வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (07/05/2018)

கடைசி தொடர்பு:21:03 (07/05/2018)

வாணி போஜனுக்கு போட் நெக்... சைத்ரா ரெட்டிக்கு போல்கி டைப்... சீரியல் ஹீரோயின்களின் ஃபேஷன் பக்கங்கள்!

டாப் சீரியல் ஹீரோயின்கள் சிலரின் காஸ்ட்யூம்கள் குறித்த தன் கருத்துகள்

வாணி போஜனுக்கு போட் நெக்... சைத்ரா ரெட்டிக்கு போல்கி டைப்... சீரியல் ஹீரோயின்களின் ஃபேஷன் பக்கங்கள்!

டாப் சீரியல் ஹீரோயின்களின் ஃபேஷன் பக்கங்கள்!

கதைக்காக சீரியல் பார்ப்பவர்கள் ஒரு பக்கம் என்றால், மனதைக் கவரும் வகையில் ஆடைகள் அணிந்துவரும் சின்னத்திரை ஹீரோயின்களின் காஸ்ட்யூம்களுக்காகவே சீரியல் பார்க்கும் பெண்கள் நிறையப் பேர். சில நடிகைகளின் ஆடைகள், ட்ரெண்ட் செட் செய்யும். சில நடிகைகளின் ஆடைகள், ஃபேஷன் ட்ரெண்ட் பற்றி பெண்களுக்குச் சொல்வதாக இருக்கும். மொத்தத்தில், ஃபேஷனில்  ஆர்வம்கொண்ட பெண்கள் அதில் தங்களை அப்டேட் செய்துகொள்ள, நம் சின்னத்திரை ஹீரோயின்கள் அவர்களுக்குக் கைகொடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில், டாப் சீரியல் ஹீரோயின்கள் சிலரின் காஸ்ட்யூம்கள் குறித்த தன் கருத்துகளைப் பகிர்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட் கீதா.

 ``சீரியல் என்றாலே காட்டன் அல்லது சிந்தடிக் புடவை, மைல்டு கலர் என்றுதான் ஆக்ட்ரஸ்களுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்கிறார்கள். நெகட்டிவ் ரோலில் நடிக்கும் நடிகைகள் எனில், வெளிர் நிற ஆடைகள், ஓவர் மேக்அப் எனக் காட்டுகிறார்கள். இதுதான் அவர்களின் கேரக்டர்களை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று கருதுகிறார்கள். ஆனால், ஆடையின் நிறம், அணிகலன்கள் என்பதைத் தாண்டி, ஆடையின் வடிவமைப்பிலேயே ஒருவரின் கேரக்டரை பிரதிபலிக்கச் செய்ய முடியும். அப்படி தங்கள் ஆடையின் நேர்த்தியிலேயே தங்களின் கேரக்டரைச் சொல்லும் சீரியல் ஹீரோயின்களின் ஃபேஷன் பக்கங்களைப் பார்ப்போம்.

`தெய்வமகள்' வாணிபோஜன் :

வாணி போஜன் சரியான உயரம் மற்றும் அதற்கேற்ற உடல் எடை கொண்டவர். `தெய்வமகள்' சீரியலில், தன்னுடைய தாசில்தார் கேரக்டருக்கு ஏற்ப அடர் நிற காட்டன் புடவைகளைத் தேர்வுசெய்து அணிந்தது சூப்பர். காட்டன் புடவை என்றாலே பெரும்பாலான பெண்கள் முக்கால் கை பிளவுஸ் அணிவதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதில் போட் நெக், பேக் ஒப்பன், ஹை காலர், பஃப் கை என வெரைட்டி காட்டியவர் வாணி போஜன். அந்த சீரியலில், எந்த அணிகலன்களும் அணியாமலேயே அவர் நீட் லுக் பெற்றதற்கான கிரெடிட்ஸ், அவருடைய ஆடைத் தேர்வுக்கே. சீரியலைத் தாண்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அவர் அணிந்து வரும் ஆடைகளும் சூப்பர். அவரைப்போன்ற உடல்வாகு கொண்ட பெண்களுக்கு வெஸ்டர்ன் ஆடைகளும் பொருந்தும்.

ஃபேஷன்


`யாரடி நீ மோகினி' சைத்ரா ரெட்டி:

`யாரடி நீ மோகினி' சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துவரும் சைத்ரா ரெட்டி, அந்த கேரக்டருக்கான ஆடையில் புதுமையைக் கொண்டுவந்துள்ளார். வில்லி என்பதாலேயே அதிக வேலைப்பாடுகள் செய்த ஆடைகள், அணிகலன்கள் என்று அணியாமல் தனக்கென்று ஒரு யுனீக் ஸ்டைலை கடைப்பிடிக்கிறார். ஃப்ரில் பிளவுஸ், ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், நாட் பிளவுஸ், நெட்டட், போட் நெக்னு வித்தியாசமாகத் தேர்வுசெய்றார். அவர் அணிந்துவரும் போல்கி டைப், ஹேங்கிக் வகை கம்மல்களும், லாங், சிங்கிள் செயின் டைப் அணிகலன்களும் அவரின் ஆடைகளுக்கு பெர்ஃபெக்ட் மேட்ச்சாக இருக்கிறது. புடவை அணிந்து செல்ல விரும்பும் கல்லூரிப் பெண்கள் சைத்ராவின் ஆடை நேர்த்தியைப் பின்பற்றலாம்.

ஃபேஷன்

`நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா:


`நெஞ்சம் மறப்பதில்லை' தொடரில் சரண்யா அணிந்து வரும் ஆடைகள் புது லுக்கில் இருக்கிறது. இதுவரை சீரியல் நடிகைகள் தேர்வு செய்யாத நியான் கலர் ஆடைகளை அவர் தேர்வு செய்து அணிவதோடு, பலவிதமான பிளவுஸ்களையும் முயற்சி செய்கிறார். அவர் ஸ்கின் டோனுக்கு அது பொருத்தமாக இருக்கிறது என்பதுடன், அவரின் பப்ளி, சார்மிங் கேரக்டருக்கும் அது பொருத்தமாக இருக்கிறது. பார்ட்டிகளுக்கு புடவை அணிந்து செல்ல விரும்பும் பெண்கள் சரண்யாவின் ஆடைத்தேர்வை ஃபாலோ செய்யலாம்.

`சின்னத்தம்பி' பவானி ரெட்டி :


`ரெட்டைவால் குருவி', `ஆபீஸ்', இப்போது `சின்னத்தம்பி' சீரியலில் ஹீரோயினாக நடித்துவரும் பவானி ரெட்டிக்கு வெஸ்டர்ன் ஆடைகள் பொருத்தமாக இருக்கிறது. அவர் சீரியலில் அணிந்து வரும் காட்டன் குர்தாக்கள் அவருக்கு எளிமையான, அதே நேரத்தில் டிரெண்டியான லுக் கொடுக்கிறது. அவரின் ஸ்கின் டோனுக்கு ஏற்ப அவர் அடர் நிற ஆடைகளைத் தேர்வு செய்து அணிவது அவருக்குக் கூடுதல் அழகைத் தருகிறது. வொர்க்கிங் விமன்களுக்கு பவானியின் காஸ்ட்யூம் ஸ்டைல் சிறப்பான தேர்வாக இருக்கும்.

``செம்பருத்தி' ஜனனி:

நிறைய சப்போர்ட்டிங் கேரக்டர்களில் நடிக்கும் ஜனனி, ஆடை, அலங்காரத்தில் சிறப்பான கவனம் செலுத்துகிறார். உயரமான இவரின் தோற்றத்துக்கு, இவர் அணிந்துவரும் கவுன், மல்டி கலர் புடவைகள், காட்டன் சல்வார் போன்றவை இவரைக் கவனிக்கத் தூண்டுகின்றன. ஸ்லிம், டால் கேர்ள்ஸ், ஜனனியின் ஆடைத்தேர்வை நோட் செய்துகொள்ளலாம்."


டிரெண்டிங் @ விகடன்