Published:Updated:

அப்சல் குரு தூக்கில் அரசியல் நோக்கம் இல்லை: ஷிண்டே

அப்சல் குரு தூக்கில் அரசியல் நோக்கம் இல்லை: ஷிண்டே

புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதில்  அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்றும், தூக்கு குறித்து அவரது மனைவிக்கு  முன்னரே தெரிவிக்கப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார்   ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"நாடாளுமன்றத்தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதில், அனைத்து சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. அப்சல்  குருவை தூக்கிலிட்டதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.

##~~##
அப்சல் குருவுக்கு 9 ஆம் தேதியன்று தூக்குத்தண்டனை நிறைவேற்ற இருப்பது குறித்து  அவரது மனைவிக்கு மனைவிக்கு பிப்ரவரி 7 ஆம் தேதியன்றே ஸ்பீட் போஸ்ட் கடிதம்  மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.( ஆனால் அக்கடிதம் அவருக்கு இன்றுதான்  கொடுக்கப்பட்டதாக தலைமை அஞ்சலக தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.)   ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவிடம் 8 ஆம் தேதியன்று நானே இதுபற்றி  கூறினேன்.
காவித் தீவிரவாத்துக்கும் அப்சல் குரு தூக்குக்கும் முடிச்சு போடக்கூடாது. ராஜீவ்  கொலை வழக்கு குற்றவாளிகளின் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது"  என்றார்.