Published:Updated:

வேலை நிறுத்தம்: பிரதமரின் கோரிக்கையை நிராகரித்தது ஏ.ஐ.டி.யூ.சி.

Vikatan Correspondent
வேலை நிறுத்தம்: பிரதமரின் கோரிக்கையை நிராகரித்தது ஏ.ஐ.டி.யூ.சி.
வேலை நிறுத்தம்: பிரதமரின் கோரிக்கையை நிராகரித்தது ஏ.ஐ.டி.யூ.சி.
வேலை நிறுத்தம்: பிரதமரின் கோரிக்கையை நிராகரித்தது ஏ.ஐ.டி.யூ.சி.

புதுடெல்லி: நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற  பிரதமர் மன்மோகன் சிங்கின் கோரிக்கையை ஏ.ஐ.டி.யூ.சி. நிராகரித்துவிட்டது.

விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற 20 மற்றும் 21 ஆம் தேதி நாடு  தழுவிய கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்திற்கு 11 தொழிற்சங்கங்கள் அழைப்பு  விடுத்துள்ளன.

இந்த வேலை நிறுத்தத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், வேலை நிறுத்த  முடிவை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, தொழிற்சங்க தலைவர்களுக்கு  பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தார்.

##~~##
ஆனால் பிரதமரின் இந்த கோரிக்கையை ஏ.ஐ.டி.யூ.சி. நிராகரித்துவிட்டது.
இதுதொடர்பாக குருதாஸ் தாஸ்குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,"வேலை  நிறுத்தத்தை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கள் கோரிக்கைகளை  அரசு ஏற்கும்வரை வேலை நிறுத்தம் குறித்து மறுபரிசீலனை செய்வதில்லை என்ற  நிலையில் நாங்கள் மிகத் தெளிவாக உள்ளோம்.
வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அறிவிப்பதில் பிரதமர் இவ்வளவு  தாமதமாக முடிவெடுத்தது ஏன்? என்பது புரியவில்லை. நிச்சயமாக அரசுடன்  பேச்சுவார்த்தை நடத்துவோம்.
ஆனால், அதற்கு முன்னதாக அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும் ஆலோசித்து,  இவ்விவகாரத்தில் அவர்களின் நிலை என்ன? என்பதையும் அறிந்துகொள்வோம்.
எங்களை சந்திக்கும்படி அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ள பிரதமர், அதனை இவ்வளவு  தாமதமாக செய்தது ஏன்? பிரதமரின் அறிவுப்புக்கு நான் கூறும் ஒரே பதில் வேலை  நிறுத்தத்தை கைவிட முடியாது என்பதாகதான் இருக்கும்" என்றார்.