வெள்ளெலி, பன்றி, பாம்பு, மீன்... சில மிருகங்கள் தன் குட்டிகளையே உண்பது எதனால்? | Why are some animals eating their own babies?

வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (09/05/2018)

கடைசி தொடர்பு:18:39 (09/05/2018)

வெள்ளெலி, பன்றி, பாம்பு, மீன்... சில மிருகங்கள் தன் குட்டிகளையே உண்பது எதனால்?

குட்டிகள் போடுவது முக்கியம் என்ற நிலையில், பிறந்து குட்டிகளில் ஒன்றையோ இரண்டையோ அவ்வப்போது ஒரு சில மிருகங்கள் (தாய்) தன் குட்டியையே கொன்று தின்று விடுகின்றன. இயற்கை ஏன் இப்படி ஓர் எண்ணத்தை அந்தத் தாய் மிருகங்களின் உள்ளே விதைத்தது? கொடூரமான செயலாக இது நமக்குத் தோன்றினாலும், இதற்கும் ஒரு காரணம் இருக்கவே செய்கிறது.

வெள்ளெலி, பன்றி, பாம்பு, மீன்... சில மிருகங்கள் தன் குட்டிகளையே உண்பது எதனால்?

லகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு தலையாய கடமை இருக்கிறது. அது இனப்பெருக்கம். தனக்குப் பின் தன் இனம் உயிர்ப்புடன் தொடர ஒவ்வொரு மிருகமும் இனப்பெருக்கம் நிகழ்த்தி எதிர்கால சந்ததிகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட உயிரினம் தொடர்ந்து இனப்பெருக்கம் நிகழ்த்துவதற்கான சூழல் அமையாதபோது, அந்த இனத்தின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இறுதியில் அழிந்தே போகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இனப்பெருக்கத்துக்குப் பின் ஓர் அதிர்ச்சிகரமான நிகழ்வும் அவ்வப்போது அரங்கேறுகிறது. குட்டிகள் போடுவது முக்கியம் என்ற நிலையில் பிறந்து குட்டிகளில் ஒன்றையோ இரண்டையோ அவ்வப்போது ஒரு சில மிருகங்கள் (தாய்) கொன்று தின்று விடுகின்றன. இயற்கை ஏன் இப்படி ஓர் எண்ணத்தை அந்தத் தாய் மிருகங்களின் உள்ளே விதைத்தது? கொடூரமான செயலாக இது நமக்குத் தோன்றினாலும் இதற்கும் ஒரு காரணம் இருக்கவே செய்கிறது.

வெள்ளெலி

வெள்ளெலி (Hamster) குட்டிகள் பிறந்தவுடன் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும். ஆனால், குட்டி போட்ட தாய் வெள்ளெலி தன் குட்டியையே உண்பதைப் பார்த்தால் அதற்குப் பின் நீங்கள் வெள்ளெலியையே வெறுக்கத் தொடங்கி விடுவீர்கள். வெள்ளெலி வரிசையில் பன்றி, ஒரு சில பூச்சிகள் மற்றும் பறவைகள், உயர் குரங்கினங்கள், மீன்கள் என இவை அனைத்துமே தன் குட்டிகளைத் தானே உண்ணும் பழக்கத்தை கொண்டு உள்ளன. இது விநோதமானது, அதிர்ச்சிகரமானது என்று நாம் நினைத்தாலும் இத்தகைய நிகழ்வுகளை நம்மால் தடுக்க இயலாது. காரணம், நமக்கு வேண்டுமானால் இது அருவருக்கத்தக்க, ஒவ்வாத செயல். ஆனால் அந்த மிருகங்களைப் பொறுத்தவரை இது அதற்கான தேவை, தொடர்ந்து உயிர் வாழ, தொடர்ந்து தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள செய்யும் தந்திரம். 

உதாரணமாக, வெள்ளெலிகள் தன் குட்டியை உண்ண முதல் காரணம், கூட்டத்தைக் குறைக்கத்தான். தாய் வெள்ளெலியால் எத்தனை  குட்டிகளுக்கு உணவு கொடுக்க முடியுமோ அத்தனை குட்டிகளை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொள்ளும். அவற்றைப் பேணி காக்கும். கூடுதலாகப் பிறந்த குட்டியை அப்படியே கபளீகரம் செய்து விடும். இதனால் மற்ற குட்டிகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது. அவை ஆரோக்கியமாக வளர்ந்து தன் இனத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். ஒருவேளை அது தான் போடும் குட்டிகள் அனைத்தையும் வளர்க்க முற்பட்டால், எப்படியேனும் உணவு இன்றி ஒரு சில குட்டிகள் இறக்க நேரிடும். அதைக் கருத்தில் கொண்டு அவ்வகை மரணத்தைத் தவிர்க்க, குட்டிகளைத் தானே உண்டுவிட்டு உடம்பைத் தேற்றுகின்றன தாய் வெள்ளெலிகள்.

பன்றி குட்டிகள்

இது குறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஏற்கெனவே அதிகமாக இருந்த வெள்ளெலிக் குட்டிகள் கூட்டத்துக்குள் கூடுதலாக இரண்டு குட்டியை விட்டபோது, தாய் எலி சற்றும் தயங்காமல் நான்கு குட்டிகள் வரை உண்டதாகக் கூறுகிறார்கள். அதே சமயம், வேறு கூட்டத்திலிருந்து இரண்டு எலிகளை எடுத்துச் சென்றபோது, அந்தத் தாய் எலி, குட்டிகளின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து எந்தக் குட்டிகளையும் உண்ண முன் வரவில்லை என்கிறார்கள்.

சீனா, தைவான், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் மற்றும் கம்போடியாவில் வாழும் நீண்ட வால் கொண்ட பாம்புராணி போல ஒரு வகை ஊர்வனவகையைச் சார்ந்த long tailed sun skink என்பவை முட்டையிடும் வழக்கம் கொண்டவை. தாய், முட்டைகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும்போது பாம்பு போன்ற ஏதேனும் எதிரிகள் அதை உண்ண வந்தால், தாயே அந்த முட்டைகளை விழுங்கி விடும். இழப்பது என்றான பிறகு தனக்கே அந்தச் சத்து தனக்கே கிடைக்கட்டும். இதனால் வலுவடைந்து பின்னர் மீண்டும் இனப்பெருக்கம் நிகழ்த்தி முட்டைகளைப் போடலாம் என்பது தாயின் எண்ணமாக இருக்கும். ஆனால், அதிர்ச்சிகரமாக ஒரு சில பறவை இனங்கள், தாங்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்ய தன் குழந்தையை தடையாக இருக்கும் என அதைக் கொன்று விடும் நிகழ்வுகள்கூட நிகழ்வது உண்டு.

பாம்பு முட்டை

ஒரு சில மீன் வகைகள் ஏன் இதைச் செய்கின்றன என்பது இதனைவிட ஒரு சுவாரஸ்யமான விஷயம். முட்டைகள் இட்ட பிறகு, அனைத்து முட்டைகளும் உடைந்து மீன் குஞ்சுகள் வெளியே வரும் வரை மீண்டும் இனப்பெருக்கம் செய்யாது. ஒருவேளை அனைத்து முட்டைகளும் உடையும் முன்பே தாய்க்கு இனப்பெருக்கம் செய்யும் ஆசை வந்தால், உடையாத முட்டைகளை அதுவே விழுங்கி விடும். முட்டைகள் இல்லாததைக் கண்டு, ஆண் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய முன் வரும். 

மொத்தத்தில் வளங்கள், ஆற்றல் மற்றும் வாய்ப்புகளை அதிகரிக்கவும், அளவான குடும்பத்தை வைத்துக் கொண்டு தன் சந்ததிகளை மகிழ்வுடன் வாழச் செய்யவும் விலங்குகள் இவ்வாறான கொடூரச் செயல்களைச் செய்கின்றன. இது இயற்கையிலேயே அதன் ஜீன்களில் பதிந்துவிட்ட விஷயம். அதை மாற்றுவது கடினம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்