Published:Updated:

ரயில் கட்டணம் மீண்டும் உயரும்?

Vikatan Correspondent
ரயில் கட்டணம் மீண்டும் உயரும்?
ரயில் கட்டணம் மீண்டும் உயரும்?
ரயில் கட்டணம் மீண்டும் உயரும்?

டெல்லி: டீசல் விலை உயர்வு காரணமாக ரயில் கட்டணம் மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

டீசல் விலை கடந்த மாதம் 50 காசு உயர்த்தப்பட்டது. இதையடுத்து,  ரயில்வே துறைக்கு ரூ.3300 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது. இதைச் சமாளிக்க, ரயில் டிக்கெட் கட்டணம் உயத்தப்பட்டது.

இந்நிலையில்,  இந்த மாதமும் டீசல் விலை உயரும் எனத் தெரிகிறது. அதனால், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து,  வரும் 26 ஆம்  தேதி தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று, ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.