கூலர்ஸ் வாங்கப்போறீங்களா... கொஞ்சம் இந்த ரூல்ஸைப் படிச்சிட்டுப் போங்க! #SunGlasses

கூலர்ஸ் வாங்கப்போறீங்களா... கொஞ்சம் இந்த ரூல்ஸைப் படிச்சிட்டுப் போங்க! #SunGlasses

கூலர்ஸ் வாங்கப்போறீங்களா? கடை கடையா ஏறி, விதவிதமா பல கண்ணாடிகளைப் போட்டுப்பார்த்துட்டு, கடைசியில 'தெறி' பட ஸ்டைல்ல 'செட் ஆகல'னு சொல்லிட்டு கிளம்பிடுவோம். கூலர்ஸ் வாங்குறதுக்கு முன்னாடி, இந்த ரூல்ஸையெல்லாம் செக் பண்ணிட்டுப் போங்க. உங்க ஷாப்பிங் ரொம்ப ஈஸியா முடிஞ்சுடும்.

கண்ணாடி

கண்ணாடியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், பொதுவான ரூல் ஒன்று இருக்கிறது. அது, உங்கள் முக அமைப்புக்கு எதிர்மறையான வடிவில்தான் உங்கள் கண்ணாடியின் தேர்வு இருக்க வேண்டும். எந்த முக வடிவமைப்புக்கு எந்தக் கண்ணாடி மேட்ச் என்பதைப் பார்ப்போமா?

முக வடிவமைப்பை, ஓவல் (முட்டை வடிவம்), சதுரம், வட்டம், ஹார்ட் எனப் பிரிக்கலாம். உங்கள் முகம் எந்த வடிவத்தைச் சேர்ந்திருக்கிறது என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள். இது, சரியான Frame தேர்ந்தேடுப்பதற்கு உதவும்.

ஓவல் முகம்:

Oval face and Sun Glasses

முட்டை வடிவம்போல நீண்டிருக்கும் முகம், ஓவல் முக அமைப்பு. தாடை மற்றும் சீக் போன்ஸ் (Cheek Bones). அதாவது, கன்னத்தின் எலும்புகளைவிட பெரிதான நெற்றிகொண்டிருக்கும் முக அமைப்பு, ஓவல் முகம். இவர்கள், மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில், பெரும்பாலான கண்ணாடி டிசைன்கள் இவர்களுக்குப் பொருந்தும். க்ளாசிக் முதல் ட்ரெண்டியான பூனைக்கண் (Cat Eyes Frame) வடிவ கண்ணாடிகள் வரை எல்லாமே இவர்களுக்கு கச்சிதமாய் இருக்கும். மெல்லிய ஓவல் முக அமைப்பைக்கொண்டவர்கள், தடித்த ஃபிரேம்கொண்ட கூலர்ஸைத் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கேற்ற சன்னமான ஃபிரேம் வகைகளை மட்டுமே தேர்ந்தெடுங்கள். அதேபோல, அகலமான ஃபிரேமுடைய கண்ணாடியையும் தவிர்க்க வேண்டும். இவை, மேலும் முகத்தை நீளமாகக் காட்டும். எந்த டிசைன் ஃபிரேமாக இருந்தாலும், முகத்தையொட்டிய கண்ணாடியே இவர்களுக்கான சரியான தேர்வு.

வட்ட முகம்:

Round Face and Sun Glasses

நெற்றியின் நீளமும் கன்ன எலும்புகளின் நீளமும் ஒரே அளவைக்கொண்டிருக்கும் முக அமைப்பு, வட்ட முகம். இவர்கள், தட்டையான தாடைகொண்டிருப்பதால், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஃபிரேம்கள் மட்டுமே இவர்களுக்குப் பொருந்தும். செதுக்கப்பட்ட கோணங்கள்கொண்ட 'சதுர' வடிவ ஃபிரேம், இவர்களுக்கான சரியான சாய்ஸ். சதுர வடிவ ஃபிரேம்களின் 'டெம்புல்ஸ்' (காதுப் பகுதியில் பொருத்தும் பாகம்) நீண்டிருப்பதால், வட்ட முகத்தை நீளமாகக் காட்டும். வட்டமான ஃபிரேமைத் தவிர்க்க வேண்டும். அதிலும், சிறியளவு ஃபிரேம்கொண்ட கண்ணாடி, வட்டமுகத்தை மேலும் வட்டமாகக் காட்டும். Clubmasters, Wayfarers போன்ற கண்ணாடி வகைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

சதுர முகம்:

Square Face and Sun Glasses

முகத்தின் நீளம், அகலம், கன்னங்களின் எலும்பு என அனைத்து அளவுகளும் ஒருவகைப்பட்டதுபோல இருக்கும் முக அமைப்பு, சதுர முகம். இவர்களின் தாடைப்பகுதி சிறிது கூர்மையாக இருக்கும். முகத்தின் விளிம்பு கூர்மையாக இருப்பதால், இதற்கு நேர்மாறான வளைந்த விளிம்புகளுடைய ஃபிரேமை உபயோகிக்க வேண்டும். இவர்கள், சதுர வடிவக் கண்ணாடியைத் தவிர்ப்பது நல்லது. ஏவியேட்டர் (Aviator), ஜான் லென்னான் (முழு வட்டவடிவக் கண்ணாடி) போன்றவை சரியான தேர்வு. உங்கள் முக அளவுக்கு ஏற்ற அளவிலான கண்ணாடியைத் தேர்ந்தெடுங்கள்.

ஹார்ட் வடிவ முகம்:

Heart shape face and Sun Glasses

அகலமான நெற்றி, சீராகக் குறைந்து கூரான தாடையைக்கொண்டிருக்கும் முக அமைப்பு, ஹார்ட் வடிவ முகம். இது, அரிதிலும் அரிதான முக அமைப்பு. இவர்கள், கண்ணாடியின் மேல் பகுதியில் உள்ள (புருவங்கள் தொடும் பகுதி) விளிம்பு அகலமாகவும், கீழ்ப்பகுதி சிறிது தட்டையாகவும் இருக்கும் கண்ணாடியை அணிய வேண்டும். Clubmaster போன்ற கண்ணாடி வகை இவர்களுக்கு சரியான தேர்வு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!