Published:Updated:

பெரியதாழையில் கடல் சீற்றத்தால் தடுப்புச்சுவர் உடைப்பு - மக்கள் முகாமில் தங்கவைப்பு

இ.கார்த்திகேயன்
பெரியதாழையில் கடல் சீற்றத்தால் தடுப்புச்சுவர் உடைப்பு - மக்கள் முகாமில் தங்கவைப்பு
பெரியதாழையில் கடல் சீற்றத்தால் தடுப்புச்சுவர் உடைப்பு - மக்கள் முகாமில் தங்கவைப்பு

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் தடுப்புச்சுவர் உடைந்தது. இதனால், கடற்கரைப் பகுதியில் உள்ள 82 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த 450 பேர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

பெரியதாழையில் கடல் சீற்றத்தால் தடுப்புச்சுவர் உடைப்பு - மக்கள் முகாமில் தங்கவைப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ளது பெரியதாழை. மீனவ கிராமப் பகுதியான இங்கு, 400-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள்மூலம் மீனவர்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். கடல் சீற்றம் ஏற்படும்போது, கடல் நீர் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில், மீனவர்களின் கோரிக்கையின்படி தூண்டில் வளைவு அமைக்கும் பணி, கடந்த ஆண்டு தொடங்கியது. பெரியதாழை மேற்குப் பகுதியில், 800 மீட்டர் தூரத்துக்கு தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. இதேபோல, கிழக்குப் பகுதியிலும், 200 மீட்டர் தூரத்துக்கு தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. 

பெரியதாழையில் கடல் சீற்றத்தால் தடுப்புச்சுவர் உடைப்பு - மக்கள் முகாமில் தங்கவைப்பு

இந்நிலையில், வானிலை மாற்றம் காரணமாக கன்னியாகுமரி, சாத்தான்குளம், பெரியதாழை கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது. பெரியதாழை கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தூண்டில் வளைவு மற்றும் குடியிருப்புப் பகுதி இடையே உள்ள தடுப்புச்சுவரில் கடல் சீற்றத்தால் உடைப்பு ஏற்பட்டது. இதனால், கடல்நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டது.   பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரைப் பகுதியில் உள்ள 82 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 450 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அக்கிராமத்தில் உள்ள சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பெரியதாழையில் கடல் சீற்றத்தால் தடுப்புச்சுவர் உடைப்பு - மக்கள் முகாமில் தங்கவைப்பு

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ``பெரியதாழை கிழக்குப் பகுதியில், 200 மீட்டர் தூரத்தில்தான் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருகிறது. தூண்டில் வளைவு தூரம் குறைவாக இருப்பதால்தான் கடல்  சீற்றம் அதிகமாக ஏற்படுகிறது. எனவே, தூண்டில் வளைவின் நீளத்தை அதிகப்படுத்த வேண்டும். அத்துடன், இப்பகுதியில் நிரந்தரமாக சிறிய மீன்பிடித்துறைமுகம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்திவருகிறோம். இதற்கான ஆய்வுப் பணிகள் முடிவடைந்தும், அரசு நிதி ஒதுக்காததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது'' என்றனர்.