Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

* இந்தியாவில் உள்ள டாப்-10 சுற்றுலாத் தளங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. நுழைவுக் கட்டணங்களின் வருவாய் மூலம் தாஜ்மஹாலுக்கு முதல் இடம். 2014-15 ஆண்டில் 49 கோடி ரூபாய் வசூலுடன் தாஜ்மஹால் டாப்பில் இருக்க, 20 கோடியே 80 லட்சம் ரூபாயுடன் ஆக்ரா கோட்டை இரண்டாவது இடத்திலும், 20 கோடி ரூபாயுடன் குதூப் மினார் மூன்றாவது  இடத்தையும் பிடித்திருக்கிறது. தமிழகத்தின் நம்பர் 1 டூரிஸ்ட் ஸ்பாட் மாமல்லபுரம். 5 கோடியே 44 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொடுத்திருக்கிறது. காதலுக்கு மரியாதை.

இளம் கவிஞர்களை உருவாக்க, ஊக்குவிக்க, ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கவிதை வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில், 17 வயது  அமெரிக்கவாழ் தமிழ்ப் பெண் மாயா ஈஸ்வரன், மிச்சேல் ஒபாமாவின் முன்னிலையில் தன் கவிதையை ஆங்கிலத்தில் வாசித்தார். `என் வாழ்வில் நான் முக்கியமான ஒன்றை இழந்துவருகிறேன். என் தலை முடி உதிர்வதைப்போல, என் இன அடையாளமான தமிழை உதிர்த்து இழந்துகொண்டிருக்கிறேன். என் தாய்மொழியை நான் பேசியே மூன்று ஆண்டுகள் ஆகின்றன. என் தமிழை நான் முழுவதும் மறந்துவிடுவேனோ எனப் பயப்படுகிறேன்' என்ற மாயா ஈஸ்வரனின் கவிதையை மிஸஸ் ஒபாமா மிகவும் ரசித்து, சிறப்புப் பரிசும் அளித்திருக்கிறார். மகிழ்ச்சி!

இன்பாக்ஸ்

* மீண்டும் ஒரே பாடலில் வைரலாகியிருக்கிறார் கத்ரீனா கைஃப். `மை நேம் இஸ் ஷீலா' மூலம் பரபரப்பைக் கிளப்பிய கத்ரீனாவுக்கு கொஞ்ச வருஷமா மார்க்கெட் டல். ஆனால், சமீபத்தில் `பார் பார் தேகோ’ படத்தில் வெளியான `காலா சஸ்மா...' பாடல் வைரல் ஹிட்டடிக்க கத்ரீனா செம ஹேப்பி. இந்தியாவிலே அதிகமாகப் பார்க்கப்பட்ட பாடல் என ஒரே மாதத்தில் 7.5 கோடி வியூஸ் அள்ளி, `கபாலி' டீஸர் ரெக்கார்டை எல்லாம் காலி செய்திருக்கிறது `காலா சஸ்மா...'. கம்பேக் கத்ரீனா!

இன்பாக்ஸ்

ட்விட்டரில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். `ஹனிமூன் போக மனைவிக்கு பாஸ்போர்ட் கிடைக்கவில்லை’, `காரில் அதிகமாகப் புகை வருகிறது’ என ட்விட்டரில் எழுதப்படும் புகார்களுக்கு, உடனடி ஆக்‌ஷன் எடுக்கும் சுஷ்மா ஸ்வராஜைக் கலாய்க்க நினைத்தது ஆன்லைன் டீம். `உலகப்  பஞ்சாயத்தை எல்லாம் தீர்த்துவைக்கிற உங்க ட்விட்டர்  பக்கத்தை, ஏன் உங்க கணவர் இன்னும் பின்தொடரலை?' என  ஒருவர் கேட்க, இதற்கு சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் கௌஷல் தன் ட்விட்டர் பக்கத்தில், `45 வருஷமா பின்தொடர்றேன். ஆனால், எனக்கு இப்ப வரைக்கும் எந்த மாற்றமும் வரலை' எனப் பதில் போட,
`இந்த நகைச்சுவைதான் உங்க மணவாழக்கை மகிழ்ச்சிக்கு காரணம்' என ஃபாலோயர்ஸ் ஹார்ட்டீன் பட்டனைத் தட்டி வாழ்த்தியிருக்கிறார்கள். ட்விட்டர் குடும்பம்!

இன்பாக்ஸ்

உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுவர ராகுல் காந்தி எடுக்கும் முயற்சிகள் பலவும் சொதப்பலில் முடிய, சோர்ந்துபோய் இருக்கிறது உள்ளூர் காங்கிரஸ். உத்தரப்பிரதேசம் முழுக்க 2,500 கி.மீ தூரம் சுற்றுப்பயணம் செய்து `காட் சபா' என்ற பெயரில் விவசாயிகளைச் சந்திப்பது ராகுலின் திட்டம். அதாவது கட்டிலில் அமர்ந்து விவசாயிகளுடன் ராகுல் கலந்துரையாடுவார். கடந்தவாரம் ராகுலின் முதல் காட் சபா கூட்டம் டியோரியா என்ற இடத்தில் நடந்தது. இதற்காக 2,000 புதிய கட்டில்களை காங்கிரஸ் கட்சியினர் வாங்கியிருந்தனர். அதில், உட்கார்ந்து ராகுலின் பேச்சைக் கேட்க வந்தவர்கள் பலரும் கூட்டம் முடிந்ததும் கட்டில்களைத் தூக்கிக்கொண்டு பறக்க, `எல்லாம் போச்சே... போச்சே...' எனப் புலம்பிக்கொண்டிருக்கிறது காட் சபா கமிட்டி. ராகுல் எல்லாமே சீரியஸாத்தான் செய்றார்... ஆனா காமெடியில் முடிஞ்சிடுது என பா.ஜ.க-வும் தன் பங்குக்கு வெறுப்பேற்ற ஆரம்பித்திருக்கிறது. ராகுல்ஜி பாவம்!

இன்பாக்ஸ்

`விரைவில் நடிகை காவ்யா மாதவனைத் திருமணம் செய்யப்போகிறார் நடிகர் திலீப். திருமணத்துக்கு மகள் மீனாக்‌ஷி ஓ.கே சொல்லிவிட்டார்'என கேரள மீடியாவில் செய்தி பரவ, கொந்தளித்திருக்கிறார் திலீப். `என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். என் மகளை ஏன் இழுக்கிறீர்கள். ஏற்கெனவே மஞ்சு வாரியாரும் நானும் பிரிந்ததில் என் மகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள். இப்போது இதுபோன்ற செய்திகள் எழுதுவதன் மூலம் அவள் மனம் எப்படிப் பாதிக்கப்படும் என ஏன் யாரும் யோசிக்க மறுக்கிறீர்கள். நான் திருமணம் செய்ய முடிவெடுத்தால் நிச்சயம் எல்லோருக்கும் அறிவித்துவிட்டுத்தான் செய்வேன். என் வாழ்க்கையில் ரகசியங்களுக்கு இடம் இல்லை’ என தனது ஆதங்கத்தை ஃபேஸ்புக்கில் கொட்டியிருக்கிறார் திலீப். ரிலாக்ஸ் சேட்டன்!

இன்பாக்ஸ்

ஹாலிவுட்டில் இந்த ஆண்டின் பரபரப்பு  நடிகை யார் தெரியுமா? ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் க்ரெய்கின் மனைவி ரேச்சல் வீஸ்தான். `டினையல்', `தி லைட் பிட்வீன் ஓஷன்ஸ்' என ரேச்சல் நடித்து சமீபத்தில் வெளியான இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் எகிறியடிக்க, `கம்ப்ளீட் அன்நோன்', `மை கஸின் ரேச்சல்' என அடுத்த இரண்டு படங்களும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. `காதலி, மனைவி, அம்மா... என எல்லா ரோல்களிலுமே என்னால் நடிக்க முடியும்.
20 ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருக்கும் எனக்கு, நடிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. க்ரெய்க் ஓய்வெடுத்தாலும் என் நடிப்புக்கு ஓய்வே கிடையாது’ என அறிவித்திருக்கிறார் ரேச்சல். சூப்பரே!