Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

* ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கும் இடையேயான போட்டாபோட்டி, அடுத்த தலைமுறையைத் தொட்டிருக்கிறது. சந்திரசேகர் ராவின் மகனும், தெலங்கானா மாநிலத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.டி.ராமா ராவ்தான் தெலங்கானா ஆட்சியிலும் கட்சியிலும் ஆல் இன் ஆல். அதேபோல சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளருமான நரலோகேஷ்தான் ஆந்திராவில் எல்லாமும். ஆந்திராவில் நர லோகேஷ் ஒரு புராஜெக்ட்டுக்கு பிளான் போடுகிறார் என்றால், அதற்கு முன்பாகவே ராமா ராவ் அந்தத் திட்டத்தைத் தொடங்குவது, ராமா ராவின் திட்டங்களை லோகேஷ் காலிசெய்வது... என அப்பாக்களைவிட ஆக்ரோஷமாகப் போட்டிபோடுகிறது நெக்ஸ்ட் ஜென். நீங்க நடத்துங்க!

இன்பாக்ஸ்

சினிமாவுக்கு பிரேக் போட்டுவிட்டு, ரோட் ட்ரிப் கிளம்பிவிட்டார் கல்கி கோச்சலின். அப்பாவும் பிரபல ட்ராவல் போட்டோகிராஃபருமான ஜோயல் கோச்சலினுடன், வடகிழக்கு மாநிலங்களில் 4,000 கிலோ மீட்டர் தூரம் பைக்கிலேயே பயணம்செய்திருக்கிறார் கல்கி. `பைக்கில் பயணம் செய்வதைத்தான் நான் உண்மையான ட்ராவல் என்பேன். காரில் ஏசி போட்டுவிட்டு, கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு பயணிக்கும்போது, அந்த ஊரின் அழகும் மண்வாசனையும் வெறும் காட்சிகளாகத்தான் மனதில் பதிவாகும். ஆனால், பைக் பயணத்தில்தான் அது உடலோடு கலந்த உணர்வுகளாகப் பதிவாகும். அடுத்தது இந்தியா முழுக்க பைக்கில் ட்ரிப் போவதுதான் என் பிளான்’ என ஃபீலிங்ஸ் கொட்டியிருக்கிறார் கல்கி. பைக் கேர்ள்!

இன்பாக்ஸ்

பொருளாதார முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த பிரேசில் ஜனாதிபதி தில்மா ரூசெஃப்பின் பதவி முழுவதுமாகப் பறிக்கப்பட்டிருக்கிறது. `என் ஆட்சிக் காலம் 2018-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், என்னைப் பதவிநீக்கம் செய்தது செல்லாது. ஒரு தேர்தலில்கூட தோல்வியடையாத என்னை, அரசியல் சதியால் பதவிநீக்கம் செய்திருக்கிறார்கள். நான் வீழ்ந்துவிட்டதாக நினைத்தால் ஏமாற்றம் அவர்களுக்குத்தான். நான் குட்பை சொல்ல இங்கே வரவில்லை. மீண்டும் சந்திப்போம்...’ என நாடாளுமன்ற வாசலில் நின்று அதிரடிப் பேட்டி தட்டியிருக்கிறார் தில்மா. தில் லேடி!

இன்பாக்ஸ்

* ஆஸ்கர் நாயகன் ஆகியிருக்கிறார் ஜாக்கி சான். 62 வயதான ஜாக்கி சான், புரூஸ் லீயின் `ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, `என்டர் தி டிராகன்’ படங்கள் மூலம் ஸ்டன்ட் கலைஞராக ஹாலிவுட்டுக்குள் அறிமுகமானவர். பின்னர் ஹீரோவாக, குங்ஃபூ கிங்காக ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். `போலீஸ் ஸ்டோரி', `ரஷ் ஹவர்', `ஹூ அம் ஐ' என உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடிகளைக் குவித்த பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்கள் இவருடையவை. ஆனால், ஆஸ்கர் விருதுக்கு இவரது ஒரு படம்கூடத் தேர்வாகவில்லை. இந்தக் குறையைப் போக்கும் வகையில் ஜாக்கி சானுக்கு, வாழ்நாள் சாதனைகளுக்கான கெளரவ ஆஸ்கர் விருதை அறிவித்திருக்கிறது ஆஸ்கர் கமிட்டி. வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்சலஸில் இந்த விருதைப் பெறுகிறார் ஜாக்கி. சல்யூட் ஜாக்கி!

இன்பாக்ஸ்

ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் கலக்கிய திபா கர்மாகர் இப்போது பரீட்சையில் பிஸி. அகர்தலாவில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ பொலிடிக்கல் சயின்ஸ் படித்துவரும் திபாவுக்கு, இப்போது செமஸ்டர் ஆரம்பித்துவிட்டது. `ஒலிம்பிக் ட்ரெய்னிங்கில் இருக்கும்போதே என் குடும்பத்தினரிடம் புத்தகங்கள், நோட்ஸ் கொண்டுவரச்சொல்லி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் படிப்பேன். அதனால் பரீட்சையைக் கண்டு பயம் இல்லை. நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறுவேன். நான் படிப்பிலும் நம்பர் ஒன்' என்கிறார் திபா கர்மாகர்.  ஆல் தி பெஸ்ட் திபா!