பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

* `டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை மேன் ஆஃப் தி சீரிஸ் விருது வென்றவர்' என்ற சாதனைப் பட்டியலில் சச்சின், ஷேவாக்கை பின்னுக்குத்தள்ளி, உலக சாதனை செய்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். 74 தொடர்களில் விளையாடி சச்சின் டெண்டுல்கர் 5 முறையும், 39 தொடர்களில் விளையாடி ஷேவாக் 5 முறையும் வென்ற மேன் ஆஃப் தி சீரிஸ் விருதை, வெறும் 13 தொடர்கள் 36 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 6 முறை வென்றிருக்கிறார் அஷ்வின். கலக்குங்க ப்ரோ!

இன்பாக்ஸ்

* உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் டாப் டென் பட்டியலில் இடம்பிடித்து, சாதனை படைத்திருக்கிறார் தீபிகா படுகோன். வருடத்துக்கு 67.70 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் தீபிகா. முதல் இடத்தில் இருக்கிறார் ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ். அவரது ஆண்டு வருமானம் 308 கோடி ரூபாய். மெலிஸா மெக்கார்த்தி, ஸ்கார்லட் ஜோஹன்சன் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடிக்க, ஏஞ்சலினா ஜோலிக்கு டாப் டென்னில் இடம் இல்லை. தீபிகா ராக்ஸ்!

இன்பாக்ஸ்

* `லெட்ஸ் டேக் எ செல்ஃபி பாய்ஸ்’ என ஏஞ்சலா நிக்கோல் அழைத்தால் ஒரு பய வர மாட்டான். காரணம் இதுதான்... ரஷ்யாவைச் சேர்ந்த ஏஞ்சலாவுக்குப் பொழுதுபோக்கே போட்டோக்கள் எடுப்பதுதான். ஆனால், உதட்டைக் குவித்து உம்மா செல்ஃபியோ, இரண்டு விரல்களைக் காட்டும் விக்டரி போட்டோவோ அம்மணிக்குப் பிடிக்காது. உயரமான இடங்களுக்குச் சென்று விளிம்புகளில் நின்றுகொண்டு எடுப்பதுதான் ஏஞ்சலா ஸ்டைல். இன்ஸ்டாகிராமில் இந்த டெரர் பெண்ணுக்குக் குவிகின்றன லைக்ஸும் ஹார்ட்ஸூம். டெரர் பேபி!

இன்பாக்ஸ்

* `ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்டு’ நாவலுக்குப் பிறகு சேத்தன் பகத் எழுதியிருக்கும் அடுத்த புத்தகம் `ஒன் இண்டியன் கேர்ள்’. அதற்கான டீஸர் அறிவிப்புதான் விஷயமே. `ஹாய்... நான் ராதிகா மேத்தா. எனக்கு இந்த வாரத்தில் திருமணம். என் கதையைப் படிப்பதற்கு நன்றி. எதுக்கும் நான் உங்களை எச்சரிக்கறேன். உங்களுக்கு என்னை அதிகம் பிடிக்காமல் போறதுக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கு. ஒன்று... நான் நிறையப் பணம் சம்பாதிக்கறேன்; ரெண்டு... எல்லாத்துலயும் எனக்கு ஒரு கருத்து இருக்கு; மூணு... நான் இதுக்கு முன்னாடியே செக்ஸ் வெச்சிருக்கேன்’ எனத் தொடர்கிறது அந்த டீஸரில் வரும் கதை. இந்த முறை ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதியிருக்கிறார் சேத்தன் பகத். புத்தகம் அக்டோபர் 1 ரிலீஸ். செம தல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு