ஷார்ட் ஹேர்ஸ்டைல்... முட்டிக்கு மேல் ஷார்ட்ஸ்... உயரமாகத் தெரிய இதை ஃபாலோ பண்ணுங்க! | Fashion tip for short men

வெளியிடப்பட்ட நேரம்: 08:44 (27/04/2018)

கடைசி தொடர்பு:09:17 (27/04/2018)

ஷார்ட் ஹேர்ஸ்டைல்... முட்டிக்கு மேல் ஷார்ட்ஸ்... உயரமாகத் தெரிய இதை ஃபாலோ பண்ணுங்க!

''எங்க உருவ அமைப்புக்கு ஏற்ற மாதிரி டிரெஸ்ஸே இல்லையா!'' என்பது, வழக்கமான உயரத்தைவிட சற்று குறைந்து இருப்பவர்களின் குமுறல். இதற்குக் காரணம், சாதாரணமான துணிக்கடைகளில்கூட உயரமானவர்களுக்கு ஏற்ற உருவ அளவில் ஆடைகள் இருப்பதுதான். சரியான நிறம், பேட்டர்ன், இணையாடைகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதன்மூலம், உயரம் குறைவு என்பதை மறைக்க முடியும். அதற்கான எளிய வழிமுறைகள் இங்கே!

உயரம்

நிறம்:

சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, கறுப்பு போன்ற 'அடர்த்தி'யான ஷேடுகளில் உங்கள் ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். அடர்த்தியான நிறத்துடன் மென்மையான ஷேடுகளை இணைத்துப் பயன்படுத்தலாம். இது, உயரமான மாயத் தோற்றத்தை உருவாக்கும். அதேபோல, 'Monochromatic Tone' என்றழைக்கப்படும் ஒரே வண்ணத்தின் ஷேடுகளைக்கொண்ட உடைகளையும் உடுத்தலாம். அதிலும், மென்மையான ஷேடுகொண்ட ஆடையை மேல் பாதியிலும், அடர்ந்த வண்ணமுடைய ஆடையை கீழ்ப்பாதியிலும் அணிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, 'கிரே' வண்ண மென்மையான ஷேடு சட்டைக்கு 'அடர்த்தி'யான ஷேடு பேன்ட் பக்கா மேட்ச்.

Dark shades

செங்குத்தான கோடுகளுடைய ஆடைகள்:

'Horizontal' கோடுகளுடைய ஆடைகளை நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும். இது தட்டையான உடலமைப்பை ஏற்படுத்தும். மேலும், உயரத்தைக் குறைத்துக் காட்டும். அதிகப்படியான எழுத்துகளோ, பிரின்ட் பேட்டர்ன்களோ இல்லாதா ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். 'செங்குத்தான' கோடுகளுடைய ஆடைகள் மிகவும் சிறந்தது. 'பிளைன்' அல்லது அகலமான Vertical கோடுகளுடைய ஆடைகளும் உடுத்தலாம். அதேநேரம் 'கட்டமிட்ட' ஆடை வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

Vertical Stripes

Tie:

நிறம், பேட்டர்ன்போலவே அதற்கேற்ற சரியான 'Tie'யைத் தேர்ந்தெடுப்பதும் மிக முக்கியம். அகலமான tie, நிச்சயம் உங்களுக்கானதல்ல. உடுத்தும் சட்டைக்கேற்ற நிறத்தில் மெல்லிய பட்டைகளுடைய tie-தான் சரியான சாய்ஸ். அகலமான tie, உங்களின் கழுத்து மற்றும் தோள்பட்டையைப் பாதியாக மாற்றியமைத்து, உயரத்தைக் குறைத்து, தட்டையான தோற்றத்தைத் தரும். எனவே, உயரத்தை அதிகப்படுத்திக்காட்டும் மெல்லிய tie-யை வெவ்வேறு அடர்த்தியான நிறங்களில் வாங்கிக்கொள்ளுங்கள்.

Right Tie

உடலையொட்டிய ஆடைகள்:

உடலமைப்புக்கு ஏற்ற, சரியான அளவில் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். தளர்ந்து இருக்கும் ஆடைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடல்வாகிற்கேற்ப, உடலையொட்டிய ஆடைகளை அணிவதால், உடல் சமமான அளவு விகிதத்தைப் பெறுகிறது. இதனால் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமின்றி நிறைவான தோற்றத்தைப் பெறுவீர்கள்.

Right clothing


மெல்லிய பெல்ட்:

பெரிய 'பக்குள் (Buckle)' உடைய பெல்ட் மற்றும் அகலமான பட்டைகொண்ட பெல்ட் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பெல்ட், உடலின் பாதி பாகத்தின் மையப்பகுதியில் அணிவதால், பெரிய அல்லது அகலமான பொருளைக்கொண்டு நிறைப்பதன்மூலம், உயரத்தின் பாதி அளவை ஆக்கிரமைத்துக்கொள்வது போன்ற மாயையை உருவாக்கிறது. மேலும், தட்டையான உருவத்தைக் கொடுக்கும். 'கறுப்பு' அல்லது 'பிரவுன்' வண்ணங்களில் மெல்லிய பெல்ட் உங்களுக்கேற்ற டிப்-டாப் தோற்றத்தைக் கொடுக்கும்.

Belt


டக்-இன்:

நீளமான கோட், ஷர்ட், டீ-ஷர்ட் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்களின் மேல்பாதி ஆடையின் விளிம்பு, உங்களின் தொடைப் பகுதிக்கு மேல்தான் இருக்க வேண்டும். நீண்டிருக்கும் ஆடை, நிச்சயம் உங்களின் உயரத்தைச் சுருக்கிக் காட்டும். சுருக்கமாகச் சொல்லப்போனால், உங்கள் பேன்ட் பாக்கெட்டின் பிளவு வரை மட்டுமே சட்டை அல்லது டீ-ஷர்ட்டின் விளிம்பு இருக்க வேண்டும். எனவே, டக்-இன் (Tuck -In) செய்துகொள்வது நல்லது.

Tucked - In


பேன்ட் Cuff தவிர்க்க வேண்டும்:

பேன்ட் நீளமாக இருப்பதால் மடித்துக்கொள்ளலாம் என எண்ணாதீர்கள். உங்களின் மிகப்பெரிய எதிரி இதுதான். கணுக்காலைத் தாண்டி நீண்டிருப்பதால், பேன்டின் விளிம்பை மடித்துவிட்டுக்கொள்வது, மேலும் உயரத்தைக் குறைத்துக் காட்டும். எனவே, சரியான அளவில் உங்களின் பேன்ட்டைத் தைத்துக்கொள்ளுங்கள். மெருகேற்றிய தோற்றம் பெற, பணத்துடன் சிறிது நேரத்தையும் செலவு செய்வதில் தவறில்லையே!

Avoid Pant Cuffs

முட்டிக்கு மேல் ஷார்ட்ஸ்:

விதவிதமான ஸ்டைலில் ஏராளமாகக் கிடைக்கிறது என்று 'ஷார்ட்ஸை' கண்களை மூடிகொண்டு வாங்கிக் குவித்துவிடாதீர்கள். முட்டிக்கும் கீழ் வரையில் நீண்டுள்ள 'ஷார்ட்ஸ்களுக்கு' பெரிய 'Nooo' சொல்லுங்கள். உங்களின் சரியான தேர்வு, 'ஷார்ட் ஷார்ட்ஸ்'. அதாவது, முட்டிக்கும்மேல் வரையிலுள்ள ஷார்ட்ஸ் மட்டுமே உங்களுக்கேற்றது.

Shorts

ஷார்ட் ஹேர்ஸ்டைல்:

நீளமாக முடி வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்தால், நிச்சயம் அது உங்களுக்கு ஏற்றதல்ல. நீண்டிருக்கும் முடி, உங்களின் தோள்பட்டையைப் பெரிதாகக் காட்டும். எனவே, உயரம் குறைந்த மாயையை உருவாக்கும். அழகாக 'ட்ரிம்' செய்த 'ஷார்ட் ஹேர்' உங்களுக்கான சரியான தீர்வு.

Right Posture

மேலும் சில டிப்ஸ்:

கூன் விழுந்ததுபோல், வளைந்த முதுகுடன் நடக்காதீர்கள். நிமிர்ந்த நடையைப் பின்பற்றுங்கள். V-Neck டீ-ஷர்ட்டுகளை அதிகம் பயன்படுத்துங்கள். ஷூக்களில், சிறிதளவு ஹீல்ஸ் வைத்து வாங்குங்கள். ஒரு வகையில் இதுவும் பல இடங்களில் உதவும்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close