Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

* கானுயிர் புகைப்படக் கலையின் ஆஸ்கர் எனக் கருதப்படும் விருது, பிபிசி-யின் வைல்ட் லைஃப்

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போட்டோகிராஃபர் விருது. 90 நாடுகளில் இருந்து 50 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்த ஆண்டுக்கான போட்டியில், பெருமைக்குரிய இந்த விருதை வென்றுள்ளார் மும்பையைச் சேர்ந்த நயன் கனோல்கர். அவருடைய `The Alley cat' என்ற புகைப்படத்துக்கு இந்தப் பரிசு கிடைத்திருக்கிறது. மும்பையின் சுற்றுப்புறங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் சுற்றும் சிறுத்தையை, நான்கு மாதங்கள் தேடி அலைந்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார் நயன். மகிழ்ச்சி!

இன்பாக்ஸ்

* ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பைவிட அவரது ஒன்றரை வயது பேரனின் சொத்து மதிப்பு அதிகம் என்பதுதான் தெலுங்கு உலகில் பரபரப்புப் பட்டாசு. மூன்றாவது முறையாக முதலமைச்சராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் சொத்து வெறும் 3.74 கோடி ரூபாய்தான் என, கணக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், சந்திரபாபு நாயுடுவின் பேரன் நர தேவான்ஷின் சொத்து மதிப்பு 11 கோடி ரூபாய். நல்லா சொல்றாங்கப்பா டீடெய்லு!

இன்பாக்ஸ்

* அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வமான கடைசி பார்ட்டியை நடத்தி முடித்திருக்கிறது பராக் ஒபாமா - மிச்சேல் ஜோடி. பார்ட்டியை கலர்ஃபுல்லாக்கி உடையால் வைரல் ஆனவர் மிச்சேல் ஒபாமா. பார்ட்டியின் சிறப்பு விருந்தினர்களாக இத்தாலி பிரதமரும் அவரது மனைவியும் வர, சர்ப்ரைஸாக இத்தாலிய உடையில் மிச்சேல் வர... அசந்து மிரண்டது கூட்டம். உடையின் விலை ஜஸ்ட் எட்டு லட்சம் ரூபாய்தானாம். நீங்க நடத்துங்க!

இன்பாக்ஸ்

* ``பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஆவதுதான் எனது லட்சியம். பெனாசிர் பூட்டோ எப்படி இரண்டு முறை பிரதமர் பதவி வகித்து பெண்களுக்கு நன்மை செய்தாரோ, அவரைப் போன்று நானும் சிறுமிகள் மற்றும் பெண்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பேன். இதுமட்டும் அல்லாமல், உலக அளவில் சிறுமிகள் மற்றும் பெண்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் என் முழுக் கவனத்தையும் செலுத்துவேன்'' என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார் மலாலா யூசுஃப்சாய். ஆனால், அவர் பெனாசிர் பூட்டோவைப் புகழ்ந்து பேசியிருப்பதால், `அவர் எங்கள் கட்சியில்தான் சேருவார்' என பாகிஸ்தான் மக்கள் கட்சியும், `அவருக்கு பிரதமர் நவாஸ் ஷெரிஃபைப் பிடிக்கும்' என ஆளும் கட்சியும் மோத ஆரம்பித்துவிட்டன. அரசியல் ஆட்டம் ஆரம்பம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism