Published:Updated:

'இழிவுப்படுத்திவிட்டார்!'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'இழிவுப்படுத்திவிட்டார்!'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்
'இழிவுப்படுத்திவிட்டார்!'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்

'இழிவுப்படுத்திவிட்டார்!'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எஸ்.வி.சேகர் மீது கமிஷனர் அலுவலகத்தில் பெண் பத்திரிகையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

'இழிவுப்படுத்திவிட்டார்!'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்

தமிழக ஆளுநர், பெண் பத்திரிகை நிருபரின் கன்னத்தைத் தட்டிய விவகாரம் தொடர்பாக, ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார், அந்தக் கருத்தை பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். பதிவிட்டவரைவிட, எஸ்.வி.சேகரின் பகிர்வுக்குப் பிறகு, அந்தக் கருத்து ஊடகத்தினரிடமும், பெண்கள் அமைப்பினர், பெண் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடும் எதிர்ப்பை அடுத்து, எஸ்.வி.சேகர் அந்தக் கருத்தை தனது முகநூல் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.

'இழிவுப்படுத்திவிட்டார்!'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்

இதைத் தொடர்ந்து, தான் வேறு ஒருவரின் கருத்தைப் படிக்காமல் தவறுதலாகப் பகிர்ந்ததாகவும், இதனால் மனவருத்தம் அடைந்துள்ள அனைத்துப் பெண் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்பதாகக் கடிதம் ஒன்றை வெளியிட்டார். இருப்பினும், அவரின் கருத்துக்கு  எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன. 

இந்நிலையில், ஆளுநர்மீது புகார் தெரிவித்த பெண் பத்திரிகையாளர், எஸ்.வி.சேகரின் கருத்துக்குக் கண்டம் தெரிவித்து, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் கடிதத்தில், “பெண் பத்திரிகையாளரான என்னையும், என்னைப் போன்ற சக பத்திரிகையாளர்களையும் தவறாக சித்திரித்து, அவமானப்படுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, பெண்களைக் கேவலப்படுத்தி முகநூலில் கருத்துப் பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்''  எனக் குறிப்பிட்டுள்ளார்.

'இழிவுப்படுத்திவிட்டார்!'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு