Published:Updated:

`சிசுகொலை பண்ணல...காப்பாத்தி இருக்கேன்'- 2,000 சுகப்பிரசவங்களைச் செய்த வீரம்மாள்

``நான் பெண் சிசு கொலை பண்ணியதில்லை. நல்ல மருந்தை கொடுத்து காப்பாத்தியிருக்கிறேன். அப்படி நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகளைக் காபாத்தியிருப்பேன்" என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார் வீரம்மாள்.

சென்னையைச் சேர்ந்த இந்தப் பாட்டி, 2000 க்கும் மேற்பட்ட பெண்களுக்குச் சுகப்பிரசவங்களைச் செய்து, தாயையும், சேயையும் `பாட்டி வைத்தியம்' முறையில் நலமாக்கியவர். கரூர் மாவட்டம், வானகத்தில் சமீபத்தில் நடந்த நம்மாழ்வார் பிறந்தநாள் விழாவில் அவரை அழைத்து விருது கொடுத்து கௌரவித்தார்கள். இன்று சுகப்பிரசவங்கள் மருத்துவமனைகளில் அருகி போய், சிசேரியன் முறையில் குழந்தைகளைப் பிரசவிக்க வைக்கும் முறை சர்வ சாதாரணமாகிவிட்ட சூழலில், இந்தப் பாட்டியை அழைத்து வந்து பேச வைத்தது அங்கு வந்திருந்த பெண்களுக்கு புது உத்வேகத்தை கொடுத்தது.

நிகழ்ச்சி தொகுப்பாளினி, வீரம்மாளிடம், ``பாட்டி சுமார் நீங்க எத்தனை சுகப்பிரசவங்களைப் பார்த்திருப்பீங்க?" என்று கேட்டார். அதற்கு வீரம்மாள், ``நான் தமிழ்நாடு முழுக்கப் போய் பிரசவம் பார்த்திருக்கிறேன். எல்லாமே சுகப்பிரசவங்கள்தான். தலை கீழா இருக்கு, குழந்தை பிரண்டு கிடக்கு'ன்னு எந்தச் சிக்கலான கேஸையும், சரியாக்கி  சுகப்பிரசவம் மூலமாகவே குழந்தை பெற வைப்பேன். ஆனால், எத்தனை பேருக்குப் பிரசவம் பார்த்தேன்னு கணக்கு வச்சுக்குறதுல்ல. எப்படியும், நான் பார்த்த சுகப்பிரசவங்கள் 2000த்தை தாண்டும்" என்று சொல்ல, கூட்டத்தில் ஆரவாரம்.

அடுத்து, தொகுப்பாளினி, ``யாராச்சும் உங்களை பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்லச் சொல்லியிருக்கிறார்களா?. அப்படி நீங்க கள்ளிப்பால் ஊத்தி இருக்கிறீர்களா?" என்று கேட்க, ``எனக்கு உயிரை தாயிடமிருந்து பிரிக்கிறதுதான் வேலை. கொல்லுறது இல்லை. அந்த பாவத்தை நான் இதுவரை செஞ்சதில்லை. ஆனால், `எனக்குப் பெண் குழந்தை கருவா தரிச்சுருக்கு. கள்ளிப்பால் ஊத்தி கொன்னுருங்க'ன்னு சொல்வாங்க. நான் அவங்களுக்குப் போக்குகாட்டி, கள்ளிப்பாலை ஊத்தாம, நல்ல மருந்தை ஊத்தி, அந்தப் பெண் சிசுவைக் காப்பாத்தியிருக்கேன். அப்புறம் அவங்க கேட்கிறப்ப, `தெய்வ குழந்தை இது. அதான் பொழச்சுட்டு. இதை இனி கொன்னா, உங்களுக்குப் பிரச்னை வரும்'ன்னு சொல்லிருவேன். இப்படி நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறேன்" என்றபோது, மறுபடியும் கூட்டத்தில் பலத்த கைத்தட்டல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism