Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

* பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் தர வரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்தியா நம்பர் 1 இடத்தைப் பெறுவது, இது நான்காவது முறை. ``2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின்போது இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு, திடீரென தோனியிடம் இருந்து எனக்கு வந்தது. அப்போது, என்னுடைய திட்டத்தை இந்திய வீரர்களிடம் சொன்னேன். அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. முதல் தோல்வி என்னை அசைக்கவில்லை. மாறாக, என்னை இன்னும் வலுவாக்கியது. `இந்த அணி, உலகின் நம்பர் 1 அணி. அதற்கு நீதான் கேப்டன்' என எனக்குள்ளே அன்று சொல்லிக்கொண்டேன். அது வெகு சீக்கிரத்திலேயே உண்மையாகிவிட்டது இரண்டாவது முறையாக மீண்டும் முதல் இடம் பிடித்துவிட்டோம்'' என்கி​றார் கேப்டன் விராட் கோஹ்லி. சொல்லிஅடி!

* மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அவருக்கு எப்போது எல்லாம் வெளிநாட்டுப் பயணங்கள் வருகின்றனவோ, அப்போது எல்லாம் காஷ்மீர் விவகாரம் வெடிக்க, பிரதமர் மோடியால் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து ஆகும். இந்த முறையும் அக்டோபர் மாதம் அமெரிக்கா - ரஷ்யா பயணங்களுக்கு விசாவுடன் தயாராக இருந்தார் ராஜ்நாத் சிங். ஆனால், பாகிஸ்தான் பிரச்னையால் அவரது பயணம் மீண்டும் ரத்தாகி​விட்டது. மோடியோடு ஜோடி போடுங்க!

இன்பாக்ஸ்

* நிருபரின் கேள்விக்கு செம போல்டாக பதில் அளித்த நடிகை ராதிகா ஆப்தேதான், இப்போது ட்ரெண்டிங். `படத்தின் புரமோஷனுக்காகத்தானே அப்படி நடித்தீர்கள்?’ ‘பார்ச்டு’ படத்தின் நிர்வாணக் காட்சி குறித்து நிருபர் ஒருவர் நடிகை ராதிகா ஆப்தேவிடம் கேட்டார். ‘உங்களுடைய உடல் குறித்த பார்வை தவறாக இருக்கும்​போதுதான் மற்றவர்​களுடைய உடல் மீது உங்கள் கவனம் திரும்பும். சர்ச்சை என்பது, தனி மனிதர்களான உங்களால் உருவாக்கப்படுவதுதான்’ என்று காட்டமாக பதில் அளித்தது உலக லெவலில் எதிரொலிக்க, டேரிங் பதிலுக்கு லைக்ஸ் குவிகின்றன. ராதிகா ஆப்தேடா!

* பாரீஸில் தங்கி இருந்த ஹாலிவுட் டி.வி ஸ்டார் கிம்கார்தாஷியனைக் கட்டிப்போட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்ததுதான் கடந்த வார உலக வைரல். ஒரு பக்கம் அவருக்கு ஆறுதல் குரல்கள் வந்தாலும், பலரும் `சுய விளம்பரத்துக்காக கிம் இப்படிச் செய்துள்ளார்' என விமர்சித்துள்ளனர். `அவர் தங்கி இருந்த அப்பார்ட்மென்ட்டில் கேமரா வேலை செய்யவில்லை. அவரின் பாதுகாவலர்கள் அங்கு இல்லை என சொல்வது எல்லாம் நம்பும்படியாக இல்லை' என ஆளாளுக்கு விசாரணை அதிகாரிகளாகக் கிளம்ப... கிம் கப்சிப். கடுப்பேத்துறாங்க மை லார்டு!

இன்பாக்ஸ்

* `பெண்கள், `தொடாதே' என்றால் தொடாதீர்கள்; `நோ' எனச் சொன்னால் அவர்களைக் கொன்றுவிடாதீர்கள்' எனக் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆண்-பெண் புரிதல் பற்றி தன் மகன்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். `ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு, எல்லோரும் என்னை மதிக்கிறார்கள். ஆனால், சிறுவயதில் நான் பாலியல் சீண்டலுக்கு உள்ளானவள். ரேப் என்பது, செக்ஸ் அல்ல. பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் மேரிகோம். புரியவைப்போம்!

இன்பாக்ஸ்

* கங்னம் ஸ்டைலில் உலக வைரலாகிக்கொண்டிருக்கிறது Chee yee Teoh என்பவரின் 51 நொடிப் பாடல். `Pen Pineapple Apple Pen' எனக் கலாய்த்திருக்கும் அந்த வீடியோ பாடலில் இரண்டே வரிகள்தான். ஆனால் பாடல், யூடியூபில் வெளியான ஒரே வாரத்தில் ஆறு கோடி ஹிட்ஸ் அடித்திருக்கிறது. `ஆப்பிள்'னாலே வைரல்தானே!