Published:Updated:

மின்சாரம் தாக்கி ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழப்பு - சிவகங்கை அருகே சோகம்!

சிவகங்கை மாவட்டத்தில், ஒரே நாளில் இரண்டு பேர் மின்சாரம் தாக்கிப் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில், தனியார் அரிசி ஆலையில் மயிலாடுதுறையைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் வேலைபார்த்து வந்தார். இன்று, அரிசி அரவை இயந்திரத்தை இயக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே சந்திரமோகன் பலியானார். அதேபோல, அப்பகுதியில் ஒலி, ஒளி அமைப்பகத்தில் வேலைபார்த்த மேலமணக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி வயது 25 என்பவர், பூவிலங்குடி அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கு சீரியல் பல்பு அமைக்கும்போது மின்சாரம் தாக்கிப் பலியானார். இருவரது உடல்களையும் கைப்பற்றிய சாக்கோட்டை காவல்துறையினர், உடல் கூறு ஆய்வுக்கு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவுசெய்து விசாரணை  நடத்திவருகின்றனர். சித்திரைத் திருவிழாவை மக்கள் குடும்பத்தோடு சந்தோஷமாகக்  கொண்டாடிவரும் நேரத்தில், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு இப்படியொரு சோகமான சம்பவம் நடந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு