Published:Updated:

மாமல்லபுரம் வழியாக புதுவைக்கு ரயில்!

Vikatan Correspondent
மாமல்லபுரம் வழியாக புதுவைக்கு ரயில்!
மாமல்லபுரம் வழியாக புதுவைக்கு ரயில்!
மாமல்லபுரம் வழியாக புதுவைக்கு ரயில்!

புதுச்சேரி:  சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு மாமல்லபுரம் வழியாக ரயில் பாதை  அமைக்க நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் தொடங்கி இருக்கின்றன.

மத்திய அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு  மாமல்லபுரம் வழியாக ரயில்பாதை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான நில ஆர்ஜிதம்  செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள 2013-2014 ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில்  புதுவையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயில் இயக்குவதற்கான அறிவிப்பு  வெளியாகலாம். புதுச்சேரியில் இருந்து மங்களூருக்கு வாரத்துக்கு ஒரு முறை செல்லும்  ரயிலை, வாரத்தில் 3 நாட்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெங்களூர்-சேலம் ரயில், காரைக்கால் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. புதுவையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் ரயில், மதியம் புறப்பட்டு  நள்ளிரவில் திருப்பதியை அடைகிறது. 

இதனால், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்க, இந்த ரயிலை விரைவு ரயிலாக  மாற்ற  ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக,  மத்திய  ரயில்வே அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்" என்றார்.