Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

* உலகையே உலுக்கியிருக்கிறது 5 வயது சிறுவன் ஓம்ரான் தாக்னீஷின் புகைப்படம். உள்நாட்டுப் போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சிரியாவில், கடந்த வாரம் குவாட்ரிஜ் என்ற பகுதியில் நடந்த விமானத் தாக்குதலில் பல கட்டடங்கள் சேதமடைந்து தரைமட்டமாகின. அதில் ஒரு கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன்தான் ஓம்ரான் தாக்னீஷ். தலையில் இருந்து ரத்தம் கொட்ட, அழுகையோ, சத்தமோ இன்றி அமைதியாக வெறித்துப்பார்த்தபடி ஆம்புலன்ஸ் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அந்தச் சிறுவனின் பார்வை, கொடூர போருக்கு மௌனசாட்சியாகியிருக்கிறது. திருந்துங்க மக்களே!

* உத்தரப்பிரதேசத் தேர்தல் வேலைகள் ஆரம்பித்ததில் இருந்தே காங்கிரஸுக்கு அடிமேல் அடி விழுகிறது. 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி வெற்றி, பீகாரில் நிதிஷ்குமார் வெற்றிக்கு ஆலோசகராகச் செயல்பட்ட பிரஷாந்த் கிஷோர்தான் இப்போது காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகர். அவரின் சாய்ஸ்படிதான் ஷீலா தீட்ஷித் உ.பி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், ஷீலா தீட்ஷித்துக்கு உத்தரப்பிரதேசத் தலைவர்கள் ரெட் ஃபேஸ் காட்ட, அவரும் உடல்நிலைப் பிரச்னையால் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. இதற்கு இடையே சோனியாவுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் சோர்ந்துபோயிருக்கிறது காங்கிரஸ். ராகுல்ஜி... கமான்!

இன்பாக்ஸ்

* பாலிவுட்டின் பயோபிக் ட்ரெண்ட், இப்போது கேரளாவுக்கும் பரவியிருக்கிறது. ஓவியர் பத்மினியின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. பெண் ஓவியர்களே இல்லாத 1960-களில் சென்னை கவின்கலைக் கல்லூரியில் படித்து உலகப் புகழ்பெற்ற ஓவியங்களைத் தீட்டிய பத்மினி, தனது 29-வது வயதில் பிரசவிக்கும்போதே இறந்துபோனர். காலம் கடந்தும் போற்றப்பட்டும் பத்மினியின் வாழ்க்கை வரலாற்றில், பத்மினியாக அனுமோல் நடித்திருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வருகிறது. இன்ஸ்பைரிங்!

இன்பாக்ஸ்

* ஒலிம்பிக் பரபரப்புகளைத் தாண்டி கடந்த வாரம் ஆன்லைனில் ஹிட் அடித்தவர் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி. `கபாலி' பட போஸ்டரில் `ஸ்டைலா... கெத்தா...' ரஜினி உட்கார்ந்தி ருக்கும் அதே போஸில் தோனியும் ஒரு போட்டோ க்ளிக்கி இன்ஸ்டாகிராமில் போட, படம் செம வைரல். `தலைவரைப் போல போஸ் கொடுக்க ட்ரை பண்ணியி ருக்கேன்' என்ற தோனியின் கமென்ட்டுக்கு, `தல... நீயும் தலைவர் ஃபேனா?', `ரஜினி பஸ் டிக்கெட் கலெக்டராக இருந்தவர். நீங்க ட்ரெய்ன் டிக்கெட் கலெக்டர்' என பதில் கமென்ட்டுகள் குவிய, கேப்டன் செம ஹேப்பி. சூப்பர் ஸ்டார்ஸ்!

இன்பாக்ஸ்

பெண் அரசியல்வாதிகளில் பிரேமலதா விஜயகாந்த், பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இருவருமே செம தோஸ்த்.இருவரின் வீடுமே அருகருகில் இருப்பதால், அடிக்கடி சந்தித்து அரசியல் மேட்டர்களை அப்டேட்டிக் கொள்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல், தொண்டர்களைப் பெருக்க புதுப்புது ஐடியாக்களைப் பிடிப்பதுதான் இருவருக்குமே ஹாபி. நண்பேன்டா!

இன்பாக்ஸ்

புதிய ஹீரோயின்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சல்மான் கான் வேட்டைக்காரர். கத்ரீனா கைஃப், ஹஸல் கீச், சோனாக்‌ஷி சின்ஹா, ஸரீன் கான் வரிசையில் அடுத்ததாக சீன நடிகை ஜூஜூவை நடிக்க அழைத்துவந்திருக்கிறார் சல்மான். கபீர்கான் இயக்கும் `டியூப்லைட்' படத்தில் சல்மானைக் காதலிக்கப்போவது ஜூஜூ. சீனாவின் ஹாட் ஸ்டார். ஹாலிவுட் சீரியல்களிலும் நடித்திருக்கும் ஜூஜூவுக்கு, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள். ஹூவான் யிங்!

* பாலிவுட்டின் லேட்டஸ்ட் ஃப்ளாப் ஸ்டார் ரன்பீர் கபூர். கத்ரீனாவுடனான காதல் தோல்வியால், படப்பிடிப்புகளில் ரன்பீர் சரியாகக் கலந்துகொள்வது இல்லை. `தொடர்தோல்வி களால் துவண்டுபோயிருக்கிறேன். நடிகர்கள் எவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. என் பெற்றோருக்குப் பிறகு என்னை அதிகமாக ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தியவர் கத்ரீனா கைஃப். நான் அவரை ரொம்ப மிஸ் பண்றேன்' என ரன்பீர் ஃபீலாகியிருக்கிறார். காதல் வளர்த்தேன்!