க்ளாட்ஸ், பலாசோ, மேக்ஸி... சம்மருக்கேற்ற உடைகள்! #Fashion | Palazzo skirts culottes... summer dresses!

வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (14/05/2018)

கடைசி தொடர்பு:12:39 (14/05/2018)

க்ளாட்ஸ், பலாசோ, மேக்ஸி... சம்மருக்கேற்ற உடைகள்! #Fashion

ஒரே மாதிரியான ஆடை அணிபவர்கள் மாற்றம் செய்ய விரும்பினால் அதுக்கு சம்மர்தான் சரியான நேரம்.

க்ளாட்ஸ், பலாசோ, மேக்ஸி... சம்மருக்கேற்ற உடைகள்!  #Fashion

தீப்திடித்துக் கொளுத்தும் வெயில் ஒருபுறம், அதற்கேற்ற ஃபேஷன் உடைகள் மறுபுறம் என இந்த சம்மர் வழக்கம்போல வெளுத்து வாங்குகிறது. அவை என்ன என்கிற செய்தியோடு நம்மிடம் பேசினார், சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட், தீப்தி.

''பொதுவாக, பெண்கள் எப்போதும் வழக்கமான ஒரு டிரஸ்ஸிங் ஸ்டைலையே ஃபாலோ செய்துகொண்டு இருப்பார்கள். அது அவர்களுக்கு வசதியான ஆடையாக இருக்கலாம். அதையே சம்மரிலும் அணிய முடியாது என்பதுதான் நிதர்சனம். கோடைக்காலத்தில் வியர்வை அதிகமாகச் சுரக்கும். சரும நோய்களுக்கான காலமும்கூட. இந்த நேரத்தில் இறுக்கமான காட்டன் சல்வார் அணியும்பட்சத்தில், சரும பாதிப்புகள் அதிகமாகும். மேலும், ஒரே மாதிரியான ஆடை அணிபவர்கள் மாற்றம் செய்ய விரும்பினால், அதுக்கு சம்மர்தான் சரியான நேரம். ஒவ்வொரு வருடமும் சம்மரில்  ஒரு புது ட்ரெண்ட் வந்திறங்கும். இந்த வருடம்  மேக்ஸி முதல் க்ளாட்ஸ் வரை நிறைய ஆடைகள் ட்ரெண்டாக வந்திருக்கின்றன.

 

 

க்ளாட்ஸ்: culottes

க்ளாட்ஸ்

சில ஆண்டுகளுக்கு சம்மரில் ட்ரெண்டாக இருந்த க்ளாட்ஸ், தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ளது. பார்க்க த்ரீ ஃபோர்த் பேன்ட் போலிருக்கும். அலுவலகத்துக்கு க்ளாட்ஸ் பேன்ட் அணிந்துசெல்ல விரும்புகிறவர்கள், காட்டன் ஷர்ட்டை அணியலாம். பார்ட்டி, டிராவல் செய்ய விரும்புகிறவர்கள், க்ராப் டாப்பின் மேல் லாங் ஓவர் கோட் அணிந்துசெல்லலாம். இந்த டைப் ஆடைகளுக்கு அணிகலன்கள் அவசியமில்லை. அதேநேரம், ஹைஹீல்ஸ், கட் ஷூ போன்ற பொருத்தமான காலணிகள் அவசியம். 

லாங்  ஸ்கர்ட்ஸ்:

லாங் ஸ்கர்ட்ஸ்

லாங் எத்னிக் காட்டன் ஸ்கர்ட் சம்மருக்கு ஏற்ற ஸ்டைலான லுக்கை கொடுக்கும். லாங் காட்டன் குர்தி அணிவது, அலுவலகத்துக்கு பெஸ்ட் சாய்ஸ்.  ஃபார்ட்டிக்குச் சென்றால், கிராப் டாப், ஸ்லீவ்லெஸ் டாப், ஹை காலர் நெக் ஷர்ட் என அவரவரின் உடல்வாக்குக்கு ஏற்ப தேர்வுசெய்து அணியலாம். இதற்கு, லாங் நெக் அக்சசரீஸ் பொருத்தமாக இருக்கும். ஹீல்ஸ் பெஸ்ட் சாய்ஸ். 

மேக்ஸி:

நயன்தாரா முதல் தீபிகா படுகோன் வரை செலிபிரட்டிகளின் சம்மர் சாய்ஸ், மேக்ஸி. பார்க்க லாங் கவுன் போலிருக்கும் இந்த ஆடை, எல்லா இடத்துக்கும் பொருந்தி போகும். இக்கட் மற்றும் பிரின்டட்  லைட் கலர் மேக்ஸி, சம்மரிலும் உங்களை கூலாக  காட்டும்.

பலாசோ: Palazzo

பலாசோ

அநேக கல்லூரி பெண்களின் சாய்ஸ், பலாசோதான். ட்யூனிக் டாப்ஸ், ஷார்ட் குர்தி, சல்வார் டாப்ஸ் இதற்கு மேட்ச்சாக இருக்கும். இதற்கு ட்ரெண்ட்லியான நெக்பீஸ், ஹேண்ட்பீஸ்கள் அணிந்துகொண்டால், ஸ்மார்ட் லுக் கிடைக்கும்.

குர்தி - லெங்கிங்ஸ்:

உடைகள் - குர்தி லிங்கிங்ஸ்

எல்லா வயதினருக்கும் குர்தி, லெக்கின்ஸ் பொருத்தமாக இருக்கும். லைட் கலர்ஸ் குர்தி அதற்கு கான்ட்ராஸ்ட் லெக்கின்ஸ், ஹை போனிடெய்ல், சிம்பிள் இயர் ரிங், லாங் ஆக்ஸிடைஸ்டு நெக்பீஸ், திக் வார் வாட்ச் அணிந்தால் நீட் லுக் கிடைக்கும்

பொதுவாக, கோடைக்காலத்தில் வெளிர் நிற காட்டன் ஆடைகளைத் தேர்வுசெய்து அணிவது நல்லது. ப்ளோரல் டிசைன் ஆடைகள், நீட் லுக் கொடுக்கும். க்ளிட்டர் ஜமிக்கி வைத்த ஆடைகளைத் தவிர்த்துவிடுங்கள். ஸ்லீவ் லெஸ் போட விரும்பாதவர்கள், ஸ்ரக் வாங்கிப் பயன்படுத்தலாம். புதுவிதமான ஆடைகளைத் தேர்வுசெய்து அணிந்து பாருங்கள். இனி நீங்களும் ட்ரெண்ட் செட்டர்களே.

 


டிரெண்டிங் @ விகடன்