'கூகுள் டூடில் கொண்டாடுகின்ற மஹாதேவி வர்மா யாரென்று தெரியுமா..?' #MahadeviVarma | google doodle celebrates jnanpith award winning poet mahadevi varma

வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (27/04/2018)

கடைசி தொடர்பு:15:54 (27/04/2018)

'கூகுள் டூடில் கொண்டாடுகின்ற மஹாதேவி வர்மா யாரென்று தெரியுமா..?' #MahadeviVarma

ழுத்தாளர் மஹாதேவி வர்மா 'ஞானபீட விருது' பெற்ற தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், கூகுள் டூடில் அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது. யார் இந்த மஹாதேவி வர்மா?

த்தரப் பிரதேச மாநிலம், பரூக்காபாத்தில் வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்தவர் மஹாதேவி வர்மா. 1916-ம் ஆண்டு, ஒன்பதாவது வயதில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தும் அம்மாவின் அரவணைப்பில் தாய் வீட்டிலேயே வளர்ந்தார். சிறு வயதிலேயே கவிதைகள் மீது ஆர்வம்கொண்டவர் மஹாதேவி. பள்ளியில் பயிலும்போது எழுதிய பல கவிதைகள், செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளன. இலக்கியத்தின் மீது தீராக்காதலுடன் இருந்தார். தன் தனிமையை புத்தக வாசிப்பின் மூலமும், கவிதை, உரைநடை மூலமும் நிறைவு பெறச் செய்தார்.

மஹாதேவி வர்மா

திருமணம் என்பது நமக்கு நாமே வகுத்துக்கொண்ட போலியான கட்டமைப்பு என்பதை உணர்ந்த மஹாதேவி, துறவு வாழ்க்கையை வாழத் தொடங்கினார். தன்னுடைய முழு அன்பையும் காதலையும், காகிதங்களிடமும் பேனா முனையிடமுமே காண்பித்தார். பள்ளிப் படிப்பையும் இளங்கலை பட்டப்படிப்பையும் முடித்தவர், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

வர் எழுதிய 'நீஹார்', 'ரஷ்மி' போன்ற கவிதைத் தொகுப்புகள், நூல்களாக வெளிவந்தன. கவிஞராக மட்டுமின்றி தன் திறமையைப் பல வழிகளில் வெளிப்படுத்த விரும்பினார். தன் கவிதைகளுக்கு தானே ஓவியங்களையும் தீட்டினார். கவிஞர், ஆசிரியர், ஓவியர், எழுத்தாளர் எனப் பன்முகத்துடன் மிளிர்ந்தார். அலகாபாத் மகிளா வித்யா பீடத்தின் முதல் தலைமை ஆசிரியராகப் பணி அமர்த்தப்பட்டார். பின்னாளில் அந்தப் பீடத்தில் வேந்தராகவும் பணியாற்றிய பெருமை அடைந்தார். பெண் கல்வி குறித்த விழிப்பு உணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்.

ரைநடையிலும் தன்னால் படைப்புகளை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், 'ஸ்ம்ருதி கீ ரேகாயே', 'அதீத் கே சல்சித்ரா' என்கிற மிகப்பெரிய படைப்புகளை கொடுத்தார். இன்றளவும் இந்தப் படைப்புகள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றன.

 

மஹாதேவி வர்மா

 

காத்மா காந்தி மீதான பற்றினால், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கினார். பெண் கல்வி மற்றும் பெண் விடுதலைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். சமூகப் பிரச்னைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறிப்பிடும் வகையில், 'ஸ்ருங்கலா கீ கடியா' என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு, பெரும் வரவேற்பைப் பெற்றது.

சையிலும் ஆர்வம்கொண்ட இவர், சிறந்த மொழிப்பெயர்ப்பாளரும் கூட. ஒரு சில நூல்களை இவர் மொழிப்பெயர்த்திருக்கிறார். அந்த புத்தகங்களும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவருடைய படைப்புகள் அனைத்தும் உயிர் பெற்றிருந்தன. மற்றவர்கள் படும் வேதனைகளை அத்துணை நெகிழ்ச்சியாய் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் அளவுக்கு வலிமைப் பெற்றது இவருடைய எழுத்துகள். எதையும் விவரித்துக் கூறாமல் எளிமையாய் தன்னுடைய கருத்தை தன் படைப்புக்குள் கொண்டு வந்தவர் மஹாதேவி. பல மொழிகளிலிருந்தும் இவருக்கென தனி வாசகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது..!

சாகித்திய அகாடமி விருது, பத்ம விபூஷண், பத்ம பூஷண் எனப் பல்வேறு விருதுகளால் கெளவிக்கப்பட்டார் மஹாதேவி. 'நவீன மீரா' என அழைக்கப்பட்ட இவர், 1987-ம் ஆண்டு, 80-வது வயதில் காலமானார். தனது படைப்புகளால் தினம் தினம் இலக்கியத்தை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்