Cosmos Maya​ -​ Yupp TV​ ​​கைகோர்ப்பு!​ (Sponsored Content)

உலகப் புகழ் பெற்ற Yupp TV டிவி நிறுவனம், தெற்காசியர்களுக்கான வீடியோ பிளாட்ஃபார்மான LIVE TV, CATCH UP TV மற்றும் 14 மொழிகளில் திரைப்படங்களைப் பார்ப்பதற்கான வசதியைக் கொண்டுள்ளது. Yupp TV நிறுவனம் குழந்தைகளுக்கான, இந்திய கருத்துக்களை உள்ளடக்கிய அனிமேஷன் படங்களை தயாரிப்பதில் முன்னணி வகுக்கும்  காஸ்மோஸ் மாயாவுடன்(COSMOS MAYA)  இணைந்து குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களைக் கொண்ட சேனலை தொடங்கியுள்ளது. 

காஸ்மோஸ் மாயா குழந்தைகளுக்கான அனிமேட்டட் நிகழ்ச்சிகளை தயாரிக்கக்கூடிய மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனம். இவர்களின் WowKidz 1000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தன் வசம் கொண்டு, மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது. 

Yupp TV-யுடன்  WowKidz இணைந்திருப்பதால், Yupp TVயின் சந்தாதாரர்கள் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும். தெற்காசியாவின் குழந்தைகளுக்கான நம்பர் 1  நிகழ்ச்சி  Motu Patlu, மேலும்  பிரபலமான குழந்தைகள் நிகழ்ச்சிகளான Vir- Robot Boy, Chacha Bhatija, Eena Meena Deeka, Kisna உள்ளிட்ட நிகழ்ச்சிகளை WowKidzல் பார்க்க முடியும். Yupp TV யில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை ஹிந்தி, தமிழ், தெலுங்கில் பார்த்து ரசிக்க முடியும்.

WowKidz சேனல் 2016ம் ஆண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கியது. இதனை நிறுவியவர்கள் பிரபலமான கீட்டன் மேத்தா மற்றும் தீபா சாஹி.  WowKidz தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய குழந்தைகளுக்கான சேனல் 4மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.  

WowKidz குறித்து Yupp TVயின் நிறுவனர் உதய் ரெட்டி கூறுகையில், குழந்தைகளுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சிகளை காஸ்மோஸ் மாயாவுடன் இணைந்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். குழந்தைகள் மிக முக்கியமான பார்வையாளர்கள்,  அவர்களின் அறிவை விரிவுபடுத்தக்கூடிய நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக நல்ல கருத்துக்களை சேமித்து வைத்துள்ளோம். காஸ்மோஸ் மாயா மற்றும் Yupp TVயின் கூட்டணியின் நோக்கம் அனைத்துவகையான பார்வையாளர்களுக்கும் ஏற்ற நிகழ்ச்சிகளை வழங்குவதே ஆகும். 

காஸ்மோஸ் மாயாவின் CEO  அனிஷ் மேத்தா கூறுகையில், Yupp TV உலககெங்கும் பரவியிருக்கும் இந்திய மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இதனால், Yupp TV யுடன் இணைந்துள்ள நாங்கள் பல்வேறு இந்திய மொழிகளின் மூலம் அனைத்து இந்தியர்களையும் சென்றடைய முடியும். மேலும், WowKidz மூலம் Yupp TVவுக்கு பல புதிய பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். இந்தக் கூட்டணி மூலம் உலகெங்கும் வசிக்கும், குழந்தைகளுக்கு எங்களுடைய நிகழ்ச்சிகளை கொண்டு போய் சேர்க்கும் என்று நம்புகிறோம்.  குறிப்பாக US, UK, ஐரோப்பா. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகளில் கால் பதிக்க உள்ளோம். Yupp TVயுடன் இணைந்துள்ள  WowKidz னுடைய புதிய நிகழ்ச்சிகளை ஏப்ரல் 27, 2018ல் இருந்து பார்க்கலாம். 

Yupp TVயைப் பற்றி

Yupp TV தெற்காசிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடிய இணையத்தை அடிப்படையாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சிYAAGUM. 300க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் மற்றும் 5000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை 14 மொழிகளில் வழங்குகிறது. 

ஆசியாவை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் எமரால்டு மீடியா நிறுவனம் Yupp TV-க்கு நிதி முதலீடு அளித்துள்ளது. இந்நிறுவனம், சர்வதேச முதலீட்டு நிறுவனமான KKR-இன் சிறுபான்மைப் பங்குகள் மூலம் செயல்படுகிறது. 

எமரால்டு மீடியா, ராஜேஷ் காமத் மற்றும் பவுல் எய்லோ-வின் தலைமையில் அனுபவமிக்க முதலீட்டு மற்றும் செயல்பாட்டு குழுவின் மூலம் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம், மீடியா, பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் மீடியா நிறுவனங்களுக்கு முதலீட்டை வழங்குவதில் கவனம் செலுத்திவருகிறது. Yupp TV, அதன் முதல்கட்ட நிதி திரட்டலை Poarch Creek Indian Tribe of Alabama மூலம் செய்தது.

Yupp TV அதன் லைப்ரரியில் 25000 மணி நேரத்துக்கான பொழுபோக்கு நிகழ்ச்சிக்களைக் கொண்டிருக்கிறது, மேலும் 2500 மணி நேரம் புதிய ஆன் டிமேண்ட் நிகழ்ச்சிகள் தினமும் Yupp TV யில் தரவேற்றப்படுகின்றன, மேலும் இது நேரலை Live TV மற்றும் Catch-Up TV வசதியையும் வழங்குகிறது.

YuppFix மற்றும் YuppTV Originals என இரு புது தளங்களைத் துவக்கியுள்ளது. இவை முறையே ஆன் டிமேண்ட் முறையில் திரைப்படம் பார்க்கவும், வெப் சீரீஸ் பார்க்கவும் பயன்படுகின்றன. 

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பயன்படுத்தும் நம்பர் ஒன் இன்டர்நெட் பே டிவி-யாக விளங்குகிறது Yupp TV.

அதிகமாக தரவிறக்கப்பட்ட இந்திய ஸ்மார்ட் டிவி ஆப் Yupp TV தான். 14.5 மில்லியன் மொபைல் டவுன்லோடுகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன. 

Cosmos Maya பற்றி...

புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் கேத்தன் மேத்தா மற்றும் நடிகையும் தயாரிப்பாளருமான தீபா சாஹி, இவர்களால் ஆரம்பிக்கட்ட, சிங்கப்பூரை மையமாகக் கொண்டு விளங்கும் அனிமேஷன்  நிறுவனம் Cosmos Maya. இது தரமான 3D மற்றும் 2D அனிமேஷன் கன்டென்ட்களைத் தயாரித்து வெளியிடுகிறது.

சர்வதேச முதலீட்டு நிறுவனமான KKR-இன் உதவியோடு இயங்கிவரும் ஆசியாவை மையமாகக் கொண்ட எமரால்டு மீடியா நிறுவனம் சமீபத்தில் Cosmos Mayaவில் முக்கிய பங்குகளை வாங்கியது.

14000 சதுர அடியில் மேம்பட்ட ஆர்ட் ஸ்டூடியோவை மும்பை நகரில் அமைத்துள்ளது Cosmos Maya. தவிர மும்பை மற்றும் ஹைதராபாத்-இன் பிற பகுதிகளிலும் Cosmos Maya தங்களின் வேறு ஸ்டூடியோக்களை மொத்தமாக 70000 சதுர அடியில் அமைத்துள்ளனர்.

இந்நிறுவனம் குழந்தைகளுக்கான அனிமேஷன்களில் முக்கிய அறிவார்ந்த சொத்தாக (Intellectual Property- IP) இருப்பதில் கவனம் செலுத்தி வருகிறது, மேலும் பல இந்திய அனிமேஷன் டிவி தொடர்களையும் தயாரித்து வருகிறது. இதில் தற்போது 12 ஷோக்கள் ஒளிபரப்பாகின்றன, 6 தயாரிப்பு நிலையில் உள்ளன.

கடந்த 5 வருடங்களில் 20000 நிமிடங்களுக்கும் மேலான ஒரிஜினல் அனிமேஷன் கன்டென்ட்களை Cosmos Maya தயாரித்துள்ளது. இவை 1000 அரைமணி நேர எபிசோடுகளைத் தாண்டும்!

1996 இல் துவங்கப்பட்ட Cosmos Maya, இந்தியாவின் அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் துறையின் முன்னோடியாகும். கடந்த 20 வருடங்களாக, விருதுகளைக் குவித்த அனிமேட்டட் கன்டென்ட், VFX மற்றும் கேம் சினிமாட்டிக்ஸ்- படைப்புகளை பி.பி.சி., டிஸ்னீ, கூகுள், EA போன்ற சர்வதேச நிறுவனங்களுக்காக தயாரித்துள்ளது. இதற்காக BAFTA, IFTA மற்றும் Pulcinella உள்ளிட்ட பல உயரிய விருதுகளையும் வாங்கியுள்ளது.

Cosmos Maya-வின் அனிமேஷன் IP பேங்க் சர்வதேச அளவில் இந்திய வம்சா வழியினர் இடையே புகழ்பெற்று விளங்குகிறது. WowKidz எனும் பிராண்டுக்கு கீழ் செயல்பட்டு வரும் யூட்யூப் சேனல்கள், இந்தியாவின் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கில் வேகமாக வளர்ந்துவரும் தளங்களாகும். இந்த சேனல்களின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 40 லட்சத்துக்கும் மேல் ஆகும். மார்ச் 2018 வரை 400 கோடி முறைக்கு மேல் இந்த சேனல்களை மக்கள் கண்டுகளித்துள்ளனர்!

இவர்களின் தளம்: https://www.yupptv.com/channels/wow-kidz-tamil/live  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!