Published:Updated:

உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம்: 2 விஞ்ஞானிகள் கைது!

உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம்: 2 விஞ்ஞானிகள் கைது!
உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம்: 2 விஞ்ஞானிகள் கைது!
உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம்: 2 விஞ்ஞானிகள் கைது!

சென்னை:  மினரல் வாட்டர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம் வாங்கிய  ஐஎஸ்ஐ தர நிர்ணய விஞ்ஞானிகள் முரளி மற்றும் வெங்கட நாராய்ணன் ஆகிய 2 பேர் உள்ளிட்ட மூன்று பேர் சென்னை தரமணியில்  இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

எக்சல் மினரல் வாட்டர் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான விநாயக மூர்த்தி என்பவருடன் இணைந்து, மேற்கூறிய விஞ்ஞானிகள் இருவரும், மினரல் வாட்டர் நிறுவனத்திற்கான உரிமம் வழங்குதல் மற்றும் உரிமத்தை புதுப்பிப்பது ஆகியவற்றுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆராயமலேயே லஞ்சம் பெற்றுக்கொண்டு, உரிமம் வ்ழங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து புகார் வந்ததை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் இன்று மேற்கூறிய 3 பேரையும்  பிடித்து கைது செய்தனர்.

வெங்கட்நாராயணன் வீட்டிலிருந்து 15 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 28 மதுபான பாட்டில்கள்  உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முரளியின் அம்பத்தூர் வீட்டில் ஏராளமான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.