Published:Updated:

இந்த மாத இறுதி வரை மழை.. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று.. வானிலை ஆய்வாளர் தகவல்!

இந்த மாத இறுதி வரை மழை.. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று.. வானிலை ஆய்வாளர் தகவல்!
இந்த மாத இறுதி வரை மழை.. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று.. வானிலை ஆய்வாளர் தகவல்!

தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளன. குறிப்பாக, கோவையில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், அக்னி நட்சத்திரத்தின் உக்கிரத்தில் இருந்து, இந்த மாவட்டங்கள் தப்பித்துள்ளன.

தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளன. குறிப்பாக, கோவையில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், அக்னி நட்சத்திரத்தின் உக்கிரத்தில் இருந்து இந்த மாவட்டங்கள் தப்பித்துள்ளன.

இதுகுறித்து வானிலை ஆய்வாளர் செல்வகுமார், “இந்த மழை இந்த மாத இறுதிவரையில் நீடிக்கும். ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானால், அந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை சுழன்று கடற்கரைக்கு வரும்போது, மழையைக் கொடுக்கும். தற்போதைக்கு வங்கக் கடல் முழுவதுமே காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிக்கிறது. தரைப்பகுதியிலும் காற்றழுத்தம் நீடிக்கிறது. மேலும், வெப்பக்காற்று, மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்கிறது. இதனால், வட இந்தியாவில் கடுமையாக வெயில் நிலவும்.

அதேநேரத்தில், கடல் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. வரும் நாள்களில் கடல் பகுதியில் தொடர்ந்து காற்றின் வேகம் சற்று அதிகமாகவே இருக்கும். அதேபோல, கடல் சீற்றத்துடன் காணப்படும். ஆனால், டெல்டா மாவட்டங்களில் வெப்பச் சலனத்துக்கு வாய்ப்பு குறைவு. எனவே, அங்கு சில நேரங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேற்கு மாவட்டங்களில் இந்த மாதத்தின் இறுதி வரையே தொடர்ந்து மழை பெய்யும். குறிப்பாக, வாரத்தில் இரண்டு நாள்கள் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் 13-ம் தேதிக்குப் பிறகு மழை பெய்யும். தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில், தமிழகத்தில் செப்டம்பர் வரை நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, குடகுப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை சிறப்பாக இருக்கும். இதனால், ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடக அணை நிரம்ப வாய்ப்பிருக்கிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு