Published:Updated:

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ப.சண்முகம் காலமானார்!

Vikatan Correspondent
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ப.சண்முகம் காலமானார்!
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ப.சண்முகம் காலமானார்!
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ப.சண்முகம் காலமானார்!

புதுச்சேரி: மூத்த காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வருமான  ப.சண்முகம் இன்று முற்பகல் 12 மணியளவில் காலமானார்.

84 வயதான சண்முகம் வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தத நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்   இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சண்முகம், 23 ஆண்டுகளாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.  இரண்டு முறை முதல்வராகவும் நான்கு முறை எம்.பி-யாகவும் இருந்துள்ளார். திருமணம்  செய்துகொள்ளாமல் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்தவர், வயது

##~~##
மூப்பு காரணமாக  தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊரான  காரைக்காலில் விவசாயம் செய்து வந்தார்.
நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவரான சண்முகம், காமராஜர் மூலம் இந்திராகாந்தி  பிரதமராக பெரும் உதவி செய்தார். ஆனாலும் கடைசிவரை நேரு குடும்பத்தின்  செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ளாமல் மிக எளிமையாக வாழ்ந்த பெருமைக்குரியவர்  ப.சண்முகம்!