான். புடவையின் பிளவுஸ் என்றாலே உடலை ஒட்டித்தான் இருக்க வேண்டுமா? சிறிதளவு தளர்வாய் இருந்தாலே இளைஞர்கள் அவ்வளவு சங்கடப்படுவார்கள். ஆனால், சமந்தாவின் இந்த பொஹீமியன் வகை புடவை, இந்தியப் பெண்களின் புடவைக்கான அனைத்துக் கோட்பாடுகளையும் உடைத்துள்ளது என்றாலும் அழகில் மெருகேறியுள்ளது. இதுபோன்ற டிசைன்களுக்கு `பிளாக் மெட்டாலிக்' ஆபரணங்களே சிறந்தது. அதற்கேற்ற வகையில் கனமான வேலைப்பாடுகள் நிறைந்த `சோக்கர்' அணிந்திருக்கிறார் சமந்தா.


போட் நெக் பிளவுஸ்:

Boat Neck Blouse

பொதுவாகவே கழுத்தை ஒட்டி அணியப்படும் ஆடைகள் பருமனான உடலுக்கு ஏற்றதல்ல. ஏனெனில், அது மேலும் பருமனாகக் காட்டும். அந்த வகையில் போட் நெக் மெலிந்த தோற்றத்தைக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே ஏற்றது. இந்த ஆண்டு பேஸ்டல் வண்ணங்களுக்கான ஆண்டு. பேஸ்டல் பிங்க் மற்றும் பச்சை வண்ணத்தில் இந்தக் கைத்தறி ஆடையை சமந்தா உடுத்தியிருக்கும் விதம், புதுமை. போட் நெக் என்பதால், கழுத்தில் அணிகலன்கள் அணியத் தேவையில்லை. அதிக வேலைப்பாடுகளுடன்கூடிய சிகை அலங்காரம் புடவைக்கு அவசியமில்லை, சாதாரண `போனி டைல் (PonyTail)' போதும் என்பதை தன் மெருகேற்றியத் தோற்றத்தில் சொல்லியிருக்கிறார் சமந்தா.

`எத்னிக்' என்றால் `பாரம்பர்யம்' எனலாம். அந்த வகையில் நம் நாட்டின் பாரம்பர்ய உடை எனக் கருதப்படும் `புடவை' மற்றும் `சல்வார் கமீஸில்' புதுமையை எவ்வாறு புகுத்தலாம் என்பதை சமந்தாவின் ஃபேஷன் சென்ஸ் சொல்லிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!