Published:Updated:

ஹெலிகாப்டர் ஊழலில் முன்னாள் விமானப்படை தளபதிக்கு தொடர்பு?

ஹெலிகாப்டர் ஊழலில் முன்னாள் விமானப்படை தளபதிக்கு தொடர்பு?
ஹெலிகாப்டர் ஊழலில் முன்னாள் விமானப்படை தளபதிக்கு தொடர்பு?
ஹெலிகாப்டர் ஊழலில் முன்னாள் விமானப்படை தளபதிக்கு தொடர்பு?

புதுடெல்லி: இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் நடைபெற்ற  ஊழலில், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி லஞ்சம்  பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்திய ராணுவத்துக்கு ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டர்களை  விற்பதற்காக,  இந்தியர்கள் சிலருக்கு ரூ.400 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக இத்தாலியின்  பின்மெக்கானிகா என்ற நிறுவன நிர்வாகி ஜியூசெப்பேயை அந்நாட்டு அரசு கைது செய்து,  வீட்டுக் காவலில் வைத்துள்ளது.

இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து சிபிஐ  விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்திய விமானப்படை  முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி, இவ்விவகாரத்தில் இத்தாலி நிறுவனத்திடமிருந்து  லஞ்சம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜியூசெப்பே கைது செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே, இந்திய  விமானப்படை முன்னாள் தளபதியான தியாகிக்கு பெருமளவு லஞ்ச தொகை  கொடுக்கப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக இத்தாலி அரசின்  புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

##~~##
அந்நாட்டு அரசிடம் சமர்ப்பித்துள்ள 64 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையில்  இத்தகவல் இடம்பெற்றுள்ளதாக இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு தளவாடங்களை வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் இந்திய  விமானப்படை தளபதியாக இருந்த ஒருவர் சிக்குவது இதுவே முதல்முறை  எனக்கூறப்படுகிறது.

தியாகி மறுப்பு
இதனிடையே தம்மீதான குற்றச்சாட்டை தியாகி மறுத்துள்ளார். இத்தாலியை சேர்ந்த எந்த  ஒரு நிறுவனத்திடமிருந்தும் தாம் பணம் ஏதும் பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.