Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அழகான அடர்த்தியான புருவத்துக்கு...டிப்ஸ்... டிப்ஸ்..! #BeautyTip

முகத்துக்கு அழகு தருவதில் மூக்கும் முழியும் மட்டுமல்ல, புருவத்துக்கும் நிறையப் பங்குண்டு. அடர்த்தியான, கருமையான புருவம் சிலருக்கு மரபுவழி சொத்தாகக் கிடைத்துவிடும். மற்றவர்கள் கொஞ்சம் மெனக்கெட்டால், அழகான புருவங்களை நிச்சயம் பெறமுடியும். அதற்கான டிப்ஸ் தருகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

அடர்த்தியான புருவத்துக்கு

* அடர்த்தியான புருவத்துக்கு விளக்கெண்ணெய் சிறந்த வழி என்பது எல்லோருக்கும் தெரியும். அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்ந்தால் இன்னும் எஃபெக்டிவாக இருக்கும். 8 சொட்டு விளக்கெண்ணெயுடன் 10 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து, லேசாகச் சூடாக்கி, சின்ன பாட்டிலில் ஊற்றிவைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையை நடுவிரல்களால் தொட்டு, இரண்டு புருவங்களிலும் தடவி, மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். இப்படித் தினமும் செய்துவந்தால், புருவ முடியின் வளர்ச்சி மெள்ள மெள்ள அதிகரிக்கும். 

வசுந்தரா    * மேலே சொன்ன எண்ணெய்க் கலவையைப் புருவத்தில் தடவி இரவு முழுக்க ஊறவைக்கும் பெண்கள், இந்த எண்ணெயுடன் 4 அல்லது 5 துளசியிலையைப் போட்டு எண்ணெயை லேசாகச் சூடுபடுத்தி வைத்துக்கொள்ளுங்கள். விளக்கெண்ணெயின் குளிர்ச்சி, மொத்தமாகப் புருவங்களில் இறங்காது. தவிர, துளசியிலைச் சாறு முடி வளர்ச்சியைத் தூண்டியும் விடும்.

    * சில பெண்களுக்குப் புருவ முடிகள் கொட்டுவதுபோலவே, கண் இமைகளில் இருக்கும் முடிகளும் உதிரும். இவர்கள் தினமும் துளசியிலைப் போட்டு சூடாக்கிய ஆலிவ் எண்ணெயைப் புருவங்களிலும் இமைகளிலும் தடவி வந்தால், புருவ முடிகள் மற்றும் கண் இமைகள் கொட்டுகிற பிரச்னை தீரும்.

    * தலையில் பேன் மற்றும் பொடுகு அதிகம் இருக்கும் பெண்களில் சிலருக்கு, புருவங்களிலும் பொடுகு, பேன் இருக்கும். இதனால், அந்த இடங்கள் அரிக்கும். சொரியும்போது, அந்த இடங்களில் இருக்கும் முடிகள் உதிர்ந்து, புருவ அழகு குறைந்து போகும். இவர்கள், விளக்கெண்ணெயில் இரண்டு வேப்பிலையைப் போட்டுக் காய்ச்சி, தினந்தோறும் புருவங்களிலும் கண் இமைகளிலும் தடவிவந்தால், ஒரு வாரத்தில் மேலே சொன்ன பிரச்னை சரியாகிவிடும்.

* ரோஸ்மேரி ஆயிலுக்கும் புருவ முடிகளின் வளர்ச்சியைத் தூண்டிவிடும் தன்மை உண்டு. புருவத்தில் முடியே இல்லையென வருத்தப்படும் பெண்கள், இந்த ஆயிலையும் முயற்சி செய்யலாம்.

* சிலருக்குப் புருவ முடிகள் கலைத்துப்போட்டதுபோல இருக்கும். அவர்கள், புருவத்தை ஷேப் செய்யச் செய்ய, முடிகளின் ஃபாலிக்கிள்ஸ் தூண்டப்பட்டு வளர ஆரம்பிக்கும்.

* சிலருக்குப் புருவத்தை ஷேப் செய்யும்போது, வலி தாங்கமுடியாமல் தவிப்பார்கள். இத்தகையவர்கள், கிராம்பு தைலம் கலந்த வலிநீக்கி ஜெல்லை புருவங்களில் தடவி, ஷேப் செய்ய பியூட்டிஷியனிடம் சொல்லலாம்.

* சில பியூட்டிஷியன்கள், புருவ முடியை அழுத்திப் பிடுங்குவார்கள். அப்படி அழுத்திப் பிடுங்கும்போது கண்களுக்குள் மின்னல் வெட்டுவதுபோல தெரியும். இது தவறான முறை. அவர்களிடம் அடுத்தமுறை நீங்கள் செல்லாமல் இருப்பதே நல்லது. 

அழகு

* மாதம் ஒருமுறை புருவங்களை ரெகுலராக ஷேப் செய்யும் பெண்கள், கர்ப்பமாக இருக்கிறபோதும் ஐப்ரோ திரெட்டிங் செய்துகொள்ளலாம். எப்போதாவது ஒருமுறை செய்துகொள்பவர்கள், கர்ப்பமாக இருக்கும்போது ஐப்ரோ திரெட்டிங் செய்யாமல் இருப்பதே நல்லது. எப்போதாவது ஒருமுறை ஐப்ரோ திரெட்டிங் செய்யும்போது வலி அதிகமாக இருக்கும். கர்ப்பிணிகள் உணர்கிற வலியை அவர்கள் பிள்ளைகளும் உணர்வார்கள் என்பதால், கருவுற்றிருக்கும்போது ஐப்ரோ திரெட்டிங் செய்யாமல் இருப்பதே நல்லது.

* சிலருக்குப் புருவங்களின் இடையில் சில முடிகள் வளராமல் இருக்கும். அவர்கள், சிறிது சர்க்கரையை அந்த இடத்தில் தடவி, மிகமிக மென்மையாகத் தேய்த்துக்கொடுத்தால், மூடிக்கொண்டிருக்கும் முடியின் வேர்க்கால்கள் திறந்து முடி வளர ஆரம்பிக்கும். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement