Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

* இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியனின் வாழ்க்கை வரலாறு சினிமா ஆகிறது. தயாரிப்பாளர்கள்தான் இதில் ரொம்ப ஸ்பெஷல். 50 ஆயிரம் குஜராத் விவசாயிகள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறார்கள். இதற்காக ஒவ்வொருவரும் இரண்டு ரூபாய் முதலீடு செய்ய உள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்த வர்கீஸ், சென்னையில் பொறியியல் படிப்பையும் அமெரிக்காவில் எம்.இ படிப்பையும்  முடித்தவர். உலகிலேயே அதிக பால் உற்பத்திசெய்யும் நாடாக இந்தியாவை மாற்றியவர். பால் பொருட்களை விற்க அமுல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவரால் பலன் அடைந்த விவசாயிகள், குஜராத்தில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். பாலிவுட்டில்... இன்னொரு பயோபிக் ரெடி!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

பாரா ஒலிம்பிக்கில் வீரர்களைத் தாண்டி வியக்கவைத்திருக்கிறார் ஜா மையா. பார்வைத் திறனற்றவரான ஜா மையா, ஒரு புகைப்படக் கலைஞர்! இவர் எடுத்த அத்தனை படங்களும் உலக அளவில் வைரல் ஹிட். வழக்கமான போட்டோ கிராஃபர்கள்போல் இவர் கேமராவைப் பயன்படுத்துவது இல்லை. ஸ்மார்ட்போன்கள்தான் இவரின் கேமரா. செவிகள்தான் இவருக்குக் கண்கள். `எல்லோரும் கண்களால் பார்ப்பதை நான் மனதால் பார்க்கிறேன். அதனால்தான் என் புகைப்படங்கள் மற்றவர்களின் மனதைத் தொடுகின்றன’ எனக் கூறும் ஜா மையா, அசைவுகளின் ஓசைகளைவைத்தே படங்களை க்ளிக்குகிறார். ஜமாய்ங்க ஜா மையா!

இன்பாக்ஸ்

தனுஷைப் போல மலையாள நடிகர் ப்ருத்விராஜும் இயக்குநராகி இருக்கிறார். இவருடைய முதல் பட ஹீரோ மோகன்லால். மல்லுவுட்டே மகிழ்ச்சியில் இருக்கிறது. `லூஸிஃபர்’ எனப் படத்துக்குப் பெயரும் சூட்டி ஆன்லைனில் அறிவிப்பும் செய்துவிட்டார் ப்ருத்விராஜ். மறைந்த இயக்குநர் ராஜேஷ் பிள்ளை இயக்குவதாக இருந்த இந்தப் படம், கேரள டான் ஒருவரின் உண்மைக் கதையாம். பாலிவுட் நடிகை கொங்கனா சென்ஷர்மாவும் இயக்குநர் ஆகியிருக்குகிறார். `எ டெத் இன் குன்ச்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம், ஒரு பீரியட் ஃபிலிம். கல்கி கோச்சலின்தான் ஹீரோயின். நடிகர், இயக்குநர் ஆகும் காலம்!

இன்பாக்ஸ்

மூன்றரை ஆண்டுகால சாம்பியன் செரீனா வில்லியம்ஸைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்திருக்கிறார் ஏஞ்சலிக் கெர்பர். 28 வயதான கெர்பர், ஸ்டெஃபி கிராஃபுக்குப் பிறகு நம்பர் 1 வீராங்கனையாகியிருக்கும் ஜெர்மெனிப் பெண். மூன்று வயதிலேயே டென்னிஸ் பழக ஆரம்பித்தவர் 2003-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிச்சுற்றில் இடம்பிடித்து ஆச்சர்யப்படுத்தினார். காரணம், அப்போது அவர் உலகின் 92-வது ரேங்க் ப்ளேயர். இப்போது அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் நம்பர் 1 இடத்தை எட்டியிருக்கிறார். `செரீனாவை எல்லாம் அசைக்கவே முடியாது என்றார்கள். ஆனால், கடுமையான உழைப்பும் பயிற்சியும் எப்பேர்பட்ட வரையும் வீழ்த்தும்' என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார். ஸ்டெப் பை ஸ்டெப்பா... இன்னொரு ஸ்டெஃபி!

இன்பாக்ஸ்

டிசம்பர்-12, யுவராஜ் சிங் திருமணம். தனது 35-வது பிறந்த தினத்தையே திருமண நாளாகவும் மாற்றியிருக்கிறார் யுவராஜ். மாடலும் நடிகையுமான ஹஸல் கீச்சைத் திருமணம்செய்யவிருக்கும் யுவராஜ் சிங், `யுவிகேன்' என்கிற பெயரில் ஃபேஷன் லேபிளையும் தொடங்கியிருக்கிறார். `கிரிக்கெட்டின் இறுதிக் காலத்தில் இருக்கிறேன். அதனால்தான் இப்போது புதிய தொழிலைத் தொடங்குகிறேன். என் ஃபேஷன் டிசைன் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்’ என ஹேப்பி எமோஜியாக வலம்வருகிறார் யுவராஜ் சிங். செழிக்கட்டும்... செகண்ட் இன்னிங்ஸ்!

இன்பாக்ஸ்

*   `மறுபடியும் முதல்ல இருந்தா?' என இன்ப அதிர்ச்சியில் இருக்கிறது `50 ஷேட்ஸ் ஆஃப் கிரே' பட ரசிகர் பட்டாளம். காரணம், சமீபத்தில் வெளியாகிய `50 ஷேட்ஸ் டார்க்கர்' படத்தின் டீஸர் ரசிகர்களை மெர்சலாக்கியிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் கடந்த செப்டம்பர் மாதம் முடிந்துவிட்டது. கூடவே, அடுத்த பாகமான `50 ஷேட்ஸ் ஃபிரீடு' அறிவிப்பு வெளியானது. ஆனால், படத்தின் நாயகன் ஜேமி டோரன் `ஆளை விடுங்கப்பா, என்னால இனி முடியாது' எனப் பேட்டி கொடுத்து ட்ரையாலஜியின் மூன்றாவது பாகத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். மிஸ்யூ ஜேமி!